வாட்ஸ்அப்பிலும் ஸ்டிக்கர்கள்… டவுன்லோட் செய்வது எப்படி ?

வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே எமோஜீஸ், அனிமேட்டட் GIFகள் என பொழுதுபோக்கிற்கு குறையே இல்லாத அளவில் புதுப்புது

அம்சங்கள் நிறைந்துள்ளன.

தற்போது வாட்ஸ்அப் பொழுதுபோக்கினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்ய உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

இந்த சிறப்பம்சங்கள் தற்போது இருக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் iOS பீட்டா வெர்ஷன்களில் இயங்கி வருகிறது. பழைய வெர்ஷன் வாட்ஸ்ஆப்களை உபயோகப்படுத்தும் ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்கள் 2.18.329 இந்த வெர்ஷனை அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஆப்பிள் போன்களை உபயோகிப்பவர்கள் 2.18.100 இந்த வெர்ஷனை அப்டேட் செய்து கொள்ளலாம். மொத்தம் 12 ஸ்டிக்கர் பேக்ஸ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

WhatsApp Stickers எப்படி டவுன்லோடு செய்வது ?

வாட்ஸ்அப்பில் சாட் கீபோர்டினை க்ளிக் செய்தால் அதிலேயே ஸ்டிக்கர் பட்டன் இருக்கும்.

அதனை க்ளிக் செய்தால் ஸ்டிக்கர் ஸ்டோர் டவுன்லோட் ஆகும்.

ஸ்டிக்கர்களுக்கென தனி கேட்டகிரியை உருவாக்கியுள்ளது வாட்ஸ்ஆப். கீபோர்ட் மானிட்டரில் இருக்கும் + என்ற பட்டனை க்ளிக் செய்தால் 12 ஸ்டிக்கர் பேக்குகளும் கிடைக்கும்..

தங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்கள் அனைத்தையும் ஒருவரால் டவுன்லோட் செய்து கொள்ள இயலும்.

வாட்ஸ்அப் மூலமாகவும் ஸ்டிக்கெர்களை அனுப்பலாம்

உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களுக்கு நட்சத்திரம் கொடுத்து வைக்கலாம். அதே போல் ஹிஸ்டரி டேப்பில் எந்த ஸ்டிக்கரை நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்பதை அறிந்து கொள்ளும் வசதியினையும் இந்த அப்டேட் உருவாக்கியிருக்கிறது.

வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 annual developer மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: