ஆட்சியைக் கவிழ்க்க சசிகலா அதிரடி சூழ்ச்சி… எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி!-Newstm 

ஆட்சி தப்பியதற்கு எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் சிறப்பு பூஜை நடத்தி கட்டிய கயிறுதான் காரணம் என எடப்பாடி  பழனிசாமி நம்பிக்கொண்டிருக்க, யானை குட்டி யாகம் நடத்தி அதிரடி ஆபரேஷனுக்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளார் சசிகலா.   

சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவரசி பரோலில் வரவில்லை. இப்போது கடந்த 25ம் தேதி இளவரசி மட்டும் பரோலில் வெளி வந்திருக்கிறார். நவம்பர் 8ம் தேதி மாலை 6 மணிக்குள் சிறைக்கு திரும்ப வேண்டும் என்று இளவரசிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இளவரசி திடீரென பரோலில் வந்ததற்கு நிஜமான காரணம் என்ன? ‘சசிகலாவை பெங்களூரு சிறையில் ஜோதிடர் ஒருவர் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் ஆட்சியை கலைக்க உடனடியாக 7 இடங்களில் யாகம் நடத்தும்படி அந்த ஜோதிடர் சொல்லியிருக்கிறார். அண்மையில் ஜெயிலில் வந்து சந்தித்த தினகரனிடம் கூட இதைப் பற்றி சசிகலா சொல்லவில்லையாம். யாகம் நடத்த வேண்டிய 7 இடங்களை ஜோதிடரே குறித்துக் கொடுத்துவிட்டாராம். அந்த இடங்களில் யாகத்தை நடத்தி முடிக்கத்தான், இளவரசியை வெளியில் போய் வரச் சொல்லியிருக்கிறார். அந்த திட்டத்தின்படிதான் இளவரசி வெளியே வந்திருக்கிறார்.

ஒரு இடத்தில் யாகம் நடத்த ஒரு கோடி ரூபாய் செலவு ஆகும் என்று அந்த ஜோதிடர் சொல்ல… அதன்படி 7 இடங்களிலும் யாகம் நடத்த 7 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் சசிகலா ஒப்புக் கொண்டாராம். 7 இடங்களிலும் யானைக் குட்டியை வைத்துதான் யாகம் நடத்த வேண்டும் என்றும் , யானைக்குட்டியோடு குதிரையும், பசுவும் தானம் கொடுக்க வேண்டும் எனவும் அந்த ஜோதிடர் சொன்னாராம். அத்துடன் அதற்கான ஏற்பாடுகளை தானே செய்துவிடுவதாகவும் சொல்லியிருக்கிறார் ஜோதிடர். அந்த யாகத்தில் சசிகலா குடும்பத்தில் இருந்து யாராவது பங்கேற்க வேண்டும் என்பதால், அதை தினகரனை நம்பி ஒப்படைக்காமல் இளவரசியை போகச் சொல்லியிருக்கிறார் சசிகலா.

ஆற்காடு அருகே ஒரு இடத்திலும், தேனி அருகே ஒரு கோயிலிலும், மூன்று நதிகள் சங்கமிக்கும் ஒரு இடத்திலும் இதற்கான யாகத்தை தொடங்கிவிட்டார்களாம். இந்த யாகங்களில் சத்தமில்லாமல் போய் பங்கேற்று வருகிறாராம் இளவரசி. இந்த யாகத்துக்கான செலவுகளை எல்லாம் இளவரசி மூலமாகவே செட்டில் செய்துவிட்டாராம் சசிகலா. கடந்த இரண்டு நாட்களாக யாகத்தை தொடங்கி விறு விறுவென நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

இளவரசி பரோலில் வந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. இளவரசியின் மகன் விவேக். அவரது மனைவி கீர்த்தனா. அதாவது இளவரசியின் மருமகள் தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். அவருக்கு வளைகாப்பு நடத்த வேண்டிய மாதம் என்பதால், அதில் தன்னுடைய அம்மாவும் இருக்க வேண்டும் என விவேக் விருப்பப்பட்டிருக்கிறார். சசிகலாவையும் சேர்த்தே விவேக் அழைத்திருக்கிறார். ஆனால், சிறை விதிப்படி இப்போது சசிகலா வர முடியாது என்பதால் இளவரசி மட்டும் வந்திருக்கிறார். ஆக, வளைகாப்பு, யாகம் என  இரு வேலையாக வந்திருக்கிறார் இளவரசி” என்கிறார்கள். 

%d bloggers like this: