Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 15th, 2018

கண்களில் தெரியும் அவசரம்

மது உடலின் மென்மையான உறுப்புகளில் பிரதானமானவை கண்கள். அவைதாம் வெளிச்சம் தந்து நம்மை வழிநடத்துகின்றன. சிறு தூசு விழுந்தால்கூட கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். உடலில் ஏற்படும் அலர்ஜியின் பாதிப்புகள் கண்களில் வெளிப்படலாம். அதனால் கண்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் எவற்றுக்கெல்லாம் அவசரகால சிகிச்சைகள் அவசியம்? விளக்குகிறார் கண் மருத்துவர் ரஜினிகாந்தா.

Continue reading →

Advertisements

சர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15-ஆம் நாள் சர்வதேச கைகழுவுதல் தினம் (Global Hand Washing Day) கடைபிடிக்கப்படுகிறது. நோய்களைத் தவிர்த்து உயிரைக் காக்க சோப்பினால் கைகழுவும் ஓர் எளிமையான, மலிவான மற்றும் நல்ல பலனளிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய புரிதலையும், விழிப்புணர்வையும் அதிகரிப்பதே இந்த தினத்தின் முக்கிய நோக்கம்.பெரும்பாலான தொற்று கிருமிகள் கைகள் மூலமாகவே பரவுகின்றன.

Continue reading →

தண்ணீர் தேகம்

ண்ணீர் அருந்துவது உடலுக்கு  நல்லது என்பது தெரியும். தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். உங்களுக்கு நீங்களே நேரக் கணக்கு வைத்துக்கொண்டு தண்ணீர் குடியுங்கள். எப்போது தண்ணீர் குடித்தாலும் அது உங்கள் உடலுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மை செய்யும்.

 

காலை 6 முதல் 7 மணிக்குள்…

Continue reading →

புது வீடு… வாஸ்து ரகசியங்கள்!

ம் உடலுக்கு எந்தக் கேடும் வராமல் நூறு வயதுக்கு மேலும் நல்லபடியாக வாழவேண்டும் என்று விரும்புகிறோம். ஆரோக்கியம் சிறக்கவும் ஐஸ்வரியம் மேலோங்கவும் அயராமல் பாடுபடுகிறோம். அதேபோல், நாம் நிரந்தரமாக வசிக்க விரும்பும் வீடும் ஸ்திரமானதாகவும் அங்கே நாம் வாழும் வாழ்க்கை சுபிட்சமாகவும் இருக்க, வாஸ்து சாஸ்திரத்தின்படி முறைதவறாமல் நமது வீட்டை அமைத்துக்கொள்ள வேண்டும்.

Continue reading →

குலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்!

சரா என்றால், பத்தாவது ராத்திரி என்று பொருள். `தசரா’ கொண்டாட்டம் என்றாலே, மைசூரில் நடைபெறும் தசரா விழாதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், தமிழகத்திலும் தசரா பண்டிகை கொண்டாடப்படும் திருத் தலம் குலசேகரப்பட்டினம்.

மைசூரில் நடைபெறும் விழா, தர்பார் விழா என்றால், நம் குலசேகரப் பட்டினத்தில் நடைபெறும் தசரா விழாவானது தவக்கோலம் கொண்டு, விரதம் அனுஷ்டித்துக் கொண்டாடப் படும் பக்திப் பெருவிழா!

Continue reading →