Advertisements

வேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஏற்படும் இறப்புகளில் 1.6 மில்லியன் இறப்புகளுக்கு நேரடி காரணம் நீரிழிவு நோய் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. மேலும் 2030ம் ஆண்டு, உலகின் பெரிய கொலையாளி என்ற

பட்டியலில் ஏழாவது இடத்தை நீரிழிவு நோய் பிடிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

நீரிழிவு நோய் ஒரு நாட்பட்ட மற்றும் வளர்சிதை மாற்ற நோய். இரத்தத்தில் க்ளுகோஸ் அளவு அதிகரிக்கும்போது இந்த பாதிப்பு உண்டாகிறது. இதற்கான சரியான சிகிச்சை எடுக்காமல் விடும்போது இதயம், இரத்தக் குழாய், கண்கள், சிறுநீரகம் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படுகிறது.

நீரிழிவு நோய்

நீரிழிவு பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பது மற்றும் நோய் கண்டறிதல் தாமதமாக உண்டாகும் போது அதனை நிர்வகிக்க முடியாத நிலைமை உண்டாகிறது. நீரிழவு நோயாளிகள் தங்கள் உணவில் மிகுந்த கவனம் கொள்வது அவசியம். சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், பானங்கள், ட்ரான்ஸ் கொழுப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. உயர் நார்ச்சத்து உணவு, கார்போ மற்றும் புரத உணவுகள் ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த உணவுகளாகும்.

வேப்பிலை

நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் பல உணவுகள் மற்றும் மூலிகைகள் உதவியாக உள்ளன. உதாரணமாக வெந்தயம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் வேப்பிலை என்னும் மூலிகை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.

இந்திய முழுவதும் வளரும் ஒரு மூலிகை வேப்பிலை. வேப்பமரம் 30-50 அடி உயரம் வளரக் கூடியது. இதன் ஒவ்வொரு பாகமும் வலி நிவாரண மற்றும் குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக உள்ளது. காலகாலமாக இந்திய மற்றும் சீன மருத்துவத்தில் வேப்பிலை ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது. வேப்பமரத்தில் எல்லா பகுதிகளும் – இலைகள், பூ, விதைகள், பழங்கள், வேர் மற்றும் கிளைகள் பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது. வீக்கம், தொற்று, காய்ச்சல், சரும நோய், மற்றும் பல் பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வைத் தருகிறது. ஆசாதிரச்தா இண்டிகா என்பது இதன் தாவர பெயராகும். இதில் அமைந்திருக்கும் சில கூறுகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

வேம்பு மருத்துவம்

உடற்கூற்றியல் மற்றும் மருந்தியல் இந்திய இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, வேம்பு எந்த ஒரு நோயைத் தடுப்பதில் அல்லது தாமதப்படுத்துவதில் உதவுகிறது. இன – மருத்துவம் பற்றிய பத்திரிகை ஆய்வுகள், வேப்பிலை தூள், நீரிழிவு அறிகுறிகளை கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

எப்படி தீர்க்கிறது?

வேம்பு, இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக மேலும் சில ஆய்வுகள் கூறுவதற்கான தக்க சான்றுகள் தேவைப்படுகிறது. ஆனாலும் சில நிபுணர்கள் இந்த அற்புத மூலிகையை ஆதரித்து வருகின்றனர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் வேப்பிலை சாறு பருகுவதால் அல்லது ஒரு கை நிறைய வேப்பிலையை எடுத்து மென்று சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் இதனை அதிகம் சாப்பிடக் கூடாது. மேலும் இதனை சாப்பிடுவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வேப்பிலை அதிகம் உட்கொள்வதால் ரத்த சர்க்கரை குறைபாடு என்னும் ஹைபோ க்ளைகமிக் தன்மை உண்டாகலாம்.

மருத்துவ குணங்கள்

வேப்பிலையில் ப்லேவனைடு, ட்ரை டெர்பெனைடு, அன்டி வைரல் கூறுகள் மற்றும் க்ளைகோசைடுகள் ஆகியவை அடங்கியுள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உதவி புரிகின்றன மேலும் க்ளுகோஸ் அளவில் மாற்றம் ஏற்படாமல் பாதுக்காகின்றன .

நீரிழிவு நோய்க்கான வேப்பிலை சாறு

நீரிழிவு நோயாளிகள் எப்போதும் கசப்பான உணவை எடுத்துக் கொள்வதற்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. வேப்பிலை சாற்றில் நீரிழிவைப் போக்கும் சில முக்கிய கூறுகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அரை லிட்டர் தண்ணீரில் 20 வேப்பிலைகளை போட்டு கொதிக்க விடவும்.

ஐந்து நிமிடம் கொதித்தவுடன் தண்ணீர் பச்சை நிறமாக மாறும். இலைகளும் மென்மையாக மாறும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இந்த நீரை ஒரு நாளில் இரண்டு முறை பருகி வரவும்.

சர்க்கரை நோய் தீர்க்கும் பொடி

டாக்டர் ஷிகா ஷர்மா, ஆரோக்கிய நிபுணர் மற்றும் NutriHealth இன் நிறுவனர், உயர் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க ஒரு ஆரோக்கியமான கலவையை பரிந்துரைக்கிறார். வேப்பிலை தூள், வெந்தயத் தூள், ஜாமூன் விதை தூள், பாகற்காய் தூள் ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து ஒரு கலவை தயார் செய்து கொள்ள வேண்டும். மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு அரை மணி நேரம் முன்னர் இந்த கலவையை தண்ணீருடன் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வேண்டும்

எப்படி கட்டுப்படுத்துவது

நீரிழிவை நிர்வகிப்பது என்பது எளிதான காரியமல்ல. ஆனால் புத்திசாலித்தனமாகவும் ஆரோக்கியமாகவும் உங்கள் உணவுத் தேர்வுகள் இருக்கும்போது இரத்த சர்க்கரை அதிகரிப்பால் எந்த ஒரு கடினமான சூழ்நிலையும் வராமல் தடுக்கலாம். மேலே கூறிய எந்த ஒரு முயற்சியும் நீங்கள் தற்போது எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளுக்கு இடையில் பயன்படுத்துவதை நாங்கள் வன்மையாக ஆட்சேபிக்கிறோம். மருந்துகளில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வருவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: