Advertisements

Daily Archives: செப்ரெம்பர் 17th, 2018

ஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்… கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்!

ய்வுக்காலத்தில் பென்ஷன் கிடைக்கும் என்கிற ஒரே காரணத்துக்காக அரசு வேலைகளைத் தேடிப்போனது அந்தக் காலம். இன்றைக்கு அரசு வேலைகளில்கூட பென்ஷன் இல்லை என்றாகிவிட்டது.   என்.பி.எஸ் எனப்படும் புதிய பென்ஷன் திட்டத்தில் நாமாகச் சேர்ந்து, நமது ஓய்வுக் காலத்துக்கான பென்ஷன் தொகையைச் சேர்த்தால் மட்டுமே உண்டு.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் குறைந்த அளவே பி.எஃப் தொகை பிடிக்கப்படுவதால், அவர்களின் ஓய்வுக் காலத்தில் மிகவும் குறைந்த அளவே பென்ஷன் தொகையைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.

Continue reading →

Advertisements

காலை உணவுக்கு காய்கறிகள்… பார்க்கும்போதெல்லாம் பழங்கள்

காய்கறிகளையும் பழங்களையும்கொண்ட உணவே சரிவிகிதச் சத்துணவாக இருக்கும். இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும் சுலபமான வழிகள் இவை. முயன்று பாருங்கள்.

Continue reading →

மறக்கத் தெரிந்த மனமே… அல்சைமர் அலர்ட்!

செப்டம்பர் 21 உலக அல்சைமர் தினம்

ன்று, வயதானவர்களை  பாதிக்கும் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது அல்சைமர் (Alzheimer) நோய். சாதாரணக் குடிமக்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள்வரை பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகில் அதிக அளவில் மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் 6-வது இடத்திலிருக்கிறது அல்சைமர்.  இந்தியாவில், ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதித்திருக்கும் இந்த நோய் குறித்து போதிய அளவுக்கு விழிப்புஉணர்வு ஏற்படவில்லை.

Continue reading →

குறிஞ்சிப் பூ அரிது… தேன் அதனினும் அரிது!

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரிலும் ஆரளவின்றே சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பு’ என்கிறது குறுந்தொகை.

`அரிதினும் அரிது குறிஞ்சிப் பூ; அதனினும் அரிது அதிலிருந்து கிடைக்கும் தேன்’ என்று சங்க இலக்கியம் கொண்டாடும் சிறப்பு பெற்றது குறிஞ்சித் தேன். உலகில் கிடைக்கும் அனைத்து வகை தேன்களிலும் உயர்வானது இது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ பல்வேறு உயிரினங்களை வாழவைக்கிறது. குறிப்பாக, மனிதர்களின் நோய் தீர்க்கவும் பயன்படுகிறது.

Continue reading →

மாற்று சிகிச்சைக்கு மகத்தான மருத்துவமனை!

இயற்கை மருத்துவம் முக்கியத்துவம் பெற்று வரும் இன்றைய சூழலில் அதுகுறித்து தேவையான தகவல்களைப் பெறவும், அதற்கான பிரத்யேக மருத்துவமனை பற்றித் தெரிந்துகொள்வதும் அவசியம். அந்த வகையில் சென்னை அரும்பாக்கத்தில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை மிகவும் குறிப்பிடத்தகுந்தது. Continue reading →

பெண்களை பாதிக்கும் நோய்கள்

அழகை பாதிக்கும் நரம்பு வியாதிகள்

பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு விஷயம் அழகு. அதிலும் முக அழகுக்கு ரொம்ப அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.  முகத்தில் சின்ன பரு வந்துவிட்டாலே வருத்தப்படுகிறவர்கள் பெண்கள். அழகை பெரிய அளவில் பாதிக்கும் வேறு ஏதாவது பிரச்னை  என்றால் சொல்லவே வேண்டாம், உடைந்து போய் விடுவார்கள்.முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை  சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும் என்கிறார் மருத்துவர் திலோத்தம்மாள். முக  அழகை பாதிக்கும் சில வியாதிகள் பற்றி அவர் நம்மிடம் இங்கே விளக்குகிறார்.

Bells Palsy or Facial palsy Continue reading →