ஆயுள் விஷயத்தில் விதி மாறுமா? எந்தெந்த பாவத்தால் ஆயுள் குறையும் என விதுர் நீதி சொல்கிறது?

மனித ஆயுள் அவன் பிறக்கும்போது நிர்ணயம் செய்யப்படுகிறது என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது உண்மையென்றாலும், சிலரை நாம் குறை ஆயுளில் இறந்துவிட்டார், அல்ப ஆயுசுல போயிட்டாருன்னு சொல்லிக் கேட்டிருப்போம்.

அதெப்படி விதி மாறும். ஆனால் விதுர் நீதியில் ஆயுள் நாம் செய்யும் சில விஷயங்களால் கட்டாயம் மாறிவிடும் என்று விதுர் நீதி குறிப்பிடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மகாபாரதம்

மகாபாரதத்தில் உள்ள மிக முக்கிய காலக் கணிதன் தான் விதுரன் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவர் மிகப்பெரிய காலக் கணிதனாகக் கருதப்படுகிறார். அதனால் தான் மனித ஆயுள் மற்றும் விதியைப் பற்றி மிகப்பெரிய நம்பிக்கை உண்டு. அவரின் பெயரால் விதுரன் நீதி என்ற தனி பெயரே உண்டு.

விதுர் நீதியும் மனித ஆயுளும்

ஒருமுறை திருதிராஷ்டிரன் விதுரனை அழைத்து ஒரு கேள்வியைக் கேட்டார். மனிதனுக்குப் பொதுவாக நூறு வருடங்கள் வரை ஆயுள் என்று சொல்வார்களே! அப்படியிருந்தும் முழுமையான ஆயுள் வரையிலும் யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே அதற்கு என்ன காரணம் என கேட்டார்.

விதுரன் பதில்கள்

விதுரன் ஆறு கூர்மையான விஷயங்களை இதற்கு பதிலாகக் குறிப்பிடுகிறார். இந்த ஆறு விஷயங்கள் தான். அந்த ஆறு விஷயங்கள் தான் மனிதனுடைய ஆயுளைக் குறிக்கும் வேலையைச் செய்கின்றன என்று குறிப்பிடுகிறார். அவை,

1. அதிக கர்வம் கொள்ளுதல்

2. அதிகம் பேசுதல்

3. தியாக மனப்பான்மை இல்லாமை

4. கோபம்

5. சுய நலம்

6. நண்பர்களுக்கு துரோகம் செய்வது

ஆகிய ஆறு விஷயங்களும் தான் மனிதனுடைய ஆயுளைக் குறைக்கும் விஷயங்கள்.

செய்ய வேண்டிய விஷயங்கள்

கர்வத்தை அழித்தல்

தான்தான் கெட்டிக்கார், செல்வந்தர், எல்லோருக்கும் வாரி வாரி வழங்குபவன், தன்னைத் தவிர மற்றவர்கள் கெட்டவர்கள் என்று நினைப்பதால் தான் ஒருவருடைய கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் அதிகமாக இருப்பவர்களை கடவுள் சீக்கிரமாகவே அழித்துவிடுவார். அப்படி கர்வம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தால் தான் செய்யும் விஷயங்களில் என்னென்ன குற்றங்கள் இருக்கிறது என்று தெரிந்து ஆராய்ந்து ஒப்புக் கொள்பவர்களாகவும் அடுத்தவர்களுடைய விஷயங்களில் இருக்கும் நல்ல குணங்களைப் பார்த்து பாராட்ட வேண்டும்.

அதிகப் பேச்சு

மிக அதிகமாகப் பேசுகின்றவர்கள் தேவையில்லாத வீண் விஷயங்களைப் பற்றி நிறைய பேசி, வீண் வம்பை விலைக்கு வாங்குகின்றவர்களாக இருப்பார்கள். அதனால் தான் பகவத் கீதையில் கூட, கடுமையும் உண்மையும் பிரியமும் உள்ள வார்த்தைகள் எதுவோ அந்த வார்த்தைகளை மட்டும் தான் பேசுவது தான் தவமான வாழ்க்கை.

தியாகம் செய்யாமை

எல்லா விஷயங்களையும் நாம் மட்டுமே தான் அனுபவிக்க வேண்டும் என்ற அதீத ஆசையின் காரணமாக நம்முடைய தியாக மனப்பான்மை அழிந்துவிடும். நாம் இந்த உலகத்தில் பிறந்ததே அடுத்தவர்களுக்கு உதவுவதற்கு என்ற தியாக மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வுண்டியது அவசியம்.

கோபம்

கோபம் தான் மனிதனுடைய மிகப்பெரிய எதிரியாக இருக்கிறது எ்னறு சொன்னால் அது மிகை அல்ல. கோபத்தை வென்ற ஒருவனால் தான் யோகியாக இருக்க முடியும். எது தர்மம், எது அதர்மம் என்று ஆராய வேண்டும். நாம் யார் மீதும் கோபப்படக்கூடாது. அதேசமயம் யாராவது நம்மீது கோபப்பட்டால், அதை சகித்துக் கொள்கிற மனப்பாங்கு இருக்க வேண்டும்.

சுயநலம்

சுயநலம் என்பது நம்மை மிருகத் தன்மையுடைய ஆளாக மாற்றிவிடும். அது முற்றிலும் நம்மை தவறாக வழிநடத்து. அதன்மூலம் நம்முடைய மனதில் இருக்கும் அன்பு, கருணை ஆகியவற்றை அழித்துவிடும். அடுத்தவர்கள் இன்பமாக இருப்பதைக் கண்டு, நாமும் இன்புற வேண்டும் என்று நினைப்பது மிக மிக தவறு. அடுத்தவர்கள் கஷ்டப்படுவதைக் கண்டு, நாமும் மனதால் கஷ்டப்பட்டால் தான் சுயநலம் நம்மை விட்டு அழிந்து போகும்.

துரோகம்

உலகத்தில் நல்ல நட்பு கிடைப்பது என்பது மிக மிக அரிய விஷயம். அப்படியிருக்கின்ற பொழுது, துரோகம் செய்வதைப் போல ஏதாவது ஒரு கெட்ட விஷயம் இருக்க முடியுமா என்ன? எல்லோரிடமும் எந்த விருப்பு வெறுப்புமின்றி, நட்பு மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் மீது கருணை செலுத்த வேண்டும்.

%d bloggers like this: