ஜிம்மிற்கு போகும் ஆண்கள் செய்யும் இந்த தவறுகள் உயிருக்கே ஆபத்தாகி விடுமாம்…!

ஜிம்மிற்கு போலாமா..? வேண்டாமா..?

உடலை கச்சிதமாக வைத்து கொள்ள நினைப்பது தவறில்லை. ஆனால், தேவையற்ற முறையில் எடையை குறைக்க நினைப்பது தான் தவறே. அதிலும் ஜிம்மில் சேர்ந்த உடனே ஆண்கள் பல வித செயல்களை செய்து பார்ப்பார்கள். இது ஏராளமான விளைவை தரும் என ஜிம் பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.

பயிற்சியை தவிர்த்தால் இப்படித்தான் ஆகும்..!

நீங்கள் ஜிம்மிற்கு முதன்முதலில் போகும் போது, உங்கள் பயிற்சியாளர் சில முக்கிய வார்ம் அப்- களை சொல்லி தருவார். இது ஆரம்ப நிலையில் கடினமாக இருந்தாலும் உடலுக்கு மிகவும் நல்லது. இதனை தவிர்த்தால் தசை பிடிப்பு, ரத்தம் கட்டி கொள்ளுதல், தசை பிழற்சி போன்றவை ஏற்பட கூடும்.

அதிக எடை அதிக வலி…!

பொதுவாக ஜிம்மில் முதன்முறையாக இணைந்து கொள்பவர்கள் எண்ணற்ற கனவு கோட்டைகளை தங்கள் மனதில் கட்டுவார்கள். உதாரணமாக 20 கிலோ எடையை குறைக்க வேண்டும், 30 கிலோ எடையை குறைக்க வேண்டும் என்ற பேராசை உயிருக்கே ஆபத்தை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சாப்பிட்டு விட்டு போகலாமா..?

யாராக இருந்தாலும் அதிகமாக சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சியை செய்வது தவறான செயலாகும். சிறிய அளவில் ஏதேனும் சாப்பிட்டு விட்டு ஜிம்மிற்கு சென்றால் அது உடலுக்கு தேவையான ஆற்றலை தரும். அதற்காக வயிறு முழுக்க சாப்பிட்டு விட்டு செல்லாதீர்கள்.

Most Readஆண்களுக்கு முடி வெள்ளையாக மாறுவதற்கு இந்த 10 உணவுகள் தான் முக்கிய காரணம்..!

யாரை பார்த்தும் காப்பி அடிக்காதீர்கள்..!

பெரும்பாலானோர் ஜிம்மிற்கு சென்றதும் அதிக கட்டுமஸ்தாக இருப்பவரை பார்த்து அப்படியே செய்ய வேண்டும் என ஆசை கொண்டு, அதையும் செய்து பார்க்க முற்படுவார்கள். இவ்வாறு செய்தால் மூச்சு பிடிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகி விடுமாம். ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் எதை பயிற்சி செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்வது நன்று.

பயிற்சியாளர் முக்கியம்..!

நீங்கள் ஜிம்மிற்கு முதல் முறையாக வருக்கின்றீர் என்றால், கட்டாயம் பயிற்சியாளர் உடன் இருக்க வேண்டும். அவர் சொல்வது படியே ஜிம்மில் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பயிற்சியாளர் இல்லாத போது எந்த ஒரு ஜிம் சாதனங்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ப்ரோட்டீன் பவ்டர் வேண்டாமே..!

ஆண்கள் ஜிம்மிற்கு சென்றதும் அடுத்து அவர்கள் செய்யும் முக்கிய விஷயம் இதுதான். ப்ரோட்டீன் பவ்டர்களை வாங்கி கொண்டு அதிகம் உண்பார்கள். சந்தையில் எண்ணற்ற ப்ரோட்டீன் பவ்டர்கள் இருக்கிறது. ஆனால். அவற்றையெல்லாம் வாங்கி குவித்து கொள்ளாதீர்கள். ஏனெனில், இவை உடல் நலனை முற்றிலுமாக கெடுத்து விடும். இதற்கு மாறாக புரத சத்து கொண்ட உணவுகளை அதிகம் உண்ணுங்கள்.

திட்டமில்லாமல் செய்யாதீர்கள்..!

ஜிம்மிற்கு செல்வதற்கு முன் ஏன் செல்கின்றோம், எத்தகைய உடல் வாகு வேண்டும், உடல் எடையை எவ்வளவு குறைக்க வேண்டும் போன்ற திட்ட வரையறையை வைத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் எந்த ஒரு குறிக்கோளும் இன்றி ஜிம்மின் பயிற்சிகள் செய்வதால் அவை வீணாகி விடும்.

வேகமும் வேண்டாம்…மெல்லமாகவும் வேண்டாம்…!

சிலர் ஆர்வ கோளாறால் எந்த ஒரு பயிற்சியையும் வேகமாக செய்ய வேண்டும் என எண்ணுவார்கள். இவர்கள் முதலில் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். உடல் எடையை குறிப்பது ஒரே நாளில் நடக்க கூடிய செயல் கிடையாது. ஆதலால், அதிக வேகமும் அதிக மெல்லமாகவும் இல்லாமல் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

கார்டியோ- ஜாக்கிரதை…!

ஜிம்மில் உள்ள சில வகையான சாதனங்களில் மிக முக்கியமான சாதனம் இந்த கார்டியோ. ஒருவர் கார்டியோவை பயிற்சி செய்யும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த பயிற்சியை 25 நிமிடத்திற்கு குறையாமலும் 45 நிமிடத்திற்கு மேல் செய்யாமலும் பார்த்து கொள்ள வேண்டும்.

ஓட்டம்- கவனம் தேவை..!

ட்ரேட்மில் போன்ற ஜிம் சாதனங்களை பயன்படுத்தும் போது கட்டாயம் கவனம் தேவை. சிலர் விளையாட்டுத்தனமாக இதனை கையாளுவார்கள். இது அவர்களில் உயிருக்கே வினை வைத்து விடும். ட்ரேட்மில்லில் பயிற்சி செய்யும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

உறக்கத்தின் அளவு முக்கியம்…!

ஜிம்மிற்கு செல்பவர்கள் அதிக நேரம் உறங்க கூடாது. அதே போன்று குறைந்த நேரமும் உறங்க கூடாது. அளவான நேர தூக்கம் ஜிம்மில் பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் நல்லது என ஜிம் பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். அப்போதுதான் ஹார்மோன்களின் அளவு சீராக இருக்குமாம்.

%d bloggers like this: