Daily Archives: ஒக்ரோபர் 5th, 2018

தினகரனைச் சந்தித்தது உண்மைதான்… ஆனால்?’ – ஓ.பன்னீர்செல்வம் நீண்ட விளக்கம்

எங்கள் இருவருக்கும் தெரிந்த நண்பர் மூலம் நான் தினகரனைச் சந்தித்தேன். ஆனால், அப்போது அவர் பேசியதில் எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Continue reading →

ராங்கால்- நக்கீரன் 5.9.18

ராங்கால்- நக்கீரன் 5.9.18 Continue reading →

கறையான் முதல் புறா வரை… அலட்சியமாக இருந்தால் ஆபத்து! –

ம்பது, அறுபது வருடங்களைக் கடந்த அந்தக் காலத்து வீடுகள் பலவும் இன்றும் உறுதியாக, அஸ்திவாரம் ஆட்டம் காணாமல் அப்படியே நிற்பதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் புதிதாகக் கட்டிய வீடுகளில் ஆறே மாதங்களில் கறையான் பரவி, வீட்டின் முக்கியமான ஆவணங்களையும் காலங்காலமாகச் சேர்த்துவைத்த புத்தகங்களையும் நினைவுச் சின்னங்களையும் அரித்து காலி செய்துவிடுவதையும் பார்க்கிறோம். இன்றைய வீடுகளில் மனிதர்கள், செல்லப் பிராணிகளுடன் கறையான்கள், கரப்பான்கள், பல்லிகள், பூரான்களும் சேர்ந்தே குடித்தனம் செய்கின்றன.

Continue reading →

நிதிக் கல்வி… இளைய தலைமுறையின் உடனடித் தேவை!

வீட்டில் நம் பெற்றோரும், பள்ளியில் நமது ஆசிரியர்களும், சமூகத்தில் நமது பெரியோர்களும் நமக்கு சொல்லித் தராத ஒரு பாடம் என்றால் அது பணத்தைக் கையாளும் நிதிக் கல்விதான். பல தவறுகளைச் செய்து, சம்பாதித்தையெல்லாம் தொலைத்துக் கற்றுக்கொண்ட அந்தப் பாடத்தை, அடுத்த தலைமுறைக்காவது நாம் அவசியம் கற்றுத் தரவேண்டும்.
சாதி, மதம், அரசியல் எனப் பல விஷயங்களை டீன் ஏஜ் குழந்தைகளிடம் பேசத் தயங்காத பெற்றோர்கூட, பணம் மற்றும் அதைக் கையாளும் விதம் பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. இதற்குக் காரணம், நாமே பணம் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான். 45 வயதில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒரு அப்பாவுக்கு, 15% தள்ளி எடுத்த சீட்டுப் பணத்தை வங்கி எஃப்.டி-யில் போட்டு வைக்கக்கூடாது என்பது தெரியவில்லை. கணவர் தரும் வீட்டுச் செலவில் கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடித்து, குந்துமணி அளவுக்காவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கும் அம்மாவுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை பெரிய லாபம் தந்துவிடவில்லை எனத் தெரியவில்லை. தவிர, தப்பாக எதுவும் சொல்லித் தந்துவிடுவோமோ என்கிற அச்சமும் அவர்களிடம் இருக்கிறது.

Continue reading →

ஸ்மார்ட்’ஆகப் பயன்படுத்துவோம்

ம் வாழ்க்கையே ஸ்மார்ட்போன்களைச் சுற்றித்தான் சுழல்கிறது. இப்படி நம்முடன் பிணைந்து கிடக்கும் இந்த ஸ்மார்ட்போன்களில் என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்வதைவிட, என்ன செய்யக் கூடாது என்பதைத் தெரிந்துகொள்வதே மிகவும் முக்கியம். அப்படிச் சில விஷயங்கள்: 

நாளைய பயம்

நாளை என்கிற எதிர்பார்ப்போடுதான் மனித ஓட்டம் தொடர்கிறது. எதிர்காலம் குறித்து சிறு வயதிலிருந்தே சிந்திக்க ஆரம்பித்துவிடுகிறோம். ஆனால், `இந்த நொடி கடந்து போய்விடுமே’ என்கிற எண்ணம்கொண்டவர்கள் எதிர்காலம் குறித்து அதீதமாகக் கற்பனை செய்துகொள்கிறார்கள்; பயப்படுகிறார்கள். `நாளை என்ன ஆகுமோ’ என்ற பயத்தில் `இன்றை’த் தொலைத்துவிடுகிறார்கள். இந்த பயத்துக்கு ‘குரோனோபோபியா’ (Chronophobia) என்று பெயர். கிரேக்கத்தில் ‘குரோனோஸ்’ என்றால் நேரம் என்று அர்த்தம்.

யாருக்கு வரும் இந்த பயம்?

Continue reading →