Daily Archives: செப்ரெம்பர் 26th, 2018

ஸ்டாலின் எழுதிய எம்.ஜி.ஆர் கட்டுரை!

ழுகார் வருவார் என்று காத்திருந்தோம். ஆனால், ‘டிங்… டிங்… டிங்’ என்று மொபைல் அலற… வாட்ஸ்அப் மூலமாகச் செய்திகளைத் தெறிக்கவிட்டுக்கொண்டிருந்தார் கழுகார்.

  ‘விழா வேந்தன்’ என்றால் அது கருணாநிதிதான். மறைவுக்குப் பிறகு, திரும்பிய பக்கமெல்லாம் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். கட்சிக்காரர்கள், இலக்கியவாதிகள், திரைத்துறையினரின் இந்த வரிசையில், தென்னிந்தியத் தொழில் வர்த்தகக் கழகமும் சேர்ந்துகொண்டுவிட்டது. செப்டம்பர் 22-ம் தேதி இரவு, சென்னையில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது. கருணாநிதியைப் பற்றி அனைத்துத் தொழிலதிபர்களும் புகழ்ந்து தள்ளினர். கருமுத்து கண்ணன் பேசியபோது, ‘‘தளபதி… தளபதி…’’ என்று ஸ்டாலினை விளித்தது, பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. ‘‘இப்படி பெரும்பெரும் தொழிலதிபர்கள் ஒன்றுகூடி இந்த நிகழ்ச்சியை நடத்தியிருப்பது… அடுத்த ஆட்சி தி.மு.க-தான் என்பதைச் சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது’’ என்றொரு பேச்சைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

Continue reading →

ஆயுள் விஷயத்தில் விதி மாறுமா? எந்தெந்த பாவத்தால் ஆயுள் குறையும் என விதுர் நீதி சொல்கிறது?

மனித ஆயுள் அவன் பிறக்கும்போது நிர்ணயம் செய்யப்படுகிறது என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது உண்மையென்றாலும், சிலரை நாம் குறை ஆயுளில் இறந்துவிட்டார், அல்ப ஆயுசுல போயிட்டாருன்னு சொல்லிக் கேட்டிருப்போம்.
Continue reading →

ஜெயலலிதா மரணம்… விலகுமா மர்மம்? – ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்!

றுமுகசாமி ஆணையம்’- 2017, செப்டம்பர் 25-ல் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அரசாணை வெளியிடப்பட்டு, நியமிக்கப்பட்ட இந்த ஒரு நபர் விசாரணை ஆணையம் ஓராண்டைக் கடந்திருக்கிறது. 2016 செப்டம்பர் 22-ல் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டாண்டுகள் ஆகிவிட்டன.  ஓராண்டாக ஆணையத்தில் நடைபெற்றுவரும் விசாரணை முதல் குளறுபடிகள் வரையிலான  ஒரு மினி ஸ்கேன் ரிப்போர்ட் இது

Continue reading →

வராமல் தடுக்கலாம்… வந்தாலும் ஜெயிக்கலாம்!

நீரிழிவு நோயாளிகள் மகிழ்ச்சி அடையும் விதத்தில் புதிய புதிய சிகிச்சைகளும், கண்டுபிடிப்புகளும் மருத்துவ உலகில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நல்ல தரமான வாழ்க்கைக்கு உதவக்கூடிய சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ள நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர் பரணீதரனிடம் பேசினோம்… நீரிழிவு மேலாண்மையைப் பொருத்தவரையில், நடைமுறையில் நாம் பல இடங்களில் கவனம் செலுத்துவதில்லை.

Continue reading →

வயிறு கவனம்

ண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்!’ என்று மாற்றிச் சொல்லலாம். அதுதான்  அழுத்தம் திருத்தமான, மறுக்க முடியாத உண்மை. வயிற்றைச் சரியாக, முறையாகப் பராமரிக்காமல்விடுவதுதான் பல நோய்கள் நம் மீது படையெடுப்பதற்கு மூல காரணம். நாம் எல்லோருமே கேட்டுக்கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான கேள்வி `வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கிறோமா?’ நிச்சயமாக இல்லை. நம்மில் பெரும்பாலானோர் அதை குப்பைக்கூடையாகத்தான் பயன்படுத்துகிறோம்.

Continue reading →