Advertisements

நவராத்திரி பண்டிகையும் பிரசாதங்களும்

சோழர் காலத்திலேயே அரச விழாவாக நவராத்திரி கொண்டாடப் பட்டதாகக் கூறப்படுகிறது. சிவனை வழிபட ஒரு ராத்திரி, சிவராத்திரி எனவும் சக்தியை வழிபட ஒன்பது ராத்திரிகள், நவராத்திரி எனவும் நம் முன்னோர் சொல்வர். ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இருப்பினும், புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவடையும் இந்த

நவராத்திரியைத்தான் வீட்டில் கொலு வைத்து விசேஷமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள்களும் முப்பெரும் தேவியரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாள்கள் துர்கையின் வழிபாடு, நடுவில் உள்ள மூன்று நாள்கள் லட்சுமி வழிபாடு, அடுத்த கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதி வழிபாடு.

நவராத்திரியின் எட்டாவது நாளை மகா அஷ்டமி (துர்காஷ்டமி) எனவும், ஒன்பதாம் நாளை மகா நவமி எனவும் குறிப்பிடுகிறோம். ஒன்பது நாள்கள் மகிஷாசுரனுடன் போராடிய தேவி பத்தாம் நாள் அவனை வதம் செய்து வெற்றி பெற்ற நாளையே விஜய தசமி என்று கொண்டாடுகிறோம். அன்றைய தினம் ஆரம்பிக்கும் அனைத்து செயல்களும் வெற்றி பெறும் என்பது ஐதீகம். 

இந்த ஒன்பது நாள்களும் காலை, மாலை என இருவேளையும் தேவிக்கு நிவேதனம் செய்வது வழக்கம். நமது பாரம்பர்யத்தின்படி ஒவ்வொரு நாளும் என்ன பிரசாதம் செய்வது என்பதைப் பட்டியலில் காணலாம். நவராத்திரியின் போது வரும் வெள்ளிக்கிழமை மாலை புட்டு, சனிக்கிழமை மாலை எள்ளுப் பொடி செய்வது வழக்கம். இது ஒவ்வொரு வருடமும் மாறிவரும். மற்றபடி காலை நேரங்களில் செய்யப்படும் பிரசாதங்களில் மாற்றங்கள் இல்லை.

ஒன்பதாம் நாளான சரஸ்வதி பூஜை அன்று வடை பாயசத்துடன் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, தேங்காய் வைத்து நிவேதனம் செய்ய வேண்டும். தினமும் வீட்டுக்குக் குழந்தைகள், பெண்களை அழைத்து பிரசாதங்களுடன் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, ரவிக்கைத்துணி, மட்டை தேங்காய், பழம், பூ, வளையல், கண்ணாடி, சீப்பு, கண் மை, மருதாணி ஆகிய மங்கலமான பொருள்களை அவர்களுக்குக் கொடுக்கலாம். அவரவர் வசதிக்கேற்ப புடவை, குழந்தைகளுக்குப் பட்டுப் பாவாடை வைத்தும் கொடுக்கலாம்.

நவராத்திரி நலம் தரட்டும்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: