தண்ணீர் தேகம்

ண்ணீர் அருந்துவது உடலுக்கு  நல்லது என்பது தெரியும். தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். உங்களுக்கு நீங்களே நேரக் கணக்கு வைத்துக்கொண்டு தண்ணீர் குடியுங்கள். எப்போது தண்ணீர் குடித்தாலும் அது உங்கள் உடலுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மை செய்யும்.

 

காலை 6 முதல் 7 மணிக்குள்…

 

உடலில் இருக்கும் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றப்படும். செரிமான மண்டலம் சீராக இயங்கும்.


 

காலை 8 முதல் 9 மணிக்குள்…

உடலின் பிஹெச் (PH) அளவைச் சமநிலையில் வைக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூட்டு இணைப்புகள் மற்றும் குருத்தெலும்புகளுக்கு வழவழப்புத் தன்மையைக் கொடுக்கும்.

 


 

முற்பகல் 11:30 முதல் 12 மணிக்குள்…

உடலில் உள்ள உபரி கொழுப்புகள் கரையும். தண்ணீர் குடித்த அரை மணி நேரத்துக்குள் வளர்சிதை மாற்றம் தூண்டப்படும். அதன் பிறகு உண்ணும் உணவு நன்றாகச் செரிமானமாகும்.


 

நண்பகல் 1 மணி முதல் 2 மணிக்குள்…

சருமத்தில் சீக்கிரம் முதுமைத் தோற்றம் அடைவது தடுக்கப்படும். உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.


 

பிற்பகல் 3 முதல் 4 மணிக்குள்…

உடலில் அமிலம் உற்பத்தியாவது குறையும். உடலின் நச்சுகள் வெளியேற்றப்படும்.


 

மாலை 5 முதல் இரவு 7 மணிக்குள்…

இரவு உணவுக்கு முன்னர் குடிக்கிற தண்ணீர் அதிக அளவில் உணவு உண்பதைத் தடுக்கும். பெருங்குடல் தொடர்பான நோய்கள் பெருமளவு குறையும்.


 

இரவு 8 மணி முதல் 9 மணிக்குள்…

இரவு உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால், உணவின் மூலம் கிடைத்த ஊட்டச்சத்துகளை உடல் எளிதில் கிரகித்துக்கொள்ளும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.


 

இரவு 9:30 முதல் 10 மணிக்குள்…

உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். 

%d bloggers like this: