இருதய வால்வு மாற்ற எளியது ‘டாவி’ சிகிச்சை

இருதய துடிப்பு 90 சதவீதம் நின்றதும் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பு நேரிடுகிறது. பலவித இருதய நோய்களில் வால்வு சுருக்கமும் ஒரு காரணமாகிறது. வால்வு சுருங்கும் பட்சத்தில் நடக்கும் போது மூச்சுத்திணறல் நிகழும். இதை கண்டுகொள்ளாவிடில் இருதய வால்வு சுருங்கி, ரத்த குழாய்க்கு செல்லும் ரத்தம் தடைபட்டு மாரடைப்பு நேரிடுகிறது.
இருதய வால்வு சுருக்கம் அடைந்தோருக்கு முதலில் இருதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்று வால்வு பொருத்தினர். ஆராய்ச்சியாளர்களின் சீரிய முயற்சியால் தற்போது (ட்ரான்ஸ்கத்தீடர் ஆர்டிக் வால்வு ரீபிளேஸ்மென்ட்) ‘டாவி’ முறையில் ரத்தம் சிந்தாமல், காயமின்றி வால்வு மாற்றி சாதித்து வருகின்றனர்.
‘டாவி’ சிகிச்சை


இருதய வால்வு சுருக்கம் அடைந்தவர் தொடையில் உள்ள ரத்தக்குழாய் வழியே, இருதயத்தின் மகா தமனிக்கு பலுானை செலுத்தி, வால்வை விரிவடைய செய்து, பின் செயற்கை சேபியன்/இவர்லுாட் வால்வை பொருத்துவதே ‘டாவி’ சிகிச்சை முறை. சிக்கலான ஆஞ்சியோ
பிளாஸ்டி, ஸ்டெண்ட், பைபாஸ் சர்ஜரி சிகிச்சைக்கான நேரத்தை விட குறைந்த நேரமே ஆகும். இதற்கான வால்வை வெளிநாடுகளில் வாங்க வேண்டிய நிலை உள்ளதால் மட்டுமே அதற்கான விலை அதிகம். இருப்பினும் இச்சிகிச்சையில் டாக்டர்கள் சாதித்து வருகின்றனர்.
40 நிமிட நடைபயிற்சி சாத்தியம்
கோயம்புத்துார் பி.எஸ்.ஜி., இன்ஜி., கல்லுாரி பேராசிரியர் (ஓய்வு) சி.டி.,கோதண்டராமன் கூறியதாவது: எனக்கு 85 வயது. தினமும் நடைபயிற்சி மேற்கொள்வேன். கடந்த2015ல் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ‘எக்கோ’ எடுத்து பார்த்தோம்.
இருதய வால்வு சுருங்கியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். என் வயதை காரணமாக கூறி சிகிச்சை வேண்டாம் என சொல்லிவிட்டனர். அப்போது தான் சென்னை
அப்போலோ இருதய நோய் சிறப்பு நிபுணர் ஜி.செங்கோட்டுவேலுவிடம் ஆலோசனை பெற்றேன். அவர் தாராளமாக ‘டாவி’ முறையில் சிகிச்சை பெறலாம் என நம்பிக்கை தந்தார்.
‘டாவி’ சிகிச்சை மூலம் எனக்கு இருதயத்தில் மாற்று வால்வு பொருத்தினார். இச்சிகிச்சை 3 நாளில் முடிந்து வழக்கமான பணியை துவக்கினேன்.
தற்போது இருவேளையும் 40 நிமிடம் மூச்சு திணறலின்றி நடைபயிற்சி மேற்கொள்கிறேன் என்றார்.
‘டாவி’ சிகிச்சையில் ஆயுள் நீட்டிப்பு
சென்னை அப்போலோ மருத்துவமனை இருதய நோய் சிறப்பு நிபுணர் ஜி.செங்கோட்டுவேலு கூறியதாவது: திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு மாற்றாக, ‘டாவி’ சிகிச்சை சிறந்தது. இருதய வால்வில் மகாதமனி அடைப்பு ஏற்பட்டு ஆண்டுக்கு பத்து லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் பாதித்தோருக்கு நடப்பது, மாடிப்படி ஏறுதல் போன்று தினசரி வாழ்வாதார நடவடிக்கை முடங்கும். பாதித்த வால்வை மாற்றுவதன் மூலம் பயன் பெறலாம்.
உலகளவில் 3ல் இரண்டு பங்கு நோயாளிகளே இச்சிகிச்சை பெறுகின்றனர். இதனால் வயதான நோயாளிகளின் ஆயுளை நீட்டித்துள்ளோம். 65 வயதுடையவர்களில் 2 சதவீதம் பேருக்கும், 85 வயதுள்ளவர்களில் 4 சதவீதம் பேருக்கு இந்நோய் பாதிப்பு இருக்கும். இச்சிகிச்சைக்கான செலவு குறைவு தான். ஆனால், வெளிநாடுகளில் இருந்து வால்வு வாங்க 18 லட்ச ரூபாய் வரை செலவாகும். இதற்கு மாற்றாக அடுத்த 3 ஆண்டுக்குள் குறைந்த விலையில் இந்தியாவிலேயே வால்வு கிடைப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுகிறோம்.
ஜெர்மனி, அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளில் இச்சிகிச்சை முறை அதிகளவில் நடக்கிறது, என்றார்.
மேலும் அறிய 94457 76666.

%d bloggers like this: