புஷ்அப்ஸ் (அ) தண்டால் எடுப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

உடற்பயிற்சி செய்பவர்களின் நோக்கமே கட்டுமஸ்தான உடம்புதான். ஜிம்மிற்கு சென்றுதான் கட்டுமஸ்தான உடம்பை பெற வேண்டும் என்றில்லை. வீட்டில் செய்யும் உடற்பயிற்சிகள் மூலமாகவே அழகிய உடலமைப்பை பெறலாம். வீட்டில் செய்யும் உடற்பயிற்சி

என்றால் அதில் முதலில் நம் நினைவிற்கு வருவது புஷ் அப்ஸ் (அ) தண்டால் தான்.

தண்டால் எடுப்பது உடலின் அனைத்து பாகங்களையும் வலுப்படுத்த கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். அதேசமயம் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். ஆனால் இதனை சரியான முறையில் மட்டுமே செய்யவேண்டும். ஏனெனில் இதனை தவறாக செய்தால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மோசமானதாக இருக்கும். இந்த பதிவில் புஷ் அப்ஸால் ஏற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உடல் முழுவதற்குமான உடற்பயிற்சி

உங்கள் உடலின் அனைத்து தசைகளும் வலுவடைய விரும்பினால் உங்களுக்கு புஷ்அப்ஸ் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். இது உங்களின் கை தசைகள் மற்றும் கீழ்ப்புற உடலை வலிமைப்படுத்த உதவுகிறது. இது உங்கள் தசைகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து செயல்படவும், வலுப்படவும் உதவுகிறது.

சமநிலை மற்றும் நிலைத்தன்மையை உருவாக்குகிறது

பிரபல உடற்பயிற்சி நிபுணரின் கருத்துப்படி புஷ்அப்ஸ் தான் அனைத்து உடற்பயிற்சிகளை காட்டிலும் சிறப்பான பயனை வழங்கக்கூடியதாம். முறையான புஷ்அப்ஸ் உங்கள் தசைகளை வலுப்படுத்தி தசை நார்களை சீராக்குகிறது. இந்த தசைநார்கள்தான் உங்கள் உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது.

தசைகளின் அடர்த்தியை அதிகரிக்கிறது

வயதை பொறுத்து உங்கள் தசைகளின் அடர்த்தி மாற்றமடைகிறது மேலும் ஆற்றல் செலவழிக்கும் திறனும் மாறுபடுகிறது. தசைகளின் அடர்த்தியை அதிகரிப்பது உடற்பயிற்சியின் முக்கிய பணியாக கருதப்படுகிறது. சில புஷ்அப்ஸ் செய்வதாலேயே உங்களின் தசைகளின் அடர்த்தி அதிகரித்துவிடாது.தொடர்ந்து முறையான புஷ்அப்ஸ் மூலம் மட்டுமே உங்கள் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்க இயலும்.

மேற்புற உடலமைப்பு

மேற்புற உடலின் கச்சிதமான அமைப்பிற்கு புஷ்அப்ஸ் தான் சிறந்த உடற்பயிற்சியென அனைவராலும் நம்பப்படுகிறது. முறையாக புஷ்அப்ஸ் செய்யும்போது உங்களின் மார்பு, கை தசைகள் வலுப்பெறுவதோடு உங்கள் அடிவயிற்று பகுதியின் கொழுப்பும் கரைக்கப்படுகிறது. இதில் சில பக்கவிளைவுகளும் உள்ளது.

தசை ஏற்றத்தாழ்வுகள்

புஷ்அப்ஸ் உங்கள் மார்பு, தோள்பட்டை தசைகள் மற்றும் கை தசைகளை வலுவாக்க உதவுகிறது. ஆனால் அதிகளவு புஷ்அப்ஸ் உங்கள் தசைகளில் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கடுமையான புஷ்அப்ஸ் பயிற்சி உங்கள் உடலின் மேற்பகுதியை மாற்றக்கூடும்.

காயங்கள்

புஷ்அப்ஸ் தொடர்ந்து செய்பவர்கள் தினந்தோறும் அதன் எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டே செல்வார்கள். விரைவில் உடல் வலுவடைய வேண்டும் என்று இவர்கள் செய்யும் இந்த முயற்சி அவர்களுக்கே காயங்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

தனித்துவமின்மை

புஷ்அப்ஸ் மிகச்சிறந்த உடற்பயிற்சி என்பதில் சந்தேகமில்லை. அது உங்களுக்கு சிறந்த பலன்களை தரவல்லது என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் இதன் பலனை அனுபவித்தவர்கள் இது மட்டுமே சிறந்த உடற்பயிற்சி என்று எண்ணுவது தவறான ஒன்று. ஏனெனில் மற்ற உடற்பயிற்சிகளும் உங்களுக்கு பலனை தரக்கூடியவைதான். இதனால் உடலின் கீழ்ப்பகுதிக்கு கிடைக்கும் பலன்கள் மிகக்குறைவே. புஷ்அப்ஸ் உடற்பயிற்சியில் ஈடுபடும் முன் சில முன்னெச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

அவசரம் தேவையில்லை

உண்மைதான். நீங்கள் எத்தனை புஷ்அப்ஸ் செய்கிறீர்கள் என்பது முக்கியமானதுதான். ஆனால் அவசரப்பட்டு அதனை தவறான முறையில் செய்யக்கூடாது.

நேர்கோடு

உங்களுடைய கால், இடுப்பு, கழுத்து மற்றும் தலை என அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி புஷ்அப்ஸ் செய்யுங்கள். பொறுமையாக உடலை கீழே கொண்டுவந்து மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டுவரவும். ஒருவேளை உங்களால் உடலை மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டு வர இயலவில்லை என்றால் வேறு நிலைகளை முயற்சிக்கவும்.

தோளை உயர்த்தாதீர்கள்

உங்கள் உடலை தூக்கும்போது கண்டிப்பாக உங்கள் தோள்பட்டையை உயர்த்தாதீர்கள். தோள்பட்டையை பின்னோக்கி மட்டுமே உயர்த்தவேண்டும்.

%d bloggers like this: