இளைஞர்களே, உங்கள் நாக்கிற்கு ஆபத்தாம்..! நாக்கை குறி வைத்து தாக்கும் நாக்கு புற்றுநோய்..!

பெரிதும் பாதிக்கும் நோய்..!

சில முக்கிய ஆராய்ச்சிகள் புற்றுநோயை பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறுகின்றது. இன்று அதிகம் பெருகி வரும் நோய்களில் இந்த புற்றுநோய் முதன்மையான இடத்தில இருக்கின்றதாம். எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முடிந்தளவிற்கு எளிதாக குணப்படுத்தி விடலாம். ஆனால், இந்த புற்றுநோய் அப்படி கிடையாது.

வெளிப்படாத புற்றுநோய் செல்கள்..!

பொதுவாக புற்றுநோய் என்பது புற்றுநோய் செல்களால் உருவாகிறது. இந்த செல்கள் பல நாட்கள் நம் உடலில் இருந்து கொண்டே நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். அதாவது, இவை நம் உடலில் உருவாக தொடங்கும் போது நமக்கு இதனை பற்றிய அறிகுறி தென்படாதாம். பல நாட்களுக்கு பிறகே இவை உடலில் வேறு சில அறிகுறிகளை தந்து உணர்த்துமாம்.

நாக்கு புற்றுநோய் எப்படி..?

புற்றுநோய் பல வகையாக உள்ளன. அவற்றில் ஒரு வகைதான் இந்த நாக்கு புற்றுநோய். இவை நாக்கில் புற்றுநோய் செல்களை உருவாக்கி கட்டிகளாக மாறும். இது கிட்டத்தட்ட தொண்டை புற்றுநோய் போன்றதுதான். சிலருக்கு நாக்கின் மேல் புறத்திலும், சிலருக்கு நாக்கின் உட்புறத்திலும் இவை ஆரம்ப நிலையில் வளர கூடும். மேலும் இந்த புற்றுநோய், அதிக மது மற்றும் புகை பழக்கம் இருக்கும் இளைஞர்களை பெரிதும் தாக்குமாம்.

அறிகுறிகள் என்னென்ன..?

நாக்கு புற்றுநோய் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா இல்லையா..? என்பதை இந்த அறிகுறிகள் உணர்த்துகின்றன.

– நாக்கில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் திட்டுகள் இருக்கும்

– நாக்கில் வீக்கம்

– வாய் உட்புறத்தில் சிறிது சிறிது புண்கள்

– நாக்கில் இருந்து ரத்தம் வடிதல்

– உணவு சாப்பிடும்போது வலி ஏற்படுவது

எந்தெந்த நிலைகள் உள்ளன..?

எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதற்கென்று ஒரு சில நிலைகள் எப்போதும் மருத்துவர்களால் கருதப்படும். இந்த நாக்கு புற்றுநோயிலும் அப்படி சில நிலைகள் உள்ளன. நாக்கில் கட்டி உருவாக தொடங்கி விட்டால் அதனை T1 நிலை என்பர். இதுவே அவை முற்றி பெரியதாகி விட்டால் T4 நிலை என்பர். இன்னும் புற்றுநோய் பரவவில்லை என்றால் N நிலையாகும். உடலில் வேறு உறுப்புகளிலும் இந்த புற்றுநோய் பரவி உள்ளதென்றால் அதனை M நிலை எனலாம்.

புற்றுநோயிக்கு காரணம்..?

நாக்கு புற்றுநோய் ஏற்பட சில முக்கிய காரணிகளே உள்ளன. இருப்பினும் சிலருக்கு இவை உருவாகின்ற காரணம் தெரியாமலேயே இருக்குமாம். கீழ்கண்டவைத்தான் இந்த நாக்கு புற்றுநோய் வர காரணமாகும்.

– புகை பிடித்தல்

– மது அருந்துதல்

– வாய்வழி உடலுறவு கொள்ளுதல்

– வெற்றிலை போடும் பழக்கம்

– பாலியல் ரீதியான நோய்களால்

– குடும்பத்தில் யாருக்கேனும் நாக்கு புற்றுநோய் இருந்தால்

எவ்வாறு கண்டறிவது..?

இன்று வளர்ந்துள்ள மருத்தவ துறையின் வளர்ச்சி அதி அற்புதமானது. எண்ணற்ற கண்டுபிடிப்புகள் இது போன்ற நோய்களை கண்டறிய வந்து கொண்டே இருக்கிறது. நாக்கு புற்றுநோயை biopsy என்பதன் மூலம் கண்டறியலாம். இதற்கு incisional biopsy என்ற முறையே பிரத்தியேகமாக மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும், CT scan அல்லது MRI மூலம் இவை எந்த அளவிற்கு உடலில் பரவி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எவ்வாறு தடுப்பது..?

எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதனை வருமுன் காத்தலே மிகவும் சிறந்த வழியாகும். நாக்கு புற்றுநோயை தடுக்கவும் சில வழிகள் இருகின்றன.

– புகை பிடிக்காமல் இருப்பது

– மது அருந்தாமல் இருப்பது

– வெற்றிலை பழக்கம் தவிர்த்தல்

– வாய்வழி உடலுறவு கொள்ள கூடாது

– பாதுக்கான உடலுறவு வைத்து கொள்ளுதல்

– ஒரு நாளைக்கு 2 முறை பல் துலக்குதல்

கொடிய வகையா..?

இது சற்றே கொடிய வகை புற்றுநோயாக கருதப்படுகிறது. உங்கள் வாயில் புற்றுநோயிற்கான அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இந்த வகை புற்றுநோயை ஆரம்ப நிலையில் மட்டுமே குணப்படுத்த இயலும். இல்லையேல் உயிர் இழப்பு நேர கூடும். அத்துடன், மருத்துவர்கள் கூறும் வழி முறைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.

சீரான ஆரோக்கியம்…

உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தி இருந்தாலே அது எந்த வகை நோய்களையும் உடலில் ஏற்படுத்தாது. வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும் போதே அது பலவித நோயிற்கான வாசலாக நம் உடல் மாறுகிறது. எனவே, அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவை உண்டு மகிழ்வான வாழ்வை நலமோடு வாழுங்கள் நண்பர்களே.

%d bloggers like this: