இரத்த சோகை உள்ளவர்களுக்கு குணம் தரும் பசலைக்கீரை….!

பசலைக்கீரையில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன. வைட்டமின் சத்துக்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசியம்,  சுண்ணாம்புச்சத்து, உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன.

புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. அது நம்மைப் பேணிப் பாதுகாக்கும் உணவு. அதில் காரசத்துள்ள தாதுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. பசலைக்கீரையில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது. எனவே இரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் நன்மை  தருகின்றது.

மலச்சிக்கலில் இருந்து விடுதலை: தினமும் ஒரு கப் பசலைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.  ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப் பதால், செரிமான மண்ட லம் சீராக செயல்படும்.

பித்தம், நீர்தாரை, வெட்ட நோய்கள் குணமாகின்றன. தோல்நோய்கள், மேகம், சீதபேதி குறைகின்றது. இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன்  சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும்.

இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டி படும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால்  தலைவலி குணமாகும்.

கருவுற்றிருக்கும் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறந்த உணவு. காரணம் இதிலிருக்கும் ஃபோலிக் அமிலமும் இரும்புச்சத்தும்  ரத்த விருத்தியை அதிகரிக்கும்.

நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. முக்கியமாக உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்கள், இதனை தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். பசலைக்கீரையில் கலோரி  மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.

%d bloggers like this: