அறுபதுக்கு மேலும் ஆரோக்கியம்!

வயது அறுவதை தாண்டும்போது, உடலுக்கு கலோரிகள் குறைவாகவே தேவைப்படும்; ஆனால், ஊட்டச்சத்து போதிய அளவு இருக்க வேண்டும். அதனால், கலோரி குறைவான, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
பழங்கள், காய்கறிகள், அரிசி, ஓட்ஸ், கோதுமை போன்ற முழு தானியங்கள், வைட்டமின் – டி, கால்ஷியம் நிறைந்த, கொழுப்பு நீக்கிய பால், பாலாடை, சோயா பால், மீன், முட்டை வெள்ளைக் கரு, வெள்ளரி, எள் போன்ற விதைகள் போதுமான அளவு சாப்பிடலாம்.

வெள்ளைச் சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவில் செய்த பாஸ்தா, பிரட், மைதா போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, நடைப் பயிற்சி, ‘டிவி’ முன் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல் இருப்பது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, நல்ல துாக்கம் போன்றவை, 60 வயதிற்கு மேல் ஆரோக்கியமாக இருக்க வைக்கும். ‘என்ன இருக்கு இனி, ஆசைப்படுறதை சாப்பிடணும்’ என்ற மனநிலை இருக்கக் கூடாது.

சுபத்ரா சுந்தர்,
நியூட்ரிஷனிஸ்ட், கோவை.

%d bloggers like this: