மருத்துவமனைகள் உங்களிடம் சொல்லாமல் மறைக்கும் அந்த 10 ரகசியங்கள் இதோ…!

நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பல்வேறு தொடர்புகள் இருக்கும். ஆனால், அவை நமக்கு தான் தெரியாது. நம்முடனே இருக்கும் சிலர் அப்படிப்பட்ட ரகசியங்களை நம்மிடம் சொல்லாமலே மறைத்தும் விடுவார்கள். குறிப்பாக இது போன்ற நிகழ்வுகள் அலுவலகங்களில்

நிச்சயம் நடக்க கூடும்.

மருத்துவமனை, காவல் துறை, நீதி துறை, பள்ளி கூடம் ஆகிய இடத்தில் இவை அதிகம் நடக்கின்றன. அந்த வகையில் நமது உயிரையே காக்கும் இடத்தில் பல ரகசியங்களை நம்மிடம் இருந்து மறைத்து விடுகின்றனர். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் முழுமையாக அறிவோம்.

மருத்துவ துறை எப்படி..?

பிற துறைகளை காட்டிலும் இந்த மருத்துவ துறை சற்றே முக்கியமான ஒன்று. இந்த பூமியில் உள்ள உயிர்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் இடம் தான் மருத்துவமனை. ஆனால், இன்று இதில் எண்ணற்ற ஊழல்களும், சீர்கேடுகளும் நடைபெறுகின்றன. மேலும், ஒரு சில முக்கிய தகவல்களையும் நம்மிடம் இருந்து மறைத்தும் விடுகின்றனர்.

பயிற்சி மருத்துவர்கள்..!

பல மருத்துவமனைகளில் உங்களுக்கு செய்ய போகும் அறுவை சிகிச்சைகளை பயிற்சி காலத்தில் உள்ள இளம் மருத்துவர்களை வைத்தே செய்கின்றனர். இது பல வகையிலும் நம்மை பாதிக்க கூடும். முதன் முதலில் ஒரு மருத்துவர் நம்மை வைத்து பயிற்சி பெறுவது நம் உயிருக்கு உத்திரவாதத்தை தராது. இது போன்ற இரகசியத்தை மருத்துவமனைகள் நம்மிடம் சொல்லாது.

தவறான சிகிச்சையா..?

சில சமயங்களில் சில மருத்துவர்கள் தவறான சிகிச்சையை தந்து விடுவார்கள். இதனால் உயிர் இழப்புகள் கூட ஏற்பட்டதுண்டு. இது போன்ற விபரீத முடிவுகளை மருத்துவமனை நம்மிடம் சொல்வதில்லை. இப்படிப்பட்ட நிலையில் உங்களின் ரிப்போர்ட்டை மறுமுறை வேறு சில மருத்துவரிடம் தந்து பரிசோதித்து கொள்ளுங்கள்.

திருட்டு போகலாம்..!

சில மருத்துவமனைகள் உங்களின் ரிப்போர்ட்டை வேறு யாராவது கேட்டார்கள் என்பதற்காக கொடுத்து விடுவார்கள். இதில் பண பேரம் நிச்சயம் நடக்கும். இது போன்ற திருட்டு தனத்தை மக்களிடம் மருத்துவமனை வெளிப்படுத்தாது.

MOST READ: ஆண்களே, நீங்கள் பிறந்த மாதத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் வரும்னு கண்டுபிடிச்சிடலாம்..!

யாருக்கு..? என்ன மாத்திரை..?

மருத்துவமனையில் ஒரு சில செவிலியர்கள் முறையான மருந்துகளை தர மாட்டார்கள். மருந்தின் அளவை மருத்துவர்களே நன்கு அறிந்திருப்பர். செவிலியர்கள் அளிக்கும் அளவுக்கு அதிகமான அல்லது குறைவான மருந்துகள் நமது ஆரோக்கியத்தை பாதிக்க கூடும். எனவே, இதில் அதிக கவனம் தேவை.

முன்னுரிமை எப்படி..?

பல மருத்துவமனைகள் இதை தான் கடைபிடித்து வருகின்றனர். ஒருவர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருந்து அவருக்கு சிகிச்சை உடனே கொடுக்க வேண்டும் என்றிருந்தாலும், அதிக பணம் கொண்ட செல்வந்தர்களுக்கே மருத்துவம் பார்ப்பார்கள். இதை பற்றி உங்களிடம் சொல்ல மாட்டார்கள்.

பில்ஸ் முக்கியம்..!

மருத்துவமனைக்கு சென்று விட்டோம், சேர்ந்து விட்டோம் என்றில்லாமல் அதிக கவனம் கட்டாயம் தேவை. குறிப்பாக பண விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பிறகு “ரமணா” படத்தில் காட்டியது போன்று கூட நடக்கலாம். பில்லில் கொடுத்துள்ள ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு உள்ளதா..? என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள்.

மறு பரிசோதனை..!

நமக்கு பல நேரங்களில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட கூடும். அதாவது, நம் உடலை கொண்டு டெஸ்ட் எடுக்கும் போது, இதன் ரிப்போர்ட் தவறுதலாக மாறலாம். இந்த நிலையை பற்றி ஒரு முறைக்கு 2, 3 முறை டெஸ்ட் எடுத்து கொள்வது நல்லது. இந்த டெஸ்ட் எடுக்கும் முறையை பற்றி பல மருத்துவமனை உங்களிடம் தெளிவை தராது.

சுத்தமாக உள்ளதா..?

உங்களை அட்மிட் செய்யும் இடம் எவ்வளவு சுத்தமானதாக இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள். அதாவது உங்கள் பெட் சுத்தமாக உள்ளது என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில், சில மருத்துவமனைகள் சுத்தத்தை பற்றி கண்டு கொள்வதில்லை. உங்களுக்கு முன்பு தான் வேறொருவர் அந்த பெட்டில் இருந்திருப்பார். எனவே, அந்த நோய் சிறுமிகள் உங்கள் மீதும் ஒட்டி கொள்ள கூடும்.

மருத்துவர்களின் மனநிலை எப்படி..?

மருத்துவரின் மனநிலை எப்படி இருக்கின்றது என்பதை உறுதி செய்வது சிறந்தது. ஏனெனில், மருத்துவமனைகள் மருத்துவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை நோயாளிகளிடம் கூற வாய்ப்புகள் மிக குறைவு. இது போன்ற நிலையில் அதிக கவனம் தேவை.

அதிக தொல்லை..அதிக ஆபத்து..!

உங்களை கவனித்து கொள்ளும் மருத்துவரையோ அல்லது செவிலியரையோ அடிக்கடி தொல்லை செய்யாதீர்கள். சில சமயங்களில் நீங்கள் செய்கின்ற தொல்லை அவர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தி தவறுதலாக ஏதேனும் நடக்க கூடும்.

குழந்தை மாற்றுக்கள்..!

பல மருத்துவமனைகள் உங்களுக்கு பிறந்துள்ள குழந்தைகளை கூட மாற்றி வைத்து விடுகின்றனர். சிலர் பணத்தின் காரணமாகவும், தவறுதலாகவும் செய்து விடுகின்றனர். இது போன்ற தகவலை மருத்துவமனை நிச்சயம் வெளிவிடாது.

எச்சரிக்கை..!

மேற்சொன்ன தகவல்கள் எல்லா மருத்துவமனைக்கும் பொருந்தாது. ஆனால், இது போன்ற நிகழ்வுகள் பல மருத்துவமனையில் நடக்கிறது என்பதை தெரிவிப்பதற்கே இந்த பதிவு. எனவே, மக்களாகிய நாம் தான் அதிக ஜாக்கிரதையுடன் நடத்து கொள்ள வேண்டும்.

%d bloggers like this: