உங்களுக்கு நூடுல்ஸ் பிடிக்குமா? அது குறித்த சுவையான 10 விஷயங்கள் இதோ…

நூடுல்ஸ் – இதை பிடிக்காதவர்கள் மிகவும் குறைவு. வேக வைத்து, அல்லது சூப்பில் கலந்து அல்லது பொறித்து, என எப்படி வேண்டுமானாலும் இதனை சாப்பிடலாம்.

ஒன்று மட்டும் நிச்சயம்: நூடுஸ்சை எப்படி சமைத்தாலும் சாப்பிடுவோம். உலகில் பரவலாக விரும்பி உண்ணக்கூடிய உணவு இது என்பதை நம்மால் மறுக்க முடியாது.

நூடுல்ஸ் குறித்த 10 சுவையான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்…

1. 4000 ஆண்டுகள் பழமையானது
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்

4000 ஆண்டு பழமையானதாக கருதப்படும் நூடுல்ஸ் நிறைந்த கிண்ணம் ஒன்று சீனாவில் சிங்ஹாய் மாகாணத்தில் 2002ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. லஜியாவில் உள்ள தொல்பொருள் தளத்தில் அங்கிருந்த படிவங்களுக்கு மூன்று மீட்டருக்கு அடியில் மண் பாண்டத்தில் அது புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லஜியா, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்ட இடமாகும்.

இதற்கு முன்னதாக, கிபி 25 மற்றும் 220க்குள் சீன கிழக்கு ஹன் வம்சாவளியினர் வாழ்ந்தபோது எழுதப்பட்ட புத்தகத்தில் நூடுல்ஸ் பற்றிய குறிப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

2. உலகப்பசியை போக்க இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்

தோல்வியை சந்தித்த தாய்வான்-ஜப்பானிய தொழிலதிபர் மொமொஃபுக்கு அண்டோ, ஜப்பானில் போருக்கு பின் மக்கள் பசியுடன் இருந்ததை பார்த்து அவர்களுக்கு உணவளிக்க ஒரு வழியை கண்டுபிடிக்க முனைந்தார். போதுமான அளவு உணவு இருந்தால்தான், உண்மையான அமைதி பிறக்கும் என்று அவர் நம்பினார்.

எனவே இதற்காக ஒசாகாவில் உள்ள தனது குடிசையின் பின்புறத்தில் ஒரு வருடம் ஓயாமல் உழைத்தார் அண்டோ. அப்போது அவர் கண்டுபிடித்ததுதான், உலகில் தற்போது பிரபலமாக உள்ள உணவான சிக்கன் ரேமன் இன்ஸ்டன்ட் நூடுல்ஸாக உருவாகியுள்ளது.

1958ஆம் ஆண்டு முதன்முதலில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் விற்பனைக்கு வந்தது. அப்போதில் இருந்து சிறு சிறு மாற்றங்களையும் இந்த உணவு சந்தித்துள்ளது.

3. தினமும் கோடிக்கணக்கான மக்களால் உண்ணப்படுகிறது

உலக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அமைப்பின் கூற்றுப்படி, உலகெங்கிலும் நாள் ஒன்றுக்கு சுமார் 270 மில்லியன் மக்களால் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உண்ணப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டும் உலகில் நாம் 100 பில்லியன் கிண்ணம் நூடுஸ்ஸ் உட்கொண்டுள்ளோம். இதில் 38 பில்லியன் கிண்ணங்கலை சீனப் பெருநிலப் பரப்பில் இருந்து வாங்கி உண்டுள்ளனர். சீனப் பெருநிலப்பரப்பு நூடுல்சுக்கான உலகின் முதல் பெரிய சந்தையாகும்.

4. ஜப்பானில் 3 பிரத்யேக நூடுல்ஸ் அருங்காட்சியங்கள்

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்தான், இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த கண்டுபிடிப்பு என ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.

ஆம். நீங்கள் படித்தது சரிதான். அதிவேக ரயில்கள், மடிக்கணிணிகள் இதெயெல்லாம் தாண்டி இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்தான் சிறந்த கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.

3 பிரத்யேக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அருங்காட்சியங்கள் ஜப்பானில் உள்ளன. இங்கு விதவிதமான நூடுல்ஸ் உண்ணக் கிடைக்கும். அத்தோடு, ரேமன் நூடுல்ஸின் வரலாறு மற்றும் வகைகள் போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

5. ஜப்பானில் நூடுல்ஸை சத்தமாக சாப்பிடலாம்!
நூடுல்ஸ் ருசியாக இருக்கிறது என்று அதனை சமைத்தவர்களுக்கு கூறுங்கள்

பொதுவாக சத்தமாக சாப்பிட்டால் பல இடங்களில் தவறாகப் பார்ப்பார்கள். ஆனால், நீங்கள் ஜப்பானில் அமர்ந்து சாப்ஸ்டிக்ஸ் மூலம் நூடுல்ஸ் சாப்பிடுகிறீர்கள் என்றால், நன்கு சத்தம் வரலாம்.

நூடுல்ஸ் ருசியாக இருக்கிறது என்று அதனை சமைத்தவர்களுக்கு கூறுகிறீர்கள் என்பது இதன் அர்த்தம்.

6. அமெரிக்க சிறைகளில் நூடுல்ஸ் வர்த்தகம்

அமெரிக்க சிறைகளில் சிகரெட்டுகளை விட, நூடுல்ஸ் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

சிறைகளின் செலவுத் திட்டம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான கைதிகளுக்கு சட்டப்படி தேவையான குறைந்தபட்ச கலோரி உணவுகளே வழங்கப்படுகின்றன.

ஆகவே, விலை குறைவான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களே சிறை ஆணையர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.

7. சீனாவில் நூடுல்ஸ் என்பது நீண்ட ஆயுட்காலத்தை குறிக்கிறது

பெரும்பாலும் சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது “மிக நீளமான நூடுல்ஸ்” கிடைக்கும்

சீனாவில் நூடுல்ஸ் என்பது நீண்ட ஆயுட்காலத்தை குறிக்கிறது. நீளமான நூடுல்ஸ் இருந்தால், சீன பாரம்பரியப்படி நீண்ட ஆயுள் இருக்கிறது என்று அர்த்தம்.

“மிக நீளமான நூடுல்ஸ்” – அதாவது சாதாரணமாக உள்ள நூடுல்ஸைவிட சற்று நீளமாக இருக்கும் நூடுல்ஸ் வறுக்கப்பட்டோ அல்லது சாறில் வேகவைக்கப்பட்டோ பெரும்பாலும் சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கிடைக்கும்.

நீண்ட நூடுல்ஸை வெட்டுவது, துரதிஷ்டவசமாக கருதப்படும்.

8. கொரியர்களுக்கு விருப்பமான நூடுல்ஸ் எது?

ஓக் மரக் (Oak tree) கொட்டையில் இருந்து செய்யப்படும் நூடுல்ஸ் வகை ஒன்று கொரியாவில் பிரபலாமானது.

இந்த ஓக் கொட்டையில் இருந்து செய்யப்படும் மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து நூடுல்ஸ் தயாரிக்கப்படும்.

சிவப்பு மற்றும் வெள்ளை ஓக் மரக் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் மாவுக்கு தனித் தனி சுவை.

9. மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட நூடுல்ஸ்   மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட நூடுல்ஸ் சீனாவில் தயாரிக்கப்பட்டது

உலகின் நீளமான நூடுல்ஸ் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது, சீன உணவு நிறுவனம் ஒன்று. அது தயாரித்த ஒரே ஒரு நூடுலின் நீளம் 3,084 மீட்டர்கள் ஆகும்.

சிங்க்னைன் உணவு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர், 17 மணி நேரம் செலவிட்டு அந்த நூடுலை பாரம்பரிய ரேமன் செய்முறைபடி தயாரித்தார்.

அதற்கு பயன்படுத்தப்பட்டவை: 40 கிலோ ரொட்டி மாவு, 26.8 லிட்டர் தண்ணீர், 600 கிராம் உப்பு. அது ஒரேயொரு நூடுல் மட்டும்தானா என்பதை கண்காணித்த ஒருவர், அதில் பல நூடுல்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளதா என்று சோதனையிட்டார். இதற்கு அவருக்கு 3 மணி நேரங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.

10. “நூடுல்” என்பது ஜெர்மன் வார்த்தை

செவயன், மக்கரோ, ஒன்யே ஒன்யோகொன்யோ, எரிஸ்டே, மி, வெர்மிசிலி, ஃபிடு, சொபா, ஸ்பெகெட்டி, டம்பி, உடொன், நுவொல், மியன் டியோ… இதெல்லாம் பல்வேறு மொழிகளில் உள்ள ‘பாஸ்தா’வுக்கான பெயர்கள்.

ஆனால், நூடுல் என்ற ஒற்றை வார்த்தை அனைத்து மொழிகளிலும் நன்கு அறியப்பட்டிருக்கிறது.

உண்மையிலேயே “நூடுல்” என்ற வார்த்தை ஜெர்மன் மொழியை சேர்ந்தது.

‘நூடுஸ்'(nodus) என்ற லத்தீன் மொழி சொல்லின் பொருள் ‘முடிச்சு’.

%d bloggers like this: