நரை முடி முதல் முக கருமை வரை, அனைத்திற்கும் தீர்வு தரும் உருளைக்கிழங்கு…!

முகத்தை அழகாக வைக்க பல்வேறு முறைகளிருந்தாலும், இயற்கை ரீதியான முறைகளே அதிக பலனை தரும். முகம் அழகாகவும் மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்க யார்தான் விரும்ப மாட்டார்கள். முகத்தை

வெண்மையாக்க நம்மில் பலர் எண்ணற்ற வேதி பொருட்களை முகத்தில் பூசி முக அழகை கெடுத்து வருகின்றோம். முகத்தின் அழகை இவ்வாறு நாம் கெடுத்து வந்தால், மிகவும் பாதிக்கபடும்.

முகம் அழகாக இருக்க ஒரு சில காய்கறி அழகியல் முறைகள் உதவும். அந்த வகையில் முகத்தை அழகாக மாற்ற உருளை கிழங்கும் உதவும். உருளை கிழங்கில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இது முகத்தை பட்டுபோல மாற்றும். இந்த பதிப்பில் முடி மற்றும் முகத்தை பொலிவு பெற வைக்க எவ்வாறு உருளைக்கிழங்கை பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.

ருசி மிக்க உருளைக்கிழங்கு..!

உருளைக்கிழங்கை வறுத்து சாப்பிட அனைவருக்குமே பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் ருசியான ஒரு உணவு வகையாகும். அந்த அளவுக்கு இது சமையலுக்கு உதவுகிறதோ, அதே அளவிற்கு இது முடி மற்றும் முகத்தின் அழகையும் பராமரிக்கிறது.

இவ்வளோ நலனா..?

மற்ற காய்கறி வகைகளை போன்றே இதிலும் ஏராளமான ஊட்டசத்துக்கள் உள்ளன. இவற்றில் உள்ள ஆரோக்கிய நலன்கள் இதோ…

கலோரிகள்

சோடியம்

வைட்டமின் சி

பொட்டாசியம்

மெக்னீசியம்

நார்சத்து

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்

ஸ்டார்ச்

வைட்டமின் பி6

தழும்புகளை குணப்படுத்த…

பெரும்பாலானோருக்கு முகத்தில் தழும்புகள் அதிகம் இருக்கும். இது அவர்களில் முக அழகை கெடுத்து விடும். அந்த வகையில் முகத்தில் உள்ள தழும்புகளை இந்த உருளை கிழங்கு ஃபேசியல் சரி செய்கிறது.

தேவையானவை :-

உருளை கிழங்கு சாறு 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

முல்தானி மட்டி 2 டீஸ்பூன்

செய்முறை :-

முகத்தில் உள்ள தழும்புகளை மறைய வைக்க, முதலில் உருளைக்கிழங்கை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அவற்றுடன் எலுமிச்சை சாறு மற்றும் முல்தானி மட்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஃபேசியலை முகத்தில் தழும்புகள் உள்ள இடத்தில பூசி வந்தால் தழும்புகள் மறையும்

வறண்ட சருமத்திற்கு

முகம் மிகவும் வறண்டு இருந்தால் கீறல்கள், சொரசொரப்புகள் ஏற்படும். இதனால் முக அழகே கெட்டு விடும். முகத்தை கீறல்கள் இல்லாமல் வைத்து கொள்ள இந்த குறிப்பு போதும். மேலும், இது முகத்தின் வறட்சியை முழுமையாக போக்கி விடும்.

தேவையானவை :-

உருளைக்கிழங்கு

தயிர் 1 டீஸ்பூன்

செய்முறை :-

முகத்தில் உள்ள வறட்சி நீங்க முதலில், தயிரை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து அவற்றுடன் உருளைக்கிழங்கை சாறாக்கி கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் மூசி மசாஜ் செய்யவும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த ஃபேசியல் முறையை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முக வறட்சி தீர்ந்து விடும்.

நரையை தடுக்கும் உருளை..!

நரை முடி இப்போதெல்லாம் முக்கால் வாசி பேருக்கு இருக்கிறது. இந்த நரை முடியை கருமையாக மாற்ற பல்வேறு வழி முறைகள் உள்ளது. அவற்றில் இந்த முறை மிக எளிமையானது.

தேவையனாவை :-

உருளை கிழங்கு

நீர்

செய்முறை :-

தலையில் உள்ள நரைகளை குணப்படுத்த, உருளைக்கிழங்கை முதலில் தோல் உரித்து கொள்ள வேண்டும். அடுத்து, அந்த தோலை நீரில் போட்டு கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி, அந்த நீரை தலைக்கு தடவி குளிக்கவும். இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் நரைகள் மறைய தொடங்கும்.

முடி உதிர்வை தடுக்க

முடி உதிர்வது மிக மோசமான விஷயம் தான். இதனை சரி செய்ய முதலில் உருளைக்கிழங்கை சாறு பிழிந்து கொள்ளவும். அடுத்து அவற்றுடன் 2 டீஸ்பூன் கற்றாழை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து தலை முடியின் அடி வேரில் தடவி குளித்து, வந்தால் முடி உதிர்வு நின்று விடும். அத்துடன் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

%d bloggers like this: