ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா? அதன் அறிகுறிகள் என்னென்ன?

பெண்களுக்கு வருகிற மார்பகப் புற்றுநோயைப் போல ஆண்களுக்கான மார்பக புற்றுநோய் அவ்வளவு எளிதாக யாருக்கும் வருவதில்லை. அது மிகவும் அரிதான ஒன்றுதான் என்றாலும், பெண்களுக்கு எவ்வளவு பாதிப்பையும் வலியையும் தருமோ அதே அளவு பாதிப்பு தான

ஆண்களுக்கும் உண்டாகும்.

புற்றுநோயைப் பொறுத்தவரையில் விளைவுகளில் எந்தவிதமான மாற்றமும் வேறுபாடும் கிடையாது. அதனால், மார்பகப் புற்றுநோய் வந்ததைவிட அதை சரிசெய்ய முயற்சி செய்வதைவிட, வரும்முன் காப்பதற்கு முயற்சி செய்வது நல்லது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அறிகுறிகள்

மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுதான். ஆனால் ஆண்கள் மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டும்தான் வரும் என்று நினைத்துக் கொண்டு, அது காட்டும் சில அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் அஜாக்கிரதையாகக் கடந்துவிடுகிறார்கள். கீழ்கண்ட அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை செய்வது நல்லது.

மார்பகங்களில் சின்ன சின்னதாக கட்டி வருவது

மார்புக் காம்புகளின் வடிவத்தில் மாற்றங்கள் உண்டாதல்

மார்புக் காம்பிலிருந்து நீர் வடிதல்

மார்புக் காம்புகளில் வலி

மார்பகம் சிவந்து போதல், தோல் உரிதல் (அ) மார்பில் ஏதேனும் மாற்றங்கள் உண்டாதல்

டயட்

எந்த நோயாக இருந்தாலும் அதற்கு நாம் எடுத்துக் கொள்கின்ற மருந்து, சிகிச்சை என ஒருபுறம் இருந்தாலும், அந்த சமயங்களில் நாம் எடுத்துக் கொள்கின்ற உணவுமுறை தான் நோய் குணமடையவும் அதிகமாகவும் காரணமாக அமைகிறது. அதேபோல் தான மார்பகப் புற்றுநோயும். நாம் எடுத்துக் கொள்ளும் டயட் முறை மிகமிக முக்கியம். கீழே பரிந்துரைக்கப்படும் சில உணவுகள் புற்றுநோய் வருவதற்கு முன்போ, அல்லது நோயால் பாதிக்ப்பட்டவர்களோ எடுத்துக் கொண்டால், நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து மீண்டு, நீண்ட நாள் உயிர் வாழ முடியும்.

தக்காளி

தக்காளி மற்றும் தக்காளியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது ஆண்களுக்கு மிகவும் நல்லது. இது விதைப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆபத்திலிருந்து உங்களைக் காக்கிறது.

வால்நட்

வால்நட் புரதச்சத்து நிறைந்த ஒரு உணவுப் பொருள். ஆரோக்கியமான உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பும், நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. இதில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடணட்டும் ஒமேகா 3 எண்ணெயும் இருப்பதால் இது இதயத்துக்கும் மிக நல்லது.

ஃப்ளூபெர்ரி

இதில் உள்ள ஆந்தோசினான்ஸ் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் மிக அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட்டும் நிறைந்திருக்கிறது.

உடற்பயிற்சி

நோய் வருகிறதோ இல்லையோ உடனடியாக உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். வாரத்துக்கு மூன்று மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். ஜிம்முக்குப் போய் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. நடைப்பயிற்சி செய்வது தான் மிகச்சிறந்த உடற்பயிற்சி. நடைப்பயிற்சி நோய்களை நம்மை விட்டு தூரமாக ஓடிப்போய்விடும்.

தியானம்

நம்முடைய வாழ்க்கையில் இருக்கின்ற சிறியஈ பெரிய விஷயங்களைத் தீர்க்கும் மற்றொரு மாற்று மருந்து தான் தியானம். இது நம்முடைய உடல் மற்றும் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். உடல், மனம் இரண்டுக்கும் வலிமையைக் கொடுக்கும். மன அழுத்தத்தில் இருந்து எளிதில் உங்களை வெளியே கொண்டு வரும் ஆற்றல் எந்த மருந்தையும் விட, தியானத்துக்கே உண்டு.

%d bloggers like this: