இதையெல்லாம் செய்தால் உடல் எடை நிச்சயம் குறையாது..? அது என்னென்னனு தெரிஞ்சிக்கோங்க…

இப்படியும் புரளிகள் உண்டா..?

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களிலும் பல வகையான கற்பனைகள் கலந்தே வருகிறது. நமது கற்பனைகள் முழுவதுமே அறிவியல் பூர்வமானது அல்ல. இதே நிலை தான் எடை குறைப்பிலும் நடக்கிறது. நாம் உடல் எடையை குறைக்க எண்ணினால் அதற்கென்று பல வகையான சரியான வழிகள் உள்ளன. ஆனால், நாம் அதனை தவறு என்றும், தவறான வழிகளை சரி என்றும் கருதுகின்றோம்.

3 வேளையா..? 6

வேலையா..?

உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் மூன்று வேலை சாப்பாட்டை ஆறு வேலையாக பிரித்து உண்ண வேண்டும் என்கிற கட்டுக்கதை பலரிடம் பரவி உள்ளது. 3 வேலைக்கு அதிகமாக உணவை உண்டால் உடல் எடை நிச்சயம் கூடும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. எனவே, உணவை 6 வேளையாக பிரித்து உண்ண கூடாது.

6 மணிக்கு மேல் நோ நோ..!

பலர் ஒரு தவறான புரிதலை கொண்டுள்ளனர். மாலை 6 மணிக்கு மேல் எதை சாப்பிட்டாலும் எடை கூடிவிடும் என்று எண்ணுகின்றனர். ஆனால், இது முற்றிலுமாக தவறான கருத்து. 6 மணிக்கு மேல் எவ்வளவு உணவை சாப்பிடுகின்றோம் என்பதை பொறுத்தே எடை அதிகரிப்பு நிர்ணயிக்கப்படும். குறைந்த அளவு கலோரிகள் கொண்ட உணவை நாம் சாப்பிடுவது நல்லது.

வயதானால் எடை கூடுமா..?

பலர் கூறுகின்ற வந்ததிகளில் இதுவும் முதன்மையானது. வயதானால் எடை கூடி கொண்டே போகும். நம்மால் குறைக்க இயலாது என கூறுவார்கள். ஆனால், இது தவறான கருத்தாகும். 70, 80 வயது வரை நம்மால் ஆரோக்கியமான உடல் எடையுடன் இருக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒரே மாதத்தில் 10 கிலோ..!

தொலைக்காட்சியில் இது போன்ற விளம்பரங்களை நாம் அதிகம் பார்த்திருப்போம். இந்த டானிக் குடித்தால் 1 மாதத்தில் 10 கிலோ குறைத்து விடலாம். இதை வாங்கி உடற்பயிற்சி செய்தால் 2 வாரத்திலேயே ஒல்லியாகி விடலாம். இப்படிப்பட்ட பொய் கதைகளையெல்லாம் ஒரு போதும் நம்பாதீர்கள். உடல் எடை குறைப்பு என்பது ஒரு சீரான மாற்றமாகும். இதனை கொஞ்சம் கொஞ்சமாக தான் குறைக்க இயலும்.

ஜிம்மில் தப்பு கணக்கு..!

பலர் ஜிம்மில் அதிக நேரம் ஒர்க் அவுட் செய்தால் விரைவாக உடல் எடையை குறைத்து விடலாம் என பகல் கனவு காண்கின்றனர். பொதுவாக ஜிம்மில் எந்த அளவிற்கு நாம் ஒர்க் அவுட் செய்கின்றோம் என்பதே முக்கியம். நீண்ட நேரம் ஒர்க் அவுட் செய்வது உடல் எடையை குறைத்து விடாது. சரியான பயிற்சியும், அளவான நேரமே தகுந்த பலனை தரும்.

கம்மியா சாப்பிடுங்க…!

பலர் பின்பற்றுகின்ற தவறான செயல்களில் இது தன முதல் இடத்தில் உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு குறைந்த கார்போஹைட்ரெட் உள்ள உணவுகளை சாப்பிட்டால் போதும் என கட்டுக்கதை கட்டுவார்கள். ஆனால், குறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் விரைவிலே சோர்வு அடைந்து விடும். எனவே, உணவை சரியான அளவில் எடுத்து கொண்டாலே எடை குறைய கூடும்.

பழங்கள் சாப்பிடாதீர்கள்..!

பழங்கள் சாப்பிட்டால் உங்கள் எடை நிச்சயம் அதிகரித்து விடும் என யாரவது சொன்னால் நம்பாதீர்கள். பழங்கள் எந்த அளவுக்கு நீங்கள் எடுத்து கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு உடல் எடையை நம்மால் குறைக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாத்திரைகள் போதுமே..!

உடல் எடையை குறைக்கும் ஒரு யுத்தியில் இந்த மாத்திரைகளும் அடங்கும் என மக்கள் தவறாக நினைத்துள்ளனர். உடல் எடை குறைப்பு மாத்திரைகள், பானங்கள், பவ்டர்கள் எந்த விதத்திலும் உங்கள் எடையை குறைத்து விடாது. மாறாக இவை உடல் எடையை கூடத்தான் செய்யும். அத்துடன் தசைகளையும் பாதித்து விடும்.

காலை உணவை தவிர்த்துடுங்கள்..!

காலையில் உணவை சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை எளிதாக குறைந்து விடும் என்ற மிக தவறான விஷயத்தை பலர் கடைபிடிக்கின்றனர். ஆனால், காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் தான் எடை கூடிவிடும் என ஆய்வுகள் சொல்கிறது. எனவே, காலை உணவை தவிர்க்காதீர்கள்.

முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள்…

மேற்சொன்ன தகவல்களை உணர்ந்து, எது சரி? எது பொய்? என்பதை நன்கு யோசித்து கொள்ளுங்கள். தவறான செயல்களை செய்வதால் பல்வேறு விபரீதங்கள் கூட நடக்கும். எனவே, உடல் எடையை சரியான உணவையும், காலத்தையும் கொண்டு வென்று விடுங்கள் நண்பர்களே

%d bloggers like this: