நீடிக்கும் மன இறுக்கக் கோளாறு

நீடிக்கும் மன இறுக்கக் கோளாறு என்றால் என்ன? (What is persistent depressive disorder?)

நீடிக்கும் மன இறுக்கக் கோளாறு (PDD) என்பது, நாள்பட்ட மன இறுக்கமாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி மன இறுக்கத்துடன் காணப்படுவார்கள். ஆனாலும், பிற பெரிய மன இறுக்கப் பிரச்சனைகளுக்கு இருப்பதைப் போன்று, இதன் அறிகுறிகள் கடுமையாக இருப்பதில்லை. PDD எனும் இந்தப் பிரச்சனையை டிஸ்திமியா என்றும் குறிப்பிடுகின்றனர்.

உலகளவில், மொத்த மக்களில் 1. 5% பேருக்கு இந்தப் பிரச்சனை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறிகள் (Symptoms)

மற்ற வகை மன இறுக்கம் இருப்பவர்களுக்கும், PDDஇன் அறிகுறிகள் காணப்படுவதுண்டு, ஆனால் இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் குறைந்தது இரண்டு ஆண்டுகள் நீடிக்கும். குழந்தைகள் மற்றும் இளம் வயதினரில், மன இறுக்கத்தை விட அதிக எரிச்சலான மன நிலை இருக்கும், அது ஓராண்டு காலம் வரை நீடிக்கும். இதுவே இந்தப் பிரச்சனையின் அடையாளம். அத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் இரண்டேனும் நீண்ட காலம் இருந்தால், அவர்களுக்கு PDD உள்ளது எனலாம்:

 • நம்பிக்கையின்மை, சோகம்
 • அதிகம் தூங்குதல் அல்லது மிகக் குறைவாகத் தூங்குதல்
 • களைப்பு அல்லது தெம்பின்மை
 • தன்னைப் பற்றிய தாழ்வான மதிப்பீடு
 • அதிகமாக சாப்பிடுதல் அல்லது பசியின்மை
 • மனதை ஒருமுகப்படுத்த முடியாமை
 • தீர்க்கமின்மை
காரணங்கள் (Causes)

PDD ஏற்படுவதன் துல்லியமான காரணம் கண்டறியப்படவில்லை. இந்தப் பிரச்சனையை ஏற்படுத்தக் கூடிய காரணிகளாக நம்பப்படுபவை:

 • குடும்பத்தில் யாருக்கேனும் இந்தப் பிரச்சனை இருப்பது
 • மூளையில் வேதிப்பொருள்களின் சமநிலையின்மை
 • மன அழுத்தம் மற்றும் ஏதேனும் அதிர்ச்சிகரமான அசம்பாவிதம் நிகழ்தல்
 • மூளையில் அடிபடுவது
ஆபத்துக் காரணிகள் (Risk Factors)
 • உறவினர்கள் யாருக்கேனும் இந்தப் பிரச்சனை இருப்பது
 • மன அழுத்தம் ஏற்படுத்துகின்ற அல்லது அதிர்ச்சிகரமான சம்பவங்கள்
 • மற்ற உளவியல் கோளாறுகள்
நோய் கண்டறிதல் (Diagnosis)

இந்தப் பிரச்சனையை உறுதிப்படுத்த, கீழ்க்காணும் பரிசோதனைகள் செய்யப்படலாம்:

 • உங்கள் மருத்துவ வரலாறு ஆய்வு செய்யப்படும், அத்துடன் வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்படும்.
 • மற்ற உளவியல் கோளாறுகளில் இருந்து உங்களுக்கு இருக்கும் பிரச்சனையை வேறுபடுத்தி அறிவதற்காக, உங்கள் உணர்வுகள், எண்ணங்கள், நடத்தைகள் பற்றி உளவியல் மதிப்பீடு செய்யப்படலாம்.
 • இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள்: உங்களுக்கு உடல்ரீதியான பிரச்சனைகள் எதுவும் இல்லை என உறுதிப்படுத்துவதற்காக இவை செய்யப்படலாம்.
 
சிகிச்சை (Treatment)

PDDக்கான சிகிச்சை முறைகள் சில:

 • தியானம்: மறு பயன்பாட்டுத் தடை மருந்துகள் (SSRIகள்), செரோட்டோனின், நோரிப்பைனிஃபிரின் மறு பயன்பாட்டுத் தடை மருந்துகள் (SNRIகள்) அல்லது ட்ரைசைக்கிளிக் ஆன்டிடிப்ரசன்ட் மருந்துகள் (TCAகள்) போன்றவற்றை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்களாகவே, மருந்துகளை நிறுத்தக் கூடாது.
 • சிகிச்சை:
  • புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை: இந்த சிகிச்சையானது, இந்தப் பிரச்சனையை இன்னும் மோசமாக்குகின்ற அறிகுறிகள் மற்றும் காரணிகளைப் பற்றி அறிந்துகொண்டு அவற்றைக் குறித்து கவனமாக இருப்பதற்கு உங்களைத் தயார்ப்படுத்துகிறது.
  • உளவியல் சிகிச்சை: மன இறுக்க உணர்வுக்கும் எண்ணங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடிய காரணிகளை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
 • வாழ்க்கை முறையில் மாற்றம்:
  • ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுதல்
  • போதுமான நேரம் தூங்குதல்
  • உங்களை அதிகம் சந்தோஷப்படவைக்கும் செயல்களில் ஈடுபடுதல்
  • அடிக்கடி உடல் உழைப்பு மிக்க செயல்களில் ஈடுபடுதல்
  • மது அல்லது போதைப்பொருள்களைத் தவிர்த்தல்
தடுத்தல் (Prevention)

PDD ஏற்படுவதற்கான துல்லியமான காரணம் தெரியவில்லை என்பதால், இதனைத் தடுப்பதற்கு என்று, நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. இந்தப் பிரச்சனை குழந்தைகளுக்கு வந்தால், அவர்களின் சுய மதிப்பை உயர்த்தும் வகையில் பெற்றோர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, மன அழுத்தத்தைக் கையாளவும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

சிக்கல்கள் (Complications)

இதனால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் சில:

 • உறவில் பிரச்சனைகள்
 • கல்வியில் சிறப்பாக செயல்படாமல் போவது
 • வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள்
 • சுய மதிப்பு குறைதல்
 • தற்கொலை
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)

உங்களுக்கு PDD இருப்பதாக உறுதியானால், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளவும், வாழ்க்கை முறையில் தேவையான நல்ல மாற்றங்களைச் செய்யவும், மருத்துவர் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து அவ்வப்போது மருத்துவரைச் சந்தித்து ஆலோசனையின்படி நடக்கவும்.

எச்சரிக்கை (Red Flags)

நீங்களோ, வீட்டில் உள்ள மற்றவர்களோ தற்கொலை அல்லது மரணத்தைப் பற்றிப் பேசினால், உடனடியாக மருத்துவரிடம் செல்லவும்.

%d bloggers like this: