Advertisements

முடி இப்படி கொத்து கொத்தா கொட்டுதா? சர்க்கரைவள்ளி கிழங்கு பூசுங்க உடனே சரியாகிடும்

கூந்தல் உதிர்தல் என்பது எல்லோருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. இதனால் நாம் லேசாக தலை வாரினால் கூட சீப்பில், ஆடையில், படுக்கை தலையணையில் என்று எங்கு பார்த்தாலும் முடி கொட்டிப் கிடப்பதை பார்க்க முடியும்.

இதை அப்படியே கண்டு கொள்ளலாமல் விட்டு விட்டால் நமது அழகிய கூந்தலைக் கூட இழக்க நேரிடலாம். ஒரு நாளைக்கு 50-100 வரையிலான முடிகள் உதிர்வது இயல்பான விஷயம். ஆனால் அதே சமயத்தில் அதற்கும் அதிகமான முடி உதிர்ந்து போவது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.

காரணங்கள்

சில சமயங்களில் இறுக்கமான ஹேர் ஸ்டைல், போனி ஸ்டைல், அதிக வெப்பத்தில் கூந்தலை காய வைக்கும் கருவியை பயன்படுத்துதல், ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தாமல் இருத்தல், பிளவுபட்ட முடியின் நுனியை வெட்டாமல் இருத்தல், அதிக கூந்தலை அலசல், மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்ற பிரச்சினைகளால் கூந்தல் உதிர்தல் ஏற்படும்.

அழகு

கூந்தல் தான் நம் முகத்திற்கு அழகு சேர்க்கும் முக்கியமான ஒன்றாகும். எனவே அதை பராமரிப்பது மிக முக்கியமானதும் கூட. சலூன் போய் உங்கள் பணத்தை செலவழிப்பதை விட வீட்டில் இருந்த படியே உங்கள் கூந்தல் உதிர்தல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இதற்கு இயற்கை முறையான சர்க்கரை வள்ளிக் கிழங்கு மாஸ்க் ஒன்றே போதும். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

ஊட்டச்சத்துக்கள்

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் விட்டமின் ஏ உள்ளது. இது தான் நம் கூந்தல் செல்களின் வளர்ச்சிக்கு தேவையான போஷாக்காகும். மேலும் இதில் ஜிங்க், காப்பர், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், நியசின் போன்றவைகளும் உள்ளன. விட்டமின் சி, ஈ, பீட்டா கரோட்டீன் போன்ற கூந்தலை போஷாக்குடன் வைப்பதற்கான அனைத்தும் இதில் காணப்படுகின்றன.

வறண்ட கூந்தல்

வறண்டு போய் உடையும் கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை இது கொடுக்கிறது. இதிலுள்ள விட்டமின் ஏ இயற்கையாகவே தலையில் சீபம் எண்ணெய்யை தூண்டி கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்கிறது. மேலும் இதில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு நல்ல பொலிவை தருகிறது. எனவே உங்கள் கூந்தல் உதிர்வை தடுக்க இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு மாஸ்க் மிகவும் சிறந்தது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு மாஸ்க்

இந்த மாஸ்க் உங்கள் கூந்தல் மென்மையாக, பளபளப்பாக, அடர்த்தியாக போஷாக்குடன் வளர உதவுகிறது.

தேவையான பொருட்கள்

1 கப் கொழுப்புள்ள யோகார்ட்

1 முழு சர்க்கரை வள்ளிக் கிழங்கு

1 டேபிள் ஸ்பூன் தேன்

செய்முறை

சர்க்கரை வள்ளிக் கிழங்கின் தோலை நீக்கி சீவிக் கொள்ளுங்கள். பிறகு அது மென்மையாகும் வரை வேக வையுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு அதை ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள். நன்றாக அதை கையை வைத்து பிசைந்து கொள்ளவும். பிறகு அதனுடன் தேன் கலந்து கொள்ளவும். யோகார்ட் சேர்க்கவும். நன்றாக எல்லாவற்றையும் ஒன்றாக கலக்குஙகள்.

பயன்படுத்தும் முறை

உங்கள் கூந்தலை சிறு சிறு பகுதிகளாக பிரித்து கொள்ளுங்கள். வெதுவெதுப்பான இந்த மாஸ்க்கை உங்கள் வேர்க் கால்களிலிருந்து நுனி வரை அப்ளே செய்யுங்கள். வெதுவெதுப்பான மாஸ்க் கொஞ்சம் உங்கள் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். நன்றாக அப்ளே செய்ததும் பிளாஸ்டிக் கேப் போட்டு கவர் செய்து கொள்ளுங்கள். அதன் மேல் ஒரு துண்டையும் சுற்றி கட்டிக் கொள்ளுங்கள். இது வெதுவெதுப்பான மாஸ்க் வெப்பம் கொஞ்சம் நேரம் தலையில் இருக்க உதவும். இதை 1 மணி நேரம் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசி விடுங்கள். இந்த மாஸ்க்கை மாதத்திற்கு இரண்டு முறை போட்டு வந்தாலே போதும் ஆரோக்கியமான அழகிய கூந்தலை பெறலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டீன் கூந்தலுக்கு போஷாக்கை தருகிறது. பாதிக்கப்பட்ட கூந்தலை சரி செய்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் இயற்கையான பொலிவை கொடுக்கிறது.

யோகார்ட்

இதில் கலந்துள்ள யோகார்ட் புரோட்டீன் கூந்தலுக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது. மேலும் யோகார்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் தலையை சுத்தப்படுத்தி விடுகிறது. இதனால் தலையில் உள்ள பொடுகு, இறந்த செல்கள் நீங்கி கூந்தல் வளர்ச்சி மேம்படுகிறது.

தேன்

தேன் ஒரு இயற்கையான மருந்தாகும். இது கூந்தல் இழந்த ஈரப்பதத்தை மீட்டுத் தருகிறது. மேலும் கூந்தலை மென்மையாக்கி பட்டு போல் ஆக்குகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தலையில் ஏற்படும் அழற்சியை போக்கி கூந்தல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. தலையை சுத்தமாக்கி வேர்க்கால்களை வலுமைபடுத்தி கூந்தலை வளர்ச்சி அடையச் செய்கிறது.

எனவே உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு மாஸ்க் பெரிதும் உதவுகிறது. இதை பயன்படுத்தி பலன் பெறுங்கள். ஆரோக்கியமான கூந்தல் இனி உங்கள் கையில்.

Advertisements
%d bloggers like this: