Advertisements

குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை)-மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)

குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான துலாம் ராசியில் இருந்து அக். 4ல் 11-ம் இடமான விருச்சிக ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடமாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வார். அவரின் 7 மற்றும் 9-ம் இடத்துப்பார்வைகள் சிறப்பாக உள்ளன. ஆனால் குரு 2019 மார்ச் 13 முதல் அதிசாரமாகி தனுசு ராசிக்கு மாறுகிறார். இக்காலத்தில் வீண்செலவு அதிகரிக்கும். சனிபகவான் தற்போது 12-ம் இடமான தனுசு ராசியில் இருப்பதால் நற்பலன் கொடுக்க முடியாது. சனி சாதகமற்று இருந்தாலும் அவரின் 7-ம் பார்வையால் நன்மை உண்டாகும். ராகு 7-ம் இடமான கடகத்தில் இருப்பதும் சிறப்பானதல்ல. அவரால் இடப்பெயர்ச்சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரலாம் 2019 பிப். 13ல் ராகு 6-ம் இடமான கடகத்திற்கு மாறியபின் வளர்ச்சி கூடும். 

கேது உங்கள் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. காரிய தடையும், உடல் உபாதையும் தரலாம். அவர் 2019 பிப்.13ல் ராசிக்கு 12-ம் இடத்திற்கு போகிறார். இதுவும் சிறப்பானதல்ல. பண விரயம் ஏற்படலாம். உடல் உபாதை வரலாம்.

இனி பொதுவான பலனைக் காணலாம். பொருளாதார வளம் மேம்படும். முயற்சி அனைத்தும் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  பொன், பொருள் சேரும். உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி இனிதே நடந்தேறும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். குருவின் அருளால் வீட்டில் மழலைக்குரல் ஒலிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. 2019 மார்ச் 13க்கு பிறகு செலவு அதிகரிக்கும். சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம். பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு கூடும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு விருப்பம் போல் கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். 2019 மார்ச் 13க்கு பிறகு பணியில் சற்று பின்தங்கிய நிலை ஏற்படலாம். எனவே கவனமாக இருக்கவும். வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.

தொழில், வியாபாரத்தில் படிப்படியாக வருமானம் அதிகரிக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு துணைநிற்கும். வெளியூர் பயணத்தால் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும். பெண்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். அதே பெண்கள்  தவறை உணர்ந்து  உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர்.  2019 மார்ச் 13க்கு பிறகு எதிரிகள் வகையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அரசின் சோதனைக்கு ஆளாகலாம். வீண் செலவு ஏற்படலாம். பங்குதாரர்களின் ஆலோசனையை புறக்கணிக்காமல் பரிசீலனை செய்வது நல்லது.

கலைஞர்கள் ரசிகர்களின் மத்தியில் புகழ் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வருமானம் பன்மடங்கு உயரும். தொழில்ரீதியான பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்க யோகம் உண்டு. பொருளாதார வளம் பெருகும். 2019 மார்ச் 13க்கு பிறகு  புதிய ஒப்பந்தம் பெறுவதில் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதையும் சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டியிருக்கும்.  தொண்டர்களுக்காக பணம் செலவழிக்கும் சூழல் உருவாகலாம்.

மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி அடைவர். தேர்வில் எதிர்பார்த்தபடி அதிக மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலை பின்பற்றி நன்மை காண்பர்.   சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். குருவின் 9-ம் இடத்துப் பார்வை மூலம்  போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். 2019 மார்ச் 13க்கு பிறகு  சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். குறிப்பாக நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் பயறு வகைகளில் நல்ல லாபம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பக்கத்து நிலத்து பிரச்னை மறையும். 2019 மார்ச்13க்கு பிறகு உழைப்புக்கு தகுந்த வருமானம் இருக்கும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிறந்த வீட்டில் இருந்து பூர்வீகச் சொத்து கிடைக்கும். சிலருக்கு புதிய பதவியும் தேடி வரும். 2019 மார்ச்13க்கு பிறகு தனியார் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். உடல்நிலை திருப்தியளிக்கும்.

பரிகாரம்:

●  சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு தீபம்
●  வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு

Advertisements
%d bloggers like this: