Advertisements

வரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சலுகை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான பணிகளில் மத்திய நேரடி வரிகள்  ஆணைய குழு தீவிரமாக

ஈடுபட்டுள்ளது.  வரி வருவாயில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்கேற்ப வரி வருவாயும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேர்மையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும்  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் பாராட்டு தெரிவித்தது. இதுபோல் தற்போதும் புதிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.  இதன்படி, வரி செலுத்துவோர் மத்திய அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கவுரவிக்கப்பட உள்ளனர். கவர்னருடன் தேநீர் விருந்தில் இவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும்.

விமான  நிலையங்கள், ரயில் சேவைகள், நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் உட்பட பல்வேறு பொதுச்சேவைகளில் முன்னுரிமை வழங்கப்படும். பாஸ்போர்ட் வழங்குவதில் முன்னுரிமை  தரப்படும். தொடர்ந்து முறையாக முழுமையாக வரி செலுத்துவோர் மட்டுமின்றி, வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கும் சலுகைகள் கிடைக்கும். வரி செலுத்துவது அல்லது வருமான வரி கணக்கு முறையாக  தாக்கல் செய்வது பெருமைக்குரிய செயல் என்பதை மக்கள் உணரும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதற்காக மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் கீழ் குழு  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான கொள்கைகளை வரையறை செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நிதியமைச்சகம்  மற்றும் பிரதமர் அலுவலக ஒப்புதல் பெற்ற பிறகு செயல்பாட்டுக்கு வரும் என்றனர்.

Advertisements
%d bloggers like this: