Daily Archives: செப்ரெம்பர் 24th, 2018

காலாவதியான லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி… உயிர் கொடுக்கும் ரிவைவல்!

னியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கும் சந்தோஷ், தன் குடும்பத்துடன் சகல வசதிகளுடன் கூடிய அபார்ட்மென்டில் வசித்து வந்தார். சந்தோஷின் வீட்டுக்கு அருகில்  வசித்து வந்தார் மாணிக்கம். மாணிக்கம் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட். நட்பின் காரணமாக மாணிக்கத்தின் மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தார் சந்தோஷ். தொடர்ந்து மாணிக்கத்தின் மூலமே பிரீமியம் கட்டிவந்தார்.

சந்தோஷ், பணி மாறுதல் காரணமாக  வெளியூர் சென்றார். மாணிக்கம் பிரீமியம் கட்ட போன் மூலம் நினைவூட்டியும், வேலைச்சுமை மற்றும் வேறு செலவுகளால் பிரீமியம் கட்டாமல் விட்டுவிட்டார் சந்தோஷ். இந்த நிலையில், சந்தோஷ் எதிர்பாராத விதமாக இறந்துபோக,  குடும்பம் நிலைகுலைந்து போனது. சந்தோஷின் மனைவி, இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குச் சென்று பாலிசிக்கு க்ளெய்ம் கேட்டார். சந்தோஷ் தொடர்ந்து பிரீமியம் கட்டாத காரணத்தால் இழப்பீடு மறுக்கப்பட்டது. சந்தோஷின் மனைவிக்கு இன்ஷூரன்ஸ் கம்பெனியின்  பதில்  அதிர்ச்சியை அளித்தது. 

Continue reading →

தொண்டைவலி போக்கும் துளசி

சித்த மருத்துவத்தில், ‘தெய்வ மூலிகை’ என்று போற்றப்படுவது துளசி. நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, காட்டுத் துளசி என இதில் பல வகைகள் உள்ளன.  இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தவை.

Continue reading →

உங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா

ருந்து, மாத்திரைகள் நம் வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன. யாருடைய கைப்பையைத் திறந்தாலும் தலைவலிக்கு ஒன்று, காய்ச்சலுக்கு ஒன்று என கலர் கலராக மாத்திரைகள் வைத்திருக்கிறார்கள்.  சிலர் மருத்துவமனைக்கே செல்லாமல் சுயவைத்தியம் செய்துகொள்கிறார்கள். சிலர், மருத்துவர் பரிந்துரைத்த அவசரகால மருந்துகளைக் கையில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். வேறொருவருக்குப் பரிந்துரைத்த மருந்துச்சீட்டை வாங்கி, அதிலுள்ள மாத்திரைகளை

Continue reading →

உருவ வழிபாட்டில் விநாயகர் – தியானத்தினால் கிடைக்கும் பலன்கள்

image

அமைப்பு- யானை தலை, அங்குசம், மஞ்சள் தாமரை, மஞ்சள் ஆடை, இணைந்த பாம்புகள், மூக்ஷிக வாகனம் (எலி இனம்)ஆகும். இனி இந்த வகை தியானத்தினால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

யானை தலை: அதீத மூளை செயல்பாடு. நீண்ட கால ஞாபக திறமை, மிருக குணத்தில் இருந்து மனித குணத்துக்கு மனம் மாற்றம்.

அங்குசம்: மனக்கட்டு பாடு, எதையும் சமாளிக்கும் குணம். அடங்காதவரை அன்பில் அடக்கும் ஆற்றல்.

மஞ்சள் தாமரை, மஞ்சள் ஆடை: மஞ்சள் நிறத்துக்கு பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் உண்டு, காரிய தடைகள் விலகும், மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும், தடை பட்ட பூமி சக்தி வெளி வர உதவும், தாமரை மனதை அடக்கும், மனதை ஒருமை படுத்தும்.

இணைந்த பாம்புகள்: இவை ஆரோக்கியத்திற்கும், தியான வெற்றிக்கும், குண்டலினி வெற்றிக்கும் உதவும்.

மூக்ஷிக வாகனம்: கடுமையான சந்தர்பங்களில் எளிமையாக வெளியேறுதல், எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சமாளிக்கும் குணம், சுறுசுறுப்பு, கடவுளுடன் சேர மனம் துடிக்கும், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், கடவுளுக்கும், மனிதர்களுக்கும், நல்ல ஜீவராசிகளுக்கும் உதவும் குணம் கிடைக்கும்.

கொழுக்கட்டை படையல்: இதை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் பொதுவாக கொழுக்கட்டைகள் கபத்தை(சளியை) முறிக்கும் அதனால் தான் மழைக்கு முன்பே இதை உண்டு சளியை முறித்து விட்டால் அடுத்து வரும் மழை காலத்தில் சளி அவ்வளவாக ஒன்றும் செய்யாது. இதில் சேரும் பொருட்களின் பொது குணத்தை சுருக்கமாக பார்க்கலாம்.
வெல்லம்-இரத்தம் ஊரும், பித்தம் குறையும், ஆற்றல் கலோரி கிடைக்கும். உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கும்.

பச்சரிசி- பித்தம் குறைக்கும் கலோரி ஆற்றல் நிறைந்தது. உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கும்.
பாசி பருப்பு: இதன் குணம் பித்தத்தை குறைக்கும், ஆற்றல் கொடுக்கும், உடல் வெப்பத்தை கட்டுபாட்டில் வைக்கும், சிறு தானிய வகையில் சத்துக்கள் நிறைந்த பயிர். தற்காலத்தில் பயிருக்கு பதிலாக வறுகடலை என்ற பொட்டு கடலை பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது.

எள்: இரத்தம் ஊரும், உடல் வெப்பத்தை கட்டுபாட்டில் வைக்கும். இளைத்த உடல் தேறும். குளிர், பனி போன்றவற்றை தாங்கும் ஆற்றல் கிட்டும்.

ஏலக்காய்: பித்தம் போக்கும், சளியை முறிக்கும், உடல் குளிர்சியினால் ஏற்படும் அஜீரணத்தை போக்கும், இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும், கொழுப்பை குறைக்கும்.

நெய்: மிக சிறந்த உணவு இதனால் உடலுக்கு தேவையான கொழுப்புகள் கிடைக்கும், மனம் புத்துணர்ச்சி அடையும், நரம்புகள் வலுபெறும், பித்தம் குறைக்கும்.

கொன்டைய் கடலை: ஆற்றல் கிட்டும், இனபெருக்க மண்டலம் சிறந்து விளங்கும், மூளைக்கும், உடல் தசைகளுக்கும் தேவையான சத்துக்கள் நிறைந்தது. இளைத்த உடல் தேறும்.

வெள்ளெருக்கம் பூ: ஆஸ்த்மா, சளி, இருமல், நெஞ்சு சளி முறிக்கும். மருத்துவ ஆலோசனையில் மருந்தாக செய்து உண்ணவும்.

அருகம்புல்: உடல் உஷ்ணத்தை குறைக்கும், இரத்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

சிவப்பரிசி கை குத்தல் அவல்: இதனால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் கட்டுக்குள் வரும். பல ஊட்ட சத்துக்கள் நிறைந்தது. இனபெருக்க மண்டலம் சிறந்து விளங்கும். எளிதில் செரிக்கும். பல வகையான ஊட்ட சத்துக்கள் நிறைந்தது. இதை தயாரித்த ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட்டால் மட்டுமே இதன் பலன்கள் கிட்டும். அனைவருக்கும் அனைத்து நலங்களும் கிடைக்க வேண்டுகிறேன்… திருச்சிற்றம்பலம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..!

லகத்தில் செய்யக்கூடாத இழிவான ஒரு செயல் இருக்கிறதென்றால், அது நிச்சயம் யாசகமாகவே இருக்க முடியும். ஆம்! அதனால் தான் ஒருவன் எத்தகைய நிலையில் இருப்பவ னாயினும், அவன் யாரிடமாவது எதையேனும் யாசகம் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப் படும்போது தன்னைக் குறுக்கி, கைகட்டி நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

அவன் இறைவனே ஆனாலும்கூடத் தன்னைக் குறுக்கிக்கொள்ளவே செய்கிறான். அதற்கு வாமன அவதாரத்தைவிடவும் ஒரு சாட்சி வேண்டுமா என்ன?

மகாவிஷ்ணு வாமனனாக அவதரித்தபோது, குறுகிய வடிவம் கொண்டார். தான் யாசகம் பெறப்போகிறோம் என்பதற்காக மட்டுமல்ல; அவர்,  யார் நன்மைக்காக அவதாரம் எடுத் தாரோ அந்த தேவர்களின் வஞ்சக எண்ணத் தினாலும்தான்.

‘தேவர்களுக்கு வஞ்சக எண்ணமா, எப்படி?’

Continue reading →