Daily Archives: செப்ரெம்பர் 2nd, 2018

அழகிரி அவுட்… அடுத்து கனிமொழி?

மு.க.ஸ்டாலினுக்கு, தலைவர் மகுடம் சூட்டப்பட்டுவிட்டது. பொருளாளர் துரைமுருகனுடன் சேர்ந்து, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இதெல்லாம் திரைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செய்திகள். இப்படி திரைக்கு வராத செய்திகள் உம்மிடம் தானே இருக்கும்… கொஞ்சம் எடுத்துவிடும்!’’
– அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாரிடம் கொக்கி போட்டோம். அர்த்தம் பொதிந்த புன்னகையைத் தவழவிட்டவர், ‘‘ஸ்டாலினின் காய் நகர்த்தலில், அழகிரி எப்போதோ வெட்டுப்பட்டு வெளியேறிவிட்டார். இப்போது கனிமொழிக்கு எதிரான வியூகம் வகுக்கப்படுகிறது’’ என்று சொன்னார்.

Continue reading →

கருவிலேயே செய்யலாம் கரெக் ஷன்!

குறைபாடு உள்ள குழந்தை உருவாவது, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. கரு உருவாகும் போதே குறைபாடுகள் இருந்தால், அல்ட்ரா சவுண்டு கருவிகளால், எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது.
கருவின் இதயத்தில் உள்ள குறை, கரு உருவான, 13வது வாரத்திலும்; கரு வளர்ச்சியில் ஏதேனும் பெரிய அளவில் குறைபாடு இருந்தால், 18வது வாரத்திலும் கண்டுபிடிக்க இயலும். நுணுக்கமாக இருக்கும் குறைகளை, 22வது வாரத்தில், கண்டுபிடித்த விடலாம்.

Continue reading →

அலைபேசி குழந்தைகளின் மாற்றாந்தாய்!

அலைபேசி குழந்தைகளுக்கு எவ்வளவு துாரம் தாக்கத்தை ஏற்படுத்தும்
முன்பு நிலாவை காட்டி தாயார் கதை சொல்லி சுவையான, ஆரோக்கியமான உணவை சமைத்து ஊட்டியதால் குழந்தைகள் விரும்பி உண்டனர். குழந்தைக்கு நல்ல கவனிப்பு திறனும், புரிந்து கொள்ளும் திறனும் இருந்தது. ஆனால் இன்று போதிய நேரத்தை குழந்தைகளிடம் செலவிடாமலும், குழந்தைக்கு சத்தான உணவுகளை கொடுக்காததாலும், குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய் விட்டது. அலைபேசியை காட்டி உணவு ஊட்டுவதால் குழந்தைக்கு உணவின் சுவை அறியாமல் போவதால் குழந்தைகள் சரிவர உண்பதில்லை. மேலும் தாய், குழந்தையுடன் செலவழிக்கும் நேரம் குறைகிறது. இதனால் குழந்தைக்கு மாற்றுத்தாயாக அலைபேசி விளங்குகிறது.

Continue reading →

கல்விக்கான செலவு எந்த நாட்டில் மிகவும் அதிகம்? – ஓர் பார்வை

வசந்த காலம் என்றால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் புது கல்வியாண்டின் தொடக்கமாக இருக்கும். ஆனால் யாரவது அமெரிக்கா, ரஷ்யா, ஐஸ்லாந்து அல்லது சிலி போன்ற நாடுகளில் வசிப்பவராக இருந்தால் சில விஷயங்கள் முற்றிலும் மாறானதாக இருக்கும்.

முதலில் சில கேள்விகள்.
Continue reading →

கொத்தமல்லி எப்படி ஆண்மையை அதிகரிக்கும் தெரியுமா?

இயற்கை நமக்கு அளித்துள்ள அனைத்து காய்கறிகளுமே ஒரு மூலிகைதான். ஆனால் அவற்றில் சிலவற்றை மட்டுமே நாம் பயனுள்ளதாக உபயோகித்து கொண்டிருக்கிறோம். ஆனால் பல மூலிகைகள் அதன் மருத்துவ
Continue reading →

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள்

கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி. கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்களை இன்று பார்க்கலாம்.

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள்

1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.
2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.
3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.
4. சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
5. கிருஷ்ணர் தமிழ்நாட்டில் கண்ணன் என்றும் வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.
6. கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு.
7. கிருஷ்ண இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.
8. கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.
9. கிருஷ்ண ஜெயந்தியன்று குழந் தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ் ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.
10. கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள்.
11. கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.
12. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.
13. கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா வனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.
14. கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

15. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற கீதகோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.

16. கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர் – சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
17.கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். அரசியல் வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.
18. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.
19. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும்.
20. தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.
21. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.
22. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
23. பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.
24. கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
25. ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணரின் அருள் பார்வை நம் மீது படும்.
26. அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.
27. அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் தனது படைகளுக்கு முன்பு கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.
28. யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ் தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.
29. சிலப்பதி காரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டி யுள்ளனர்.
30. ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூமி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.