இந்த ஒரு பொருள் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும் என்பது தெரியுமா?

அடர்த்தியில்லா மெலிந்த கூந்தல் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. இந்த பிரச்சனைகளை போக்க எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால், முடி உதிர்வு பிரச்சனைக்கு எப்போதும் முதல் மருந்து என்றால் அது செம்பருத்தி தான். செம்பருத்தி கூந்தலுக்கு ஆரோக்கியத்தை

அளித்து, அடர்த்தி மற்றும் மிருதுவான தன்மையை கொடுக்கிறது.

முடி உதிர்ந்த இடத்தில் முடி வளராமலேயே இருந்தாலும், தொடர்ந்து செம்பருத்தியை பயன்படுத்தினால் முடி வளரும். முடி உதிர்வு, அடர்த்தியான முடி வளர்தல், இளநரை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வை தரக்கூடிய ஒரே பூ என்றால் அது, செம்பருத்தி தான்.

செம்பருத்தியின் பலன்கள்

செம்பருத்தியில் உள்ள வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து வலிமையான கூந்தல் வளர உதவுகிறது. மேலும், இதில் உள்ள அமினோ அமிலம் கூந்தலை ஆரோக்கியமாக, உறுதியாக மற்றும் மிருதுவாக வளர செய்கிறது. மேலும், இது உங்கள் முடிக்கு ஒரு கன்டிஷனராகவும் செயல்படும். அதுமட்டுமல்லாது, தலையில் அரிப்பு தொல்லை, பொடுகு தொல்லை மற்றும் பிற பிரச்சனைகளுக்கும் இது தகுந்த மருந்தாகும்.

இப்போது செம்பருத்தியை எப்படியெல்லாம் தலைக்கு பயன்படுத்தலாம் என்று காண்போம்.

தேய்காய் பாலுடன் செம்பருத்தி

2 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி இதழ்கள், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால், 2 டேபிள் ஸ்பூன் தேன், 2 டேபிள் ஸ்பூன் தயிர், 4 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர், அதனை ஸ்காப்பில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிடவும். இதை அடுத்து, மிதமான சூடுள்ள தண்ணீரால் தலையை அலச வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை இதனை செய்யலாம். பொலிவிழந்த வறண்ட கூந்தல், மிருதுவானதாக மாற வேண்டும் என நீங்கள் விரும்பினால் இதனை செய்து பார்க்கலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

முட்டையுடன் செம்பருத்தி

2 முட்டைகளின் வெள்ளை கரு மற்றும் 3 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி இதழ்களை எடுத்துக் கொண்டு ஒரு பேஸ்ட் பதத்திற்கு அதனை கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தலை முழுவதும் தேய்க்க வேண்டும். 20 நிமிடங்களுக்கு இது உங்கள் தலையில் நன்கு ஊற வேண்டும். பின்னர், லேசான கெமிக்கல் கொண்ட ஷாம்பூவால் தலையை கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே செய்யலாம். முட்டை சாதாரணமாகவே முடிக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. எனவே, இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து கூந்தல் வளர்ச்சியை பெறலாம்.

இஞ்சியுடன் செம்பருத்தி

1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி இதழ்களை ஒன்றாக சேர்த்து கலந்து மிருதுவான பேஸ்டாக கலந்து கொள்ளவும். பின்னர், தயார் செய்து வைத்துள்ள பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் முழுவதுமாக படும்படி நன்கு தேய்க்கவும். இதையடுத்து, முடி முழுவதுமாக இதை அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் இதனை தலையில் ஊற வைத்து பின்னர், மிதமான சூடுள்ள நீரில் கழுவவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்யலாம். கூந்தல் இழந்த இடங்களில் மீண்டும் கூந்தல் வளரவில்லையே என கவலைப்படுபவர்களுக்கு இந்த முறை நல்ல பலனை கொடுக்கும் என்றே கூறலாம்.

எண்ணெயுடன் செம்பருத்தி

8 செம்பருத்தி பூக்கள், 8 செம்பருத்தி செடி இலைகள் மற்றும் 1 கப் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். செம்பருத்தி பூ மற்றும் இலைகளை கழுவி நன்கு அரைத்து கொள்ளவும். தேய்காய் எண்ணெயை சூடேற்றி அரைத்து வைத்த செம்பருத்தி கலவையை அதில் சேர்க்கவும். 2 நிமிடத்திற்கு அதனை சூடேற்றி பின்னர் மூடி வைக்கவும். அது குளிர்ந்தவுடன் 2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை எடுத்து ஸ்கால்ப்பில் தேய்த்து மசாஜ் செய்யவும். மீதமுள்ள எண்ணெயை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளவும். எண்ணெயை முழுவதுமாக தேய்த்த பிறகு 10 நிமிடத்திற்கு மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், மிதமான கெமிக்கல் கொண்ட ஷாம்பூவால் தலையை கழுவவும். வாரத்திற்கு 3 முறை இதை தொடர்ந்து செய்யலாம்.

தயிருடன் செம்பருத்தி

1 செம்பருத்து பூ, 3 முதல் 4 செம்பருத்தி இலைகளை எடுத்துக் கொண்டு நன்று அரைத்து கொள்ளவும். அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பேஸ்ட்டை தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர், மிதமான ஷாம்பூவால், மிதமான சூடுள்ள நீரில் தலையை கழுவவும். வாரத்திற்கு 2 முறை இதை ட்ரை செய்யலாம். இதன்மூலம் வலிமை இழந்த கூந்தலை, முற்றிலும் ஆரோக்கியமான வலிமையான கூந்தலாக மாற்றலாம்.

மருதாணியுடன் செம்பருத்தி

ஒரு கை நிறைய செம்பருத்தி பூக்கள், கை நிறைய செம்பருத்தி இலைகள், கை நிறைய மருதாணி இலைகளை எடுத்துக் கொண்டு அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அத்துடன் பாதி எலுமிச்சம் பழ சாற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊற வைத்து பின்னர் கழுவி விடவும். வாரத்திற்கு 2 முறை இதை செய்யலாம். இதனை செய்வதன் மூலன் பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கி விடும்.

செம்பருத்தி ஷாம்பூ

15 செம்பருத்தி இலைகள், 15 செம்பருத்தி பூக்களை ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அதை ஆற வைத்து அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை பயன்படுத்தி உங்கள் கூந்தலை கழுவவும். சாரதாரணமாக உபயோகிக்கும் ஷாம்பூவை விட இது நல்ல பலனை கொடுக்கும்.

செம்பருத்தி கன்டிஸ்னர்

8 செம்பருத்தி பூக்களை தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்து கொள்ளவும். இதை ஸ்கால்ப்பில் தேய்த்து 1 மணிநேரம் ஊற வைத்து மிதமான சூடுள்ள நீரில் கழுவவும். வாரத்திற்கு இரு முறை இதை செய்யவும்.

வெங்காயத்துடன் செம்பருத்தி

ஒரு வெங்காயத்தை தோல் உரித்து நன்கு அரைத்து பின்னர் அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். அத்துடன் தண்ணீர் சேர்த்து அரைத்த செம்பருத்தி இலை சாற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஸ்கால்ப்பின் அனைத்து பகுதிகளிலும் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர், மிதமான சூடுள்ள தண்ணீரால் தலையை கழுவவும். வாரத்திற்கு 3 முறை இதனை செய்ய நல்ல பலன் கிடைக்கும். இதனால் உதிர்ந்த முடியை மீண்டும் வளரச் செய்யலாம்.

%d bloggers like this: