Advertisements

உங்களுக்கு இந்த மாதிரி கனவு வருகிறதா? எப்படி விடுபடுவது?

கனவுகள் என்பது இன்றைக்கும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று கூறுகிறார்கள். அதனை சரியான வழியில் நாம் கவனமாக புரிந்து கொண்டால், அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான பல்வேறு நுண்ணறிவுகளை நாம் பெறலாம்.

இறந்து போன சொந்தமோ அல்லது நண்பனோ உங்கள் கனவில் வருவது உண்டா? அதற்கான காரணங்களை தெரிந்துகொள்வோம். 

இறந்தவர் உயிருடன் இருந்த போது அவருக்கு செய்ய வேண்டியதை சரியாக செய்யவில்லையே என்ற குற்ற உணர்வு அல்லது மன வருத்தம் உங்களை வதைக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு கனவுகளில் இறந்தவர்கள் தோன்றலாம். அவர்களின் இறப்பு உங்களுக்கு அதீத பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தால், அவர்களை நீங்கள் கனவில் காணலாம். அப்படிப்பட்ட சூழலில், நம் ஆழ்மனதில் ஆழமாக வேரூன்றிய நம் உணர்வுகளின் வெளிப்பாடே கனவுகள்.

இறந்து போன சொந்தக்காரரோ அல்லது நண்பனோ உங்கள் கனவில் தோன்றுவதற்கு ஆன்மீக காரணமும் உள்ளது. சில சமயம், இறந்து போனவர்களின் சந்ததிகளுக்கு உங்கள்  உதவி ஏதேனும் தேவைப்படலாம். அதுபற்றிய விழிப்புணர்வு ஊட்டவே அந்த கனவுகள் வரக்கூடும்.

ஒரு கனவு குறைந்தது மூன்று முறைக்கு மேலாக வந்தால், அதனை ஆன்மீக சார்ந்த கனவாக கூறலாம். 

முதல் கட்டமாக, அவர்களின் நினைவில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமென்றாலோ அல்லது அவர்களின் நினைவு உங்களை வாட்டுவதை தவிர்க்க வேண்டுமென்றாலோ, உங்கள் குல தெய்வம் அல்லது இஷ்ட தேவதையிடம் வேண்டுதல் வைக்கலாம். இறந்த ஆன்மாக்கள் சாந்தியடைய அது பெரிதும் உதவும்.

இறந்த ஆன்மாவிற்காக நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து அதை தள்ளிப்போட்டிருந்தால் அதை நினைவூட்ட கனவு வரலாம். இறந்த பிறகு சாந்தி கிடைக்க, அல்லது தடைகளை நீக்க உங்களிடம் அதற்கான உதவியை சுட்டிக் காட்டலாம். அதில் சாத்தியமான காரியங்களை நிறைவேற்றுங்கள். இறந்தவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டதாக உங்களுக்கு நீங்களே ஆறுதல் கூறி நம்பிக்கையுடன் வாழுங்கள்.
 

Advertisements
%d bloggers like this: