Advertisements

ஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்

சருமத்திற்கு ஈரப்பதம் சரியாக இருக்கும்போது, சருமத்தின் மீள்தன்மை சரியாக இருக்கும், இதனால் சருமத்தில் மெல்லிய கோடுகளும் சுருக்கமும் உருவாவது தடுக்கப்படும். இவை ரேசரால் ஏற்படும் புண்கள் வராமல் தடுக்கவும் உதவும்.

 

மாய்ஸ்டுரைசரைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். வறண்ட சருமம் கொண்டவர்கள் திக்கான மாய்ஸ்டுரைசர் பயன்படுத்த வேண்டும், சாதாரண சருமம் கொண்டவர்கள் ஈரப்பதமூட்டும் (மாய்ஸ்டுரைசிங்) லோஷன் பயன்படுத்த வேண்டும், இவை லேசானவை மற்றும் எண்ணெய்ப்பசை குறைவானவை. எண்ணெய்ப்பசை கொண்ட சருமம் கொண்டவர்கள் அல்லது இரண்டு தன்மையும் கொண்ட சருமம் கொண்டவர்கள் ஸ்கின் டோனர் அல்லது ஜெல் பயன்படுத்த வேண்டும். எண்ணெய்ப்பசை கொண்ட சருமமும் முகப்பருப் பிரச்சனையும் கொண்டவர்கள், கிளைக்காலிக் அமிலம் அல்லது சாலிசிலிக் அமிலம் கொண்ட தயாரிப்பைப் பயன்படுத்தலாம். அவை இறந்த செல்களை அகற்றவும் தோலின் நுண் துளைகள் அடைபடுவதைத் தடுக்கவும் உதவுகின்றன.

பல ஆண்களுக்கு ஷேவிங் செய்யும்போது சிராய்ப்பு அல்லது ரேசரால் உண்டாகும் தோல் தடிப்புகள் போன்ற பிரச்சனைகள் வருவதுண்டு. சில தயாரிப்புகள் இது போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவக்கூடும்.

ஷேவிங் செய்வதற்கு முன்பு பூசும் எண்ணெய் கடைகளில் கிடைக்கும், அதனைப் பூசிக்கொண்டால் தாடி ரோமங்கள் மிருதுவாகி சருமம் ஈரப்பதமடையும்.

ஷேவிங் செய்வதால் முகத்தில் எரிச்சல் ஏற்பட்டால், கற்றாழை கொண்ட ஷேவிங் கிரீமைப் பயன்படுத்திப் பார்க்கலாம். உள் முளைத்திருக்கும் ரோமங்களின் காரணமாக, தோலில் உங்களுக்கு சிராய்ப்புகள் ஏற்பட்டால், சாலிசிலிக் அமிலம் அல்லது கிளைக்காலிக் அமிலம் உள்ள ஷேவிங் கிரீமைப் பயன்படுத்தலாம். இந்த அமிலங்கள் தோலில் இருக்கும் துளைகளின் அடைப்புகளை நீக்க உதவும்.

கொஞ்சம் அதிகமாக நீர் சேர்த்துப் பயன்படுத்தும் கிரீமை முகத்தில் பூசி ஒரு நிமிடம் அப்படியே விடவும். பிறகு தாடி ரோமங்களை ஷேவிங் செய்யலாம். இந்த நேரத்தில் ரோமங்கள் மிருதுவாகும்.

ஷேவிங் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அவற்றில் நறுமணம் இல்லாத ஹைப்போஅலர்ஜெனிக் பொருள்கள் கலந்துள்ளதா எனப் பார்க்கவும். அவை உங்கள் சருமம் மேலும் எரிச்சலடையாதபடி தடுக்கும்.

ரேசர்: அடுத்த முக்கியமான விஷயம் நீங்கள் பயன்படுத்தும் ரேசராகும். எலக்ட்ரிக் ரேசர்கள் குறைவான எரிச்சலையே உண்டாக்கும். தோலில் எரிச்சல், ரேசரால் ஏற்படும் தோல் தடிப்புகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதைப் பொறுத்தமட்டில், பல பிளேடுகள் கொண்ட (மல்டிபிளேடு) ரேசர்களை விட ஒற்றை (சிங்கிள்) பிளேடு ரேசர்கள் சிறந்தவை.

ஷேவிங் செய்த பிறகு முகத்தின் சருமத்தை மென்மையாக்கும் ஆஃப்டர் ஷேவ் லோஷனைப் பூசி, பிறகு மாய்ஸ்டுரைசர் பயன்படுத்தவும்.

மாய்ஸ்டுரைசர் (Moisturiser)

மாய்ஸ்டுரைசர்கள் சருமத்தில் ஈரப்பதத்தைச் சேர்த்து, வற்றாமல் பராமரிக்க உதவும், மேலும் சருமத்தில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதுடன் சருமத்தை மென்மையாகவும் மீள்தன்மை கொண்டதாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

குளிப்பதாலும் முகம் கழுவுவதாலும், குறிப்பாக பார் சோப்பைப் பயன்படுத்தி குளிப்பதால் சருமம் வறண்டு போகும். ஷேவிங் செய்யும்போது, தோலின் வெளி அடுக்கான ஸ்டிராட்டம் கார்னியம் எனும் அடுக்கு பாதிக்கப்படுகிறது, இதனால் தோலின் அடிப்புற அடுக்குகளில் இருந்து ஈரப்பதம் வெளியே சென்றுவிடும். இதனால் தோல் மெலிவதுடன், தோலின் மீள் தன்மையும் குறையும். சருமத்தைக் கழுவிய பிறகு மாய்ஸ்டுரைசரைப் பயன்படுத்துவதே சருமத்திற்கு ஈரப்பதமூட்ட சிறந்த வழியாகும்.

Advertisements
%d bloggers like this: