Advertisements

தாடியை பற்றி இதுவரை நீங்கள் அறிந்திறாத சுவராசிய உண்மைகள் இதோ…!

நம்மை சுற்றி நடக்க கூடிய ஒவ்வொரு விஷயத்துக்கும் பல வித அர்த்தங்கள் இருக்கும். நமக்கே தெரியாமல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பெரிய வரலாறே உள்ளடக்கி இருக்குமாம். எப்படி இந்த பூமி உருவானதற்கு அறிவியல் சார்ந்த பல விஷயங்கள் இருக்கிறதோ அதே போன்று எல்லா வகையான விஷயத்துக்கும் ஒரு காரண காரியம் பிறந்திருக்கும்.

அந்த வகையில் பல ஆண்களின் அழகிய தாடியிற்கும் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஆண்களின் ஆண்மையை குறிக்கும் இந்த தாடியை பற்றிய பல்வேறு உண்மைகளை இது வரை நாம் அறிந்திறாமலே இருந்திருப்போம். இந்த பதிவில் தாடியை பற்றிய ஏராளமான சுவாரசிய தகவல்களை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

தாடி எவ்வளவு தூரம் வளரும்..?

ஆண்களே நீங்கள் தாடியை ஷேவ் செய்யாமலே இருந்தால் உங்கள் தாடியானது சுமார் 27அடி அளவுக்கு வளருமாம். இந்த உலகில் கிட்டத்தட்ட 55 சதவீத ஆண்கள் அதிக தாடியுடன் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தாடியை வளர்ப்பது மிக அழகி செயலாக பல ஆண்களும் கருதுகின்றனர்.

முகத்தை பளபளக்கும் தாடி..!

பொதுவாக முகத்தை தாடி அழகு செய்யும் என்பது தான் நமக்கு தெரியும். ஆனால், இந்த தாடியை முகத்தில் அதிகமாக வளர்த்தால், சூரியனின் புற ஊதா கதிர்களை 90 முதல் 95 சதவீதம் உங்கள் முகத்தை தாக்காதவாறு காக்குமாம். எனவே ஆண்களின் முகமும் பளபளக்கும் வெண்மையுடன் இருக்கும்.

உலகின் நீண்ட தாடி..!

இந்த உலகின் நீண்ட தாடி யாருக்கு இருந்திருக்கும் என்ற ஆச்சரியமான கேள்வி நம்மில் பலருக்கு இருக்கும். இந்த கேள்விக்கு விடை இதோ… அமெரிக்காகவே சேர்ந்த “ஹான்ஸ் லாங்சேத்” என்பவருக்கே உலகின் மிக நீண்ட தாடி இருந்ததாம். இவரின் தாடியின் நீளம் சுமார் 17 அடி ஆகும்.

தாடி பயம்..!

நமக்கெல்லாம் பேய் படம் பார்க்கும்போது, பாம்பை பார்க்கும்போது பயம் ஏற்பட கூடும். அனால், தாடியை பற்றிய பயம் கூட இங்கு இருக்கிறதாம். அதாவது, தாடி வளரவில்லையென்றாலும், தாடி முடிகள் கொட்டுகிறது என்றாலும் இந்த வித பயம் வருமாம். இதனை “Pogonophobia” என்று மருத்துவ துறையில் அழைப்பார்கள்.

எப்போது அதிகம் வளரும்..?

ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் ஒரு முக்கிய நேரம் இருக்கிறது. அந்த வகையில் ஆண்களின் தாடியானது இரவு நேரங்களில் மிக கம்மியாக வளருமாம். மாறாக பகல் நேரத்திலே தாடி அதிகம் வளர்ச்சி பெறும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

தாடியை பற்றிய போர்..!

தாடிக்கும் கிரேக்கர்களின் போருக்கும் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. போரில் சண்டையிட்டும் போது கிரேக்கர்களின் தாடியை எதிரி அணி பிடித்து இழுக்க நேரிடும் என்பதற்காக “மாவீரன் அலெக்சாண்டர்” தனது படை வீர்களின் தாடியை ஷேவ் செய்ய சொல்லிவிட்டாராம்.

தாடிக்கான பாடல் குழு…!

தாடியை பற்றிய பலவித சுவாரசிய விஷயங்கள் இருந்தாலும் இது சற்றே புதுமையானது. தாடிக்காகவே ஆஸ்திரேலியாவில் “The Beards” என்ற ஒரு பாடல் குழு இருக்கிறதாம். இவர்கள் எப்போது பாடல்களை வெளியிட்டாலும், தாடியுடனே பாடல்களை பாடி வெளியிடுவார்களாம்.

அதிக தாடி…அதிக சொட்டை..!

உங்களுக்கு தாடி அதிகமாக வளர்ந்தால் உங்களுக்கு முடிகள் உதிர்ந்து சொட்டை விழ வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, அதிகமாக தாடி வளர்ந்தால் மண்டையில் அதிகமாக வேர்க்குமாம். எனவே, இது முடியை உதிர வைக்கும்.

பெண்களுக்கும் தாடியா..?

ஆண்களை போலவே ஒரு சில பெண்களுக்கு அதிக அளவில் உடலில் முடிகள் வளருமாம். அந்த வகையில் அதிக தாடி உள்ள பெண் என்ற கின்னஸ் சாதனையை செய்தவர் “ஹர்னாம் கார்” என்ற பெண்தான். இவர் 2015 ஆம் ஆண்டு இந்த சாதனையை செய்துள்ளார். இவரின் தாடியின் நீளம் 30 cm ஆகும்.

இளமையாக வைக்கும் தாடி..!

ஆண்களே, நீங்கள் உங்கள் முகத்தில் தாடியை அதிகம் வளர்த்தால் நீங்கள் நீண்ட காலம் இளமையாக இருப்பீர்களாம். ஏனெனில் இவை சூரியனின் புர ஊதா கதிர்களில் இருந்து உங்களை காக்கிறதாம். மேலும், தாடி வைக்கும் ஆண்கள் அழகாகவும் மிக இளமையாகவும் இருப்பார்கள் என்பது பெண்களின் கருத்து.

தாடிக்கும் வரியா..?

நம்ம ஊரில் எப்படி பொருட்களுக்கு வரி விதிக்கின்றனரோ. அதே போன்று ரஸ்சியாவில் தாய் வளர்த்தால் வரி தர வேண்டுமாம். ரஸ்சியாவின் பீட்டர் என்ற மன்னருக்கு தாடியே பிடிக்காதாம். எனவே, அவர் தன் நாட்டில் யாரவது தாடியை வளர்த்தால் அதற்கும் சேர்த்தே வரியை கட்ட வேண்டும் என்றாராம்.

தாடியும் அமெரிக்க ப்ரெசிடெண்டும்..!

அமெரிக்காவின் முன்னாள் ப்ரெசிடெண்டான ஆபிரகாம் லிங்கன் பெரும்பாலும் தாடியை வளர்க்காமல் இருந்திருந்தாராம். அப்போது 11 வயதுடைய ஒரு குழந்தை அவருக்கு “நீங்கள் தாடி வைத்தால் நன்றாக இருக்கும்” என கடிதம் ஒன்றை எழுதியதாம். இதனாலே அவரும் தாடியை வளர்க்க தொடங்கினார்.

இவ்ளோ மணி நேரமா..?

ஒரு ஆண் தனது வாழ்நாளில் இந்த தாடியை ஷவ் செய்ய எவ்வளவு நேரம் செலவிடுகின்றான் என்பது தெரியுமா..? கிட்டத்தட்ட 3350 மணி நேரம் தாடியை பராமறிக்கவே ஆண்கள் செலவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். மேலும், தாடியை வளர்த்தால் தூசி மற்றும் பல வகை ஒவ்வாமைகளில் இருந்து காக்குமாம்.

எது சிறந்த காலம்..?

மற்ற காலங்களை விட வெயில் காலத்தில் தாடி வளர்ப்பதே சிறந்தது என ஆய்விகள் சொல்கிறது. குறிப்பாக அந்த காலத்தில் தான் அதிக தாடியும் வளருமாம். மேலும் 75 சதவீத ஆண்கள் தினமும் தாடியை ட்ரிம் செய்யும் பழக்கம் உடையவர்கள் என ஒரு புள்ளி விவரம் உள்ளது.

பெண்களை கவரும் தாடிகள்..!

சிறிது காலத்திற்கு முன் நடத்திய ஒரு ஆய்வில் தாடி இல்லாத ஆண்களை விட தாடி உள்ள ஆண்களையே பெண்கள் தங்களது வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க விரும்புவதாக கூறுகின்றனர். அதனாலையே தனது கணவன்மார்களை தாடியை ஷேவ் செய்ய கூடாது என மனைவிமார்கள் சொல்கின்றனர்.

எகிப்தியர்ளின் தங்க தாடி..!

மற்ற நாட்டு மக்களை விட எல்லா விஷயத்திலும் எகிப்தியர்கள் சற்றே வித்தியாசமாக இருப்பார்கள். அதே போன்று அவர்கள் தாடியை வளர்ப்பதிலும் வித்தியாசமாக இருந்தார்கள். இவர்கள் எப்போதும் தங்க தாடியையே முகத்தில் வைத்து கொண்டு இருப்பதாக அவர்களின் வாழ்க்கை முறை சொல்கிறது.

தாடியை தொட்டால் அவ்வளவுதான்…!

தாடியை பெண்களை விட ஆண்களே அதிகம் விரும்புவார்களாம். இடை காலத்தில் மேலை நாடுகளில் ஒரு சட்டம் பிறப்பிக்க பட்டது. அது என்னவென்றால், ஆணின் தாடியை இன்னொரு ஆண் தொட்டால் குற்றமாகுமாம். எனவே, அவருக்கு ஒரு சில தண்டனை வழங்கப்படுமாம்.

தாடிக்கு கொடுக்கும் பரிசுகள்..!

பிரிடிஷ் அரசு தனது படையில் உள்ள வீரர்கள் அதிக தாடியை வளர்த்தால் அதற்கென்றே தனி விருதுகளை வழங்குமாம். அந்த அளவிற்கு தாடியானது மிகவும் முக்கியானதாக அங்கு மதிக்கப்பட்டதாம்.

Advertisements
%d bloggers like this: