Daily Archives: ஒக்ரோபர் 25th, 2018

இந்த ஆறு அறிகுறி இருந்தா பெண்கள் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்… ஆண்களும் தெரிஞ்சிக்கலாமே

கருப்பை கட்டிகள்

ஆனால் 20% பெண்களுக்கு உண்டாகும் இத்தகைய நீர்க்கட்டிகள் தானாக மறைவதில்லை. இவற்றைப் போக்க அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது., அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகளாக இவை மாறுகிறது. அல்லது உடல் நலத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. சில நேரங்களில் இந்த நீர்க்கட்டிகள், கருப்பை பைப்ராய்டு, அல்லது மாதவிடாய்க்கு முந்தைய பாதிப்பு(வயிறு மந்தம் மற்றும் இடுப்பு வலி) ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு பாதிப்பைத் தருகிறது.
Continue reading →

மோட்டார் போபியா

யணம் என்பது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்ட இந்தக் காலத்தில், சிலர் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்ட பயப்படுவார்கள்; சிலர் பயணம் செய்யவே பயப்படுவார்கள். வாகனங்களின் மீதான பயத்துக்கு `மோட்டார் போபியா’ என்று பெயர். இந்த வகை பயத்துக்கு உள்ளானவர்களின் வாழ்க்கை அதிக சிக்கலுக்குள்ளாகும்.

Continue reading →

ஆட்டமா… போராட்டமா? – விளையாட்டிலும் வேண்டும் கவனம்!

40 வயது நிறைந்த அவருக்கு சர்க்கரைநோய். ‘ஏதாவது ஒரு விளையாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது’  என்று சிலர் ஆலோசனை சொல்ல, சமீபகாலமாக பாட்மின்ட்டன் விளையாட ஆரம்பித்திருக்கிறார். ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது  திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, மயங்கிக் கீழே விழுந்துவிட்டார். உடனிருந்தவர்கள் பதறிப்போய் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை இருப்பவர்கள் பாட்மின்ட்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடக் கூடாதா… அப்படி ஈடுபட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா?

இதயநோய் மருத்துவர் லட்சுமணதாஸிடம்  கேள்விகளை முன்வைத்தோம். விரிவாகப் பேசினார் அவர்.

Continue reading →

குற்றாலக் கூவத்தூர் க்ளைமாக்ஸ்!

.தி.மு.க-வின் ஒவ்வோர் அசைவையும் இனி நீதிமன்றம்தான் தீர்மானிக்கப்போகிறது என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன் அல்லவா? அவை ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்துவிட்டன’’ என்றபடி உள்ளே நுழைந்த கழுகாருக்கு, வாய்நிறைய ஸ்வீட்டைத் திணித்தோம். ஏககுஷியாகி, செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.
‘‘அ.தி.மு.க விஷயத்திலிருந்தே ஆரம்பிக்கிறேன். முன்னாள் அமைச்சர் பொன்னையன், ‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகாரில் சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்’ என்று கட்சிக் கூட்டத்தில் வைத்து வாயைத் திறந்தார். இதைத் தொடர்ந்து, அவரை எதிர்க் கட்சியினர் காய்ச்சி எடுக்க ஆரம்பித்துவிட்டனர். அவர் அரசாங்கத்தின் பிரதிநிதியும் அல்ல, சொன்ன இடம் அரசாங்க அலுவலகமும் அல்ல என்பதுதான் காரணம். பிறகு, அதை மறுத்து பொன்னையன் பேசினார். ஆனால், அவர் சொன்னபடியே தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துவிட்டது.’’

Continue reading →