அலுவலக சூழலில் மகிழ்ச்சியுடன் இருக்க இத டிரை பண்ணி பாருங்க!

செய்யும் வேலையை மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் செய்தாலே வெற்றி நிச்சயம் என நம்மைச் சுற்றி இருப்பவர்கள், அலுவலகத்தில் நாம் அடிக்கடி

கேட்டிருப்போம். ஆனால், நம் அன்றாட பணிச் சுமை ஏதேனும் ஒருவிதத்தில் தன்னம்பிக்கையை சிதைத்து மனச் சோர்வை அளித்திடும். நாம் விரும்பித் தேர்ந்தெடுத்த வேலையைக் கூட என்ன வேலைடா இது என்ற மனநிலைக்குக் கொண்டுவந்து விடும். அதிலும், திங்கட்கிழமை வேலை நாட்களில் சொல்லவே வேண்டியதில்லை. விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிடுவோம். இவற்றையெல்லாம் கடந்து நமது வேலையை விரும்பிச் செயலாற்ற, அலுவலகத்தில் மகிழ்ச்சியுடன் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா ?

மகிழ்ச்சியான மனநிலை!

அன்றாடம் அலுவலகத்தில் நமக்கான வேலை எப்போதும் கடினமானதாகவே இருக்கும். அவற்றை பாரம் போல் பார்க்காமல் இதனை என்னால் மட்டுமே செய்ய முடியும் என்ற மனநிலைக்கு முதலில் வர வேண்டும். நம் ஒருவரின் கடினமான மனநிலை, பிற அலுவலர்களையும் பாதித்துவிடும். மேலும், நம் மீதான பார்வையையும் திசை திருப்பிவிடும். எத்தனை வேலைகள் இருந்தாலும் மனதை சற்றும் தளர விடாமல் மகிழ்ச்சியுடன் இருக்கவே முயற்சியுங்கள். குறிப்பாக உங்களை யார் புறம்பேசினாலும் அதனை சற்றும் காதில் வாங்காமல் உங்களுடைய சிறந்த வேலையை மட்டும் வெளிப்படுத்துங்கள். அத்திறமை உங்களை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தும்.

சரியான நேரத்தில்!

அலுவலகத்திற்கு வரும் நரமும் சரி, தங்களுக்கான பணியை முடிக்கும் நேரமும் சரி அதனை சரியாக செய்தாலே எந்த வேலையாக இருந்தாலும் அது எளிதில் முடிந்து விடும். அதுவும் உங்களது மன நிறைவோடு. காலம் தாழ்த்தி அலுவலகத்தில் நுழைந்தவுடன் சீனியர் பணியாளர், மேலாளரிடம் திட்டு வாங்காமல் பணியைத் துவங்குவதால் நம் உச்சாகம் மேலும் வலுப்பெற்று அந்த நாள் முழுவதுமே ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.

பணியை அறிந்து செயல்படுதல்!

cங்களுக்கான வேலையில் மட்டும் முடிந்தவரை கவனம் செலுத்த வேண்டும். மாறாக அருகில் இருப்பவர் என்ன செய்கிறார், சுற்றுவட்டாரத்தில் என்ன நடக்கிறது என கவனத்தை சிதற விடுவதன் மூலம் உங்களுடைய வேலையும் பாதியில் நின்று விடும். பிறரிடம் உங்களது மீதான பார்வையும் தவறாகிவிடும். பிறருக்கு உதவுவதாக இருந்தாலும் கூட முதலில் உங்களது வேலையை முடித்துவிட்டுச் செல்வது நல்லது.

அறிவுரைகளை மதிக்கவும்!

இது பெரும்பாலான அலுவலகங்களில் நடக்கும் ஒன்று தான். மேலாளர், பணியில் மூத்தவர் என யார் அறிவுரை கூறினாலும் அதனைச் சற்றும் காதில் வாங்காமல் தொடர்ந்து உங்களது வேலையை கவனிப்பது தவறான ஒன்றாகும். உங்களது சீனியர் என்ன சொல்கிறார் என முதலில் கேட்டு அவற்றை செயல்படுத்த முயற்சியுங்கள். அவர்களது பேச்சை மீறி நீங்கள் சரியாக செயல்பட்டாலும் கூட அது உங்கள் மீது தேவையற்ற வாதத்தை ஏற்படுத்தும். மேலும், அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரைகள் பெரும்பாலும் உங்களது வேலையை எளிதில் முடிக்கும் வகையிலேயே இருக்கும்.

கோபத்தைக் குறையுங்கள்!

அலுவலகம் செல்லும் பெரும்பாலானோர் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவது வழக்கமான ஒன்றுதான். முதலில் பிரச்சனைகளை பிரித்து சிந்திக்க முயற்சி செய்யுங்கள். அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைகளையும், குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளையும் இணைத்து சிந்திப்பது தேவையற்ற கசப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டீர்கள் என்றால் அங்கு உள்ள வேலைகளில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். பிறரிடம் உங்களது குடும்ப பிரச்சனைகளை விவாதிப்பது கூட தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

தனித்து செயல்படாதீர்கள்

ஒருசிலர் எப்போதும் தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பதைப் பார்க்க முடியும். அவ்வாறு தனித்து செயல்படுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். உங்களது அருகில் இருப்பவர்களிடம், சக பணியாளர்களிடம் அவ்வப்போது ஏதேனும் ஒன்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். வேலை குறித்து விவாதியுங்கள். அந்த விவாதம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். நட்புடன் சக பணியாளர்களிடம் பழகுவதன் மூலம் உங்களுடைய சோர்வுகள் நீங்கி மன வலிமையை ஏற்படுத்தும்.

%d bloggers like this: