Advertisements

மோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்?

ரதமர் மோடி – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பில், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு இருப்பதாகவும், அதன்படி காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், 20 தொகுதிகளில் ஒரே சமயத்தில் இடைத்தேர்தலை நடத்திட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ எஸ்.எம்.சீனிவேல், எம்எல்ஏவாக பதவி ஏற்பதற்கு முன்பே உடல் நலக்குறைவால் காலமானார். பணப் பட்டுவாடா புகாரால் நிறுத்தப்பட்ட

தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டதில், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. இதையடுத்து, தமிழக சட்டசபையில் அதிமுகவின் பலம் பேரவைத் தலைவருடன் சேர்த்து 136 ஆக அதிகரித்தது. கடந்த 2016ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தார். அதன்பின், அதிமுகவின் பலம் 135 ஆக குறைந்த நிலையில், கட்சியில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தலைமையில் 18 எம்எல்ஏக்கள் பிரிந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து, மேற்கண்ட 18 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தர விட்டார். அப்போதே, 18 தொகுதியும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பதவி நீக்கத்தை எதிர்த்து 18 பேரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கில் முடிவு வரும் வரை 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டது.
அதனால், சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 116 ஆக குறைந்தது. இதற்கிடையே, ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில்  சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றிப்பெற்று எம்எல்ஏ ஆனார். கடந்த சில வாரங்களுக்கு முன் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் மரணமடைந்ததால், பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 115 ஆக குறைந்துவிட்டது. இதற்கிடையே, ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருதாச்சலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய மூவரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் ேபாட்டியிட்டு திருவாடானை தொகுதியில் வெற்றிப் பெற்ற முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பைச் சேர்ந்த நடிகர் கருணாஸ், அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகள் கூறி வந்ததால், கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அதனால், கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 4 எம்எல்ஏக்களுக்கு எதிராக, கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அரசு கொறடா ராஜேந்திரன் சிபாரிசு கடிதம் கொடுத்துள்ளார்.
இத்தனை விவகாரங்களுக்கு முன்னதாக, கடந்த ஜனவரியில், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் ெதாடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டது. அதில், ‘சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது’ என்று அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், ‘தகுதி நீக்கத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததால் சபாநாயகரின் உத்தரவு செல்லாது’ என, அதே அமர்வில் இருந்த நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்தனர். நீதிபதிகளின் இந்த இருவேறு கருத்துகளால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு அனுப்பப்படுகிறது என்று அறிவித்தது நீதிமன்றம். இரண்டு நீதிபதிகள் விசாரித்த இந்த வழக்கில், இருவரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியான எம்.சத்தியநாராயணன் விசாரித்தார். இருதரப்பு வாதங்களும் முடிந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை மக்கள் எதிர்பார்த்து வரும் வேளையில், எந்த மாதிரியான தீர்ப்பு வந்தாலும், அது அரசுக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால், விரைவில் அதிமுக ஆட்சி கவிழும் என்று, எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
இந்நிலையில், நேற்று பிரதமர் மோடியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த போது, 37 பக்க கோரிக்கை மனுவை கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பிரதமரின் சந்திப்பின்போது மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி எதுவும் ஆலோசிக்கவில்லை. அதற்கு நிறைய காலம் உள்ளது’ என்றார். ஆனால், தமிழக எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளதால், தமிழக அரசு ஓர் நெருக்கடியான சூழலை சந்திக்க வேண்டியுள்ளது. அது தொடர்பான விஷயங்கள் பிரதமர் மோடியுடன் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் முக்கிய நோக்கம், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேரின் விவகாரம் மட்டுமே. நீதிமன்ற தீர்ப்பு, ‘சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது’ எனக்கூறிவிட்டால், கண்டிப்பாக 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். அல்லது, 18 பேரும் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்.
அதற்கு மாறாக தீர்ப்பு வந்தால், சட்டசபையில் ஆளுங்கட்சி பலத்தை நிரூபிக்க வேண்டும். எப்படியாயினும் ஆளுங்கட்சி தரப்பு நீதிமன்ற உத்தரவுக்கு பின் பெரும் சிக்கலை சந்திக்க உள்ளது. அதனால், காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்திவிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு கூறப்படுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: