உங்களின் மரணத்தை தள்ளி போடும் காபி…! சிறுநீரக கோளாறு பற்றிய ஆய்வின் ஆச்சரிய தகவல்..!

ஒவ்வொரு நாளும் பல வகையான கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த உலகம் இயங்கும் காலம் வரையில் கண்டுபிடிப்புகளுக்கு நிச்சயம் பஞ்சமே இருக்காது. பொதுவாக ஒரு வழக்கு மொழி

சொல்வார்கள்…”நிற்பது வீழும், நகர்வது வாழும்”..! இந்த வழக்கு மொழிக்கு ஏற்ப தான் இங்கு எல்லாவகையான உயிரினங்களும் இயங்கி கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் சிறுநீரக கோளாறுகளை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு அற்புத தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால், கிட்னி பிரச்சினை உள்ளவர்கள் காஃபி குடித்து வந்தால் அவர்களின் ஆயுட்காலம் நீடிக்குமாம். இது எப்படி சாத்தியம் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

சிறுநீரக பிரச்சினை

இன்று பலர் இந்த சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகின்றனர். சரியான உணவு முறையும், தண்ணீர் தட்டுப்பாடும் தான் சிறுநீரக கோளாறுகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரகம் பிரச்சினை கொடுக்க தொடக்கி விட்டால் உங்களின் வாழ் நாட்கள் குறைந்து கொண்டே வருகிறது என்று அர்த்தம்.

கற்கள் எவ்வாறு உருவாகிறது..?

கிட்னியில் முதன்மையான வேலை என்னவென்றால், ரத்தத்தை சுத்தம் செய்வது மற்றும் ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை வெளியேற்றுதலே. அவ்வாறு செய்யும் போது, உடலின் கழிவுகளை சிறுநீரின் மூலம்வெளியேற்றுவதே இதன் முக்கிய செயல்பாடு. அந்த வகையில் சிறுநீரகத்தில் தண்ணீரின் அளவு குறைந்தாலோ அல்லது உப்பின் அளவு அதிகரித்து கொண்டே போனாலோ சிறுநீரகத்தில் கற்களாக மாறி விடுகிறது.

காஃபி காதல்காரர்கள்..!

காஃபி என்றதும் அதற்காக ஒரு பெரிய கூட்டமே அலைமோத தொடங்கும். இதன் மணமும், ருசியும் மக்களை அதற்குள்ளே கட்டி போட்டு வைத்துள்ளது. காபியை குடித்து வருவதால் பல்வேறு நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. பலருக்கும் பிடித்தமான இந்த காபி சிறுநீரக பிரச்சினைக்கும் உதவும் என்றால் இது ஆச்சரியத்துக்குரியதே..!

காஃபியின் காஃபைன் எப்படி..?

காபியின் தன்மையை அதிகரிப்பதே இந்த காஃபின் தான். இது காபியின் தன்மையையும், மணத்தையும் தர கூடிய முக்கிய மூல பொருளாகும். சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் காபியை தொடர்ந்து குடித்து வந்தால், அவர்களின் ஆயுட்காலம் கூடும் என ஆய்வுகள் சொல்கிறது.

காஃபி ஆய்வு…

நாள்பட்ட சிறுநீரக நோயால் அவதிப்படுவோருக்கு இந்த காபி உதவுவதாக போர்ச்சுகளின் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். கிட்டத்தட்ட 2300 பேரை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் காபியை தொடர்ந்து குடித்து வருவதால் அவர்களின் ஆயுட்காலம் கூடும் என 24 சதவீதம் கண்டறியப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் நிலை…

காபியை மிகவும் குறைவான அளவு எடுத்து கொள்ளும் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள், இறப்பில் இருந்து தப்பிக்க முடியாதாம். இதுவே, ஓரளவு காபியை குடித்து வருபவருக்கு 12 சதவீதம் ஆயுட்காலம் கூட வாய்ப்புள்ளதாம். இவர்களே முதல் மற்றும் இரண்டாம் நிலையை சார்ந்தவர்கள் ஆவர்.

சிறந்த நிலை எது..?

மிதமான அளவில் காபி குடிக்கும் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்கு 22 சதவீதம் ஆயுட்காலம் கூட வாய்ப்புள்ளது. சிறந்த நிலை எதுவென்றால், அதிக அளவில் காபி குடிக்கும் பழக்கம் உள்ள சிறுநீரக கோளாருடையவர்கள் 24 சதவீதம் அவர்களின் உயிர் வாழும் காலம் நீடிக்க படுகிறதாம்.

சாவை தள்ளி போடும் காபி..!

கிட்னி கோளாறு உள்ளவர்களின் வாழ்நாளை 24 சதவீதம் நீடிக்கும் தன்மை காபியில் உள்ள காபினுக்கு உள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது ஒருவரின் உடலின் மெட்டபாலிசத்தை சிறிது காலம் செயல்பட அதிகரிக்கும். ஆதலால், சாவை சிறிது காலம் இது தள்ளி போடும்.

இறப்பு வராதா..?

போர்ச்சுகல் விஞ்ஞானிகள் காபியை குடித்து வந்தால் சாவை தள்ளி போட முடியும் என்றே கூறியுள்ளனர். அதாவது, காபியை குடித்து வரும் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களின் இறப்பை காபி தடுக்காது. அவர்கள் 4 மாதத்தில் இறக்க நேர்ந்தால், அந்த ஆயுட்காலத்தை இது 24 சதவீதமாக கூட்டுமாம்.

கிட்னி ஜாக்கிரதை..!

எனவே, உங்களுக்கு கிட்னியில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள் நண்பர்களே. முதல் நிலையிலே சிறுநீரக பிரச்சினைகளை குணப்படுத்துவது சிறந்தது. இவை அதிக காலம் எடுத்து கொண்டால் பிறகு உயிருக்கே உலை வைத்து விடும்.

%d bloggers like this: