இன்று குருப்பெயர்ச்சி… பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரர்கள் யார் யார்?
இன்று இரவு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
நவகிரகங்களில் ஒருவரான குருபகவானின் பெயர்ச்சி இன்று நடைபெற இருக்கிறது. வியாழன் எனும் வானியல் கிரகமே ஜோதிட சாஸ்திரத்தில் குரு. பிரகஸ்பதி, தனகாரகன், புத்திரகாரகன், லோகபூஜ்யர், வாகீசர், பீதாம்பரர், பொன்னன் என்றெல்லாம் குரு பகவானைச் சிறப்பித்துச் சொல்வார்கள். இவர் தேவர்களின் குரு, சகல சாஸ்திரங்களும் அறிந்தவர், நவகிரகங்களில் சக்தி வாய்ந்தவர், முழுமையான சுபகிரகம் இவர். எப்போதும் நன்மை செய்பவர், எப்போதும் மற்றவர்களுக்கு உதவக்கூடியவர் என்று ஜோதிடம் இவரைப் பலவாறாகப் போற்றும்..
ஆயிரம் பக்க ஃபைல்! – அதிரடி சுவாமி
இனி சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பக்கத்தை கவனமாகப் பாரும். தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்ப சுவாமி ரெடி!’’ என்றபடி வந்தார் கழுகார்.
‘‘சுவாமி டெல்லியில் பி.ஜே.பி-காரர்களை அல்லவா திட்டிக் கொண்டிருக்கிறார்’’ என்றோம்.
‘‘ஆமாம். சொந்தக் கட்சியினரையே திட்டித் திட்டி போர் அடித்திருக்கும். காரணம், அது மட்டுமல்ல. தமிழக அமைச்சர்கள்மீதான ஊழல் பட்டியலை சுப்பிரமணியன் சுவாமிக்கு அ.தி.மு.க எதிர் கோஷ்டியினர் பக்கம் பக்கமாக அனுப்பி வருகிறார்களாம். இப்படி