ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்களா? இத படிங்க முதல்ல!

காப்பீட்டாளரின் இறப்பின் போது இறப்பு பலன்கள் வழங்குவதாக உறுதியளிக்கும் ஒப்பந்தம் தான் ஆயுள் காப்பீட்டு திட்டம். ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் அடிப்படையாக இரு வகை உள்ளன. ஒன்று

பாரம்பரிய வாழ்நாள் ஆயுள் காப்பீடு, மற்றொன்று கால அளவுள்ள ஆயுள் காப்பீடு. கால அளவுள்ள ஆயுள் காப்பீட்டில் எந்தவொரு சேமிப்போ அல்லது லாபமோ இல்லாத உண்மையான ஆயுள் காப்பீடாக இருப்பதால், இதில் தவணைத்தொகை மிகவும் குறைவாக இருக்கும். வாழ்நாள் காப்பீடு என்பது உங்கள் ஆயுள் முழுமைக்கானது என்பதால் இதில் முதிர்ச்சி என்பது தீர்மானிக்கப்படாது. காப்பீட்டுதாரர் தங்களின் இறப்பு வரை தொடர்ந்து தவணைத்தொகை செலுத்தி வந்தால், அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் குடும்பத்தாருக்கு வழங்கப்படும்.

எந்தவகை நிதியைத் தேர்ந்தெடுப்பது என்பது மட்டுமின்றி, காப்பீட்டின் வேறு சில காரணிகளையும் கருத்தில் கொண்டு ஆயுள் காப்பீட்டு திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். காப்பீட்டைத் திரும்ப ஒப்படைக்கும் போது ஏற்படும் விளைவுகள் முதல் காப்பீடு ஒப்பந்தத்தைக் காப்பீட்டு நிறுவனம் மதிக்காதது வரை, 
உங்களை திடுக்கிடச் செய்யும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் 10 அம்சங்களை இங்கு காணலாம்.

காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவது என்பது ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வது?

நீங்கள் ஒரு காப்பீட்டு திட்டத்தை வாங்கும் போது அத்திட்டத்தை முழுவதுமாக ஒப்புக்கொள்கிறீர்கள். அந்த ஒப்பந்தத்தை வாங்கும் போது ஒரு முதிர்ச்சி காலத்தை ஒப்புக்கொண்டீர்கள் எனில், அந்த கால அளவையோ அல்லது ஆண்டுகளையோ மாற்ற முடியாது. எடுத்துக்காட்டாக, நீங்கள் 60 ஆண்டு கால அளவுள்ள ஒரு காப்பீட்டு திட்டத்தை வாங்குகிறீர்கள் எனில், அதன் முதிர்ச்சியடையும் காலத்தை மாற்றவே முடியாது. ஆனாலும், நீங்கள் 80 ஆண்டு கால அளவுள்ள மற்றொரு காப்பீட்டை வாங்க முடியும்.

காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து கடன்

உங்களால் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து கடன் பெற முடியும். அதற்கான வட்டிவிகிதம் என்பது எப்போது நீங்கள் கடன் வாங்குகிறீர்கள் என்பதை பொறுத்து காப்பீட்டு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்படும். வட்டிவிகிதம் என்பது ஒரு அட்டவணையுடன் இணைந்தது. எடுத்துக்காட்டாக, 10 ஆண்டுக்கால லாபம் அல்லது வங்கிகளின் வட்டிவிகிதம் என்பது இந்திய ஆயுள் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால்(IRDAI) அங்கீகரிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதம் என்பது காப்பீட்டு நிறுவனங்களுக்கிடையே வேறுபடும்.

திரும்ப ஒப்படைக்கும் போது கட்டணம்

குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின்பு நீங்கள் காப்பீட்டை திரும்ப ஒப்படைத்தால், உங்களின் காப்பீட்டு திட்டம் மற்றும் அதன்அம்சங்களை கருத்தில் கொண்டு ஒரு தொகையை காப்பீட்டு நிறுவனம் கழித்துக்கொள்ளும். இந்த திரும்ப ஒப்படைக்கும் மதிப்பு என்பது நீங்கள் செலுத்திய தவணைத்தொகையுடன் நேரிடையாக சம்பந்தப்படவில்லை என்றாலும், அலகுகளுடன் இணைந்த திட்டத்தில் அலகின் மதிப்பு அல்லது பாரம்பரிய திட்டத்தில் சேகரித்த பலன்களைச் சார்ந்தது . உங்களிடம் அலகுகளுடன் இணைந்த காப்பீட்டு திட்டம் இருந்தால், 5 ஆண்டுகளுக்கு பின் திரும்ப ஒப்படைக்கும் மதிப்பு பூஜ்ஜியம் என்பதால், அலகின் மொத்த மதிப்பும் கிடைக்கும். பாரம்பரிய திட்டத்தில் , செலுத்தபட்ட பலன்களில் ஒரு குறிப்பிட்ட மதிப்பை தள்ளுபடி செய்து பெறும் மதிப்பு திரும்ப ஒப்படைக்கும் மதிப்பு ஆகும். காப்பீட்டு திட்டத்தை பொறுத்து மாறுபடும் இந்த திரும்ப ஒப்படைக்கும் மதிப்பு, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நம்பிக்கை

காப்பீட்டு திட்ட ஒப்பந்தம் என்பது முதன்மையாக ஏராளமான நம்பிக்கையைப் பொறுத்தது. உங்களின் தனிப்பட்ட தகவல்கள், தற்போது உடல் நிலை மற்றும் கடந்தகால மருத்துவ பிரச்சனைகள் என அனைத்தையும் வெளிப்படுத்துவது அவசியம். தேவையான தகவல்களை சரியாக தராமல் இருந்தால், உங்களின் காப்பீட்டு பணத்தை திரும்ப பெறும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். உங்களின் காப்பீட்டு திட்ட ஒப்பந்தம் என்ற ஆவணத்தில், எவற்றை சேர்க்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்ற தகவல்கள் இருக்கும்.

ஒப்பந்தத்தை மறுத்தல்

தற்போதைய காப்பீட்டு திட்ட சட்டத்தின் 45வது பிரிவின் படி, புதிய காப்பீட்டு திட்டத்தை எடுத்து 3ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தத்தை மறுக்க அனுமதிக்கப்படுவதில்லை. காப்பீட்டுதாரர் மறுமதிப்பீடு செய்ய வாய்ப்பிருந்து, முதல் காப்பீட்டுக்கு பின்னர் 2வது காப்பீடு எடுத்திருந்தால், கிளைம் செய்வது என்பது முற்றிலும் விதிமுறைகளைப் பொறுத்தது. காப்பீட்டை உறுதிப்படுத்த நல்ல உடல்நலத்துடன் உள்ளதை உறுதியளிக்க வேண்டும்.

மானிய காப்பீட்டு திட்டம்

ஆயுள் காப்பீட்டில் உள்ள மானிய காப்பீட்டு திட்டம் கடன் வசதியை வழங்கும் நிலையில், அலகுகளுடன் இணைந்த மற்றும் கால அளவுள்ள காப்பீட்டு திட்டங்களில் இந்த வசதி இல்லை. பொதுவாக அங்கீகரிக்கப்படும் கடன் அளவு என்பது திரும்ப ஒப்படைக்கும் மதிப்பிற்கு இணையாக இருக்கும். ஆனால் இந்த கடன் மற்றும் திரும்ப செலுத்தும் தவணைத்தொகைக்கும், காப்பீட்டு திட்டத்தின் தவணைத்தொகைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

கடன் திருப்பி செலுத்தவில்லை என்றால் என்ன ஆகும்?

நீங்கள் கடனை திரும்ப செலுத்தவில்லை எனில், அந்ந பணம் காப்பீட்டு பணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

முக்கிய விதி

காப்பீட்டின் முக்கிய விதியாக, காப்பீட்டுத்தொகை உங்களின் ஆண்டு வருமானத்தில் 10 மடங்கு இருக்க வேண்டும்.

கால அளவுள்ள காப்பீட்டு திட்டத்தில், காப்பீட்டுதாரரின் இறப்பின் போது மட்டுமே, வாரிசுதாரர்களுக்கு பணம் வழங்கப்படும். மற்றப்படி இதில் முதிர்ச்சியடையும் பலன்கள் எதுவும் கிடையாது.

வாரிசு நியமிக்கவில்லை எனில் என்ன ஆகும்?

காப்பீடு எடுக்கும் போது வாரிசுதாரர்களை நியமிக்கவில்லை எனில், உங்களின் மறைவிற்குப் பிறகு சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு அதன் பலன்கள் சென்றடையும். அதை உறுதிப்படுத்துவதற்காக, காப்பீட்டு நிறுவனங்கள் வாரிசு சான்றிதழை சமர்ப்பிக்க கோரலாம்.

%d bloggers like this: