சிறுநீரக கற்களை கரைக்க கூடிய நம் முன்னோர்களின் முக்கிய பயிற்சி முறைகள்..!

இந்த பூமியானது எண்ணற்ற முறையில் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே போகிறது. அதே போல இவற்றில் வாழ்கின்ற உயிரினங்களும் மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சி அடைகிறது. இது பல கோடி ஆண்டுகளாக நடக்கின்ற

ஒரு பெரும் இயக்கமாகும். அந்த வகையில் மற்ற உயிரினத்தை காட்டிலும் வெகு வேகமாக வளர்ச்சி அடைவது மனிதனே. இது ஒரு வகையில் நல்ல விஷயம் என்றாலும், அதற்கு நேர் மாறாக நாம் செய்கின்ற செயல்களும் இருக்கின்றன.

இவற்றின் விளைவு பல வகையான நோய்களுக்கு நம்மை ஆளாக்குகின்றன. இவற்றில் இருந்து விடுபல பல்வேறு முன்னோர்களின் எளிய வைத்திய முறைகள் இருக்கின்றன. இந்த பதிவில் பல மக்களை வாட்டி எடுக்கும் சிறுநீரக கற்களை எவ்வாறு நீக்குவது என்பதை பற்றிய முன்னோர்களின் ஆசன பயிற்சிகளை முழுமையாக அறிந்து கொள்வோம்.

கிட்னி படும் வேதனைகள்..!

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களும் நம் உடலை பாதிக்க செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள். உண்ணும் உணவு முதல் உறங்கும் முறை வரை எல்லாமே நம் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. அந்த வகையில் சீரற்ற உணவு பழக்கம், உடல் அழுக்குகள் மற்றும் நீர் பற்றாக்குறை இவை சிறுநீரகத்தை பெரிதும் பாதிக்கிறது. இறுதியில் இது உயிருக்கே வினையாகி விடும்.

ஏன் கற்கள் உருவாகிறது..?

கிட்னியில் முதன்மையான வேலை என்னவென்றால், ரத்தத்தை சுத்தம் செய்வது மற்றும் ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை வெளியேற்றுதலே. அவ்வாறு செய்யும் போது சிறுநீரை வெளியேற்றுவதே இதன் முக்கிய செயல்பாடு. அந்த வகையில் சிறுநீரகத்தில் தண்ணீரின் அளவு குறையும்போதோ அல்லது உப்பின் அளவு அதிகரித்து கொண்டே போகும் போதோ சிறுநீரகத்தில் கற்களாக மாறி விடுகிறது.

புஜங்காசனம்

சிறுநீரக கற்களை போக்குவதற்கு ஒரு சில எளிய பயிற்சிகள் இருக்கிறது. இவை நம் முன்னோர்களின் வழியாக பின்பற்றபட்டு வருகிறது. இதில் முதல் ஆசனமானது புஜங்காசனம் ஆகும். பாம்பை போன்ற உருவத்தை நம் உடலில் செய்வதே இந்த ஆசன முறையாகும். இவை விரைவிலே சிறுநீரக கற்களை நீக்கி விட கூடிய அற்புத முறையாம்.

ஆசன முறை…

இந்த ஆசன முறையை செய்வதற்கு, முதலில் குப்புற படுக்க வேண்டும். அடுத்து உள்ளங்கைகளை தோல்களுக்கு நேராக வைத்து, முட்டியை உடன்போட சேர்த்து பிடித்து கொண்டு, தலையை லேசாக அழுத்தி கொள்ள வேண்டும். இந்த நிலையில் மெல்ல கழுத்தை மேலே தூக்கி, மூச்சை மெல்லமாக இழுத்து கொள்ளவும். பிறகு பழைய நிலைக்கு வரும்போது மூச்சை மெதுவாக வெளியே விடவும். பிறகு இரு கால்களையும் மேல தூக்கி கொண்டு, இந்த முறையை தொடர்ந்து செய்ய வேண்டும்.

நவ்காசனம்

இது வயிற்று பகுதியை பலப்படுத்தும் மிக முக்கிய பயிற்சி முறையாகும். இவை வயிற்று பகுதியை அதிக பலத்துடன் வைத்து கொள்ள மிகவும் உதவும். சிறுநீரக கற்களால் அவதிப்படுவோருக்கு இந்த ஆசன முறை நன்கு உதவும். அத்துடன் வயிற்று சம்மந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இது தீர்வை தரும்.

பயிற்சி முறை…

இந்த ஆசன முறைக்கு முதலில் மேல் நோக்கி படுத்து கொள்ள வேண்டும். அடுத்து, கால்களை மேலே தூக்கி கொள்ளவும். இந்த நிலையில் இரு கைகளாலும் இரு கால்களையும் பிடித்து பிடித்து படகை போன்று செய்ய வேண்டும். மூச்சை இறுக்கமாக பிடித்து கொள்ளாமல், இலகுவாக உடலையும் மூச்சையும் வைத்து கொள்ளவும். இதனை “படகு போன்ற ஆசனம்” என்றும் சொல்லுவார்கள்.

உஸ்ட்ராசனம்

கிட்டினியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உஸ்ட்ராசனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆசனம் உடலின் முழு நிலையையும் சீராக வைத்து, அதிக நலனை தருகிறது. குறிப்பாக சிறுநீரக கற்களை கரைக்க கூடிய அருமையான வைத்தியம், இதில் உள்ளது.

ஆசன முறை…

முதலில் கால்கள் உள்ளே மடங்குவது போன்று முழங்காலில் உட்கார வேண்டும். அடுத்து மெதுவாக உடலை எழ செய்து பின்னங்கால்களை கைகளால் பிடித்து கொள்ளுங்கள். இந்த நிலையில் உடலை நன்கு வலைத்து இருக்க வேண்டும். இப்போது மூச்சை நன்கு இழுத்து வெளியே விடவும். இந்த நிலையில் ஒரு சில நொடிகள் இருங்கள். இவ்வாறு செய்வதால் முழு வயிற்று பகுதியும் நலம் பெறும்.

பாலாசனம்

இந்த ஆசனமானது குழந்தையின் நிலையை குறிப்பதாகும். அதாவது, இந்த பயிற்சியானது குழந்தை உட்கார்ந்திருக்கும் முறையில் இருக்கும். எனவே இது இப்பெயர் பெற்றது. இதனை தொடர்ந்து செய்து வந்தால் நுரையீரல் வலிமை பெரும். அத்துடன் சிறுநீரக கற்கள் நீங்கவும் செய்யும்.

பயிற்சி முறை…

குழந்தை முதன்முதலில் உட்கார்ந்திருக்கும் நிலையில் இருக்க வேண்டும். அதாவது, நான்கு கால்களின் நிலையில் இருந்து கொண்டு கை முட்டிகளை தளர்த்தி, மார்பு பகுதியை தரையில் கை முட்டிகளுக்கு இடையே படிய வைக்கவும். தலையை வலது பக்கமாக திருப்பி குழந்தையை போன்று இந்நிலையில் இருக்க வேண்டும். இப்போது மூச்சை இழுத்து வெளியே விடவும். பிறகு இடது பக்கமாகவும் செய்ய வேண்டும்.

விபரீத காரணி முத்திரை

உடலின் இயக்கத்தை சீராக வைத்து கொள்ள இந்த ஆசன முறை பயன்படுகிறது. வயிற்று பிரச்சினையால் நீண்ட காலம் அவதிப்படுவோருக்கு இந்த ஆசன முறை வரப்பிரசாதமாகும். அதிலும், இவை கிட்னி கற்களை நீக்கிவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் வலிகளையும் இவை குணப்படுத்தி விடும்.

ஆசன முறை…

இந்த ஆசன முறையை செய்ய, மேல் நோக்கி படுத்து கொள்ள வேண்டும். அடுத்து உங்கள் கால்களை உடம்போடு சேர்த்து மேலே தூக்கி கொள்ளவும். ஒரு சில மணித்துளிகள் இந்த நிலையிலே உங்கள் உடலை வைத்து கொள்ள வேண்டும். பிறகு பழைய நிலைக்கே சென்று விட்டு, மறுபடியும் இந்த ஆசனமுறையை செய்ய வேண்டும்.

பவன்முக்தாசனம்

இது முதன்மையான ஆரம்ப நிலை யோகா பயிற்சியாகும். இந்த நிலை அதிக நன்மையை உடலுக்கு தர கூடும். இது ஆரோக்கியத்தை கூட்டவும், சீராக உடல் அமைப்பை வைத்து கொள்ளவும் பெரிதும் பயன்படுகிறது. சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்குவதில் இது முதன்மையான இடத்தில உள்ளது.

பயிற்சி முறை…

இந்த ஆசன முறையை செய்ய, முதலில் மல்லாந்து படுத்து கொள்ள வேண்டும். அடுத்து, முழங்காலை வயிற்று பகுதிக்கு வருவது போன்று செய்து, இரு கைகளாலும் வலது முழங்காலை பிடித்து கொள்ளவும். பிறகு மூக்கால் முழங்காலை தொடும்படி செய்ய வேண்டும். இதே நிலையில் முடிந்த அளவு இருங்கள். அடுத்து இடது காலில் இதனை செய்ய வேண்டும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

%d bloggers like this: