புதினாவை முகர்ந்தாலே உடல் எடை குறைந்து விடுமாம்..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க..

குண்டா..? ஒல்லியா..?

ஒரு சிலருக்கு குண்டாக ஆக வேண்டும் என எண்ணம் நீண்ட நாட்களாக இருக்கும். ஆனால், பலருக்கு ஒல்லியாக கச்சிதமான உடல் எடையுடன் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர். இது உண்மையில் சாத்தியமாக கூடுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கிறது. சரியான முறையில் எளிமையாக உடல் எடையை குறைக்க முடியும்.

நீல நிறமே…!

இது ஒரு புதுவிதமான உடல் எடை குறைப்பிற்கான வழியாக பல்வேறு மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, நீல நிறத்தில் உங்கள் வீட்டை சுற்றி அலங்கரித்து கொண்டால் உங்களின் பசியை குறைத்து விட இயலுமாம். குறிப்பாக உங்களின் தட்டு, சமையல் அறை, சாப்பிடும் அறை, உங்களின் உடை ஆகியவை நீல நிறத்தில் இருந்தால் அதிக அளவில் பசியை தூண்டாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதினாவை முகர்ந்தாலே போதுமா..?

இது உண்மையில் வேடிக்கையாக தான் இருக்கும். ஆனால், இந்த முறை நன்றாக வேலை செய்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது, நீங்கள் புதினா அல்லது வாழைப்பழத்தை அடிக்கடி முகர்ந்து பார்க்கும் போது உங்களின் பசியை இது குறைத்து விடுகிறதாம். எனவே, இந்த முறையை வைத்து எளிதில் உடல் எடையை குறைக்க முடியுமாம்.

காலையில் எப்போதும் அதிகம்..!

உடல் எடை கூடுதலாக இருப்பவர்களுக்கு காலையில் 700 கலோரிகளும், மதியம் 500 கலோரிகளும், இரவு நேரத்தில் 200 கலோரிகளே போதும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, மற்ற வேளைகளை விட காலை நேரத்தில் நீங்கள் அதிக உணவு உண்டால் உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளலாம்.

அதிக ஊறுகாய்..!

சாப்பிடும் உணவில் அதிக அளவில் ஊறுகாயை சேர்த்து கொண்டால் எளிதில் உடல் எடையை குறைத்து விடலாமாம். அதாவது, ஊறுகாயில் உள்ள வினிகர் மற்றும் அசிட்டிக் அமிலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, கொழுப்புகள் உருவாவதையும் தடுக்கிறதாம்.

சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நோ நோ…!

உங்கள் வீடுகளில் இது போன்ற நிறத்தை அதிகம் பயன்படுத்தாதீர்கள். மீறி பயன்படுத்தினால் உங்களின் பசியை இவை அதிகரிக்க செய்து அதிகமாக சாப்பிடும் எண்ணத்தை தூண்டி விடும். எனவே, விரைவில் நீங்கள் குண்டாகி கொண்டே போவீர்கள். இதனால் தான் பெரும்பாலான உணவகங்களில் இது போன்ற நிறங்களில் டெகரேஷன் செய்து உங்களின் பசியை தூண்டி விடுவார்கள்.

முட்டை போதுமே..!

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு எளிய வழி உள்ளது. அதவாது, காலை உணவில் ஒரு முட்டையை சாப்பிட்டால் மிக குறைந்த காலத்திலே எடையை குறைத்து விடலாம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அல்லது வேறு ஏதேனும் புரத சத்து கொண்ட உணவை காலை வேளையில் எடுத்து கொண்டாலும் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.

சாப்பாட்டிற்கு முன் நீரா..?

உணவை சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக நீர் குடித்தால் உடல் எடையை குறைக்க முடியுமாம். ஏனெனில், இவை குறைந்த அளவில் நம்மை கலோரிகளை எடுத்து கொள்ள செய்து எடையை கூடாமல் வைத்து, விரைவில் குறைய செய்து விடும்.

எவ்வளவு ஜங்க் மெயில்..?

இது முற்றிலும் புதுமையான முறையாக பல்வேறு மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது, உங்களின் மெயிலில் நீங்கள் வைத்துள்ள ஜங்க் மெயிலின் அளவிற்கு ஒவ்வொரு நாளும் உங்களின் வீட்டை சுற்றி நீங்கள் ஓட வேண்டும். இது எளிதில் உடல் எடையை குறைக்க பயன்படும் என பல நாட்டு மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

வயிற்றில் ரிப்பன்..!

பெரும்பாலான மக்கள் உடல் எடை குறைக்க இந்த ரிப்பன் முறையை பயன்படுத்துகின்றனர். அதாவது, இரவு விருந்திற்கோ அல்லது ஏதேனும் விழாக்களுக்கோ செல்லும் போது அவர்களின் உடையுடன் சேர்த்து ரிப்பன் ஒன்றை வயிற்று பகுதியில் கட்டி கொள்வார்களாம். இது அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்தி எடையை குறைக்க பயன்படும்.

உணவு கட்டுப்பாடு..!

நாம் சாப்பிடும் உணவில் எந்த அளவிற்கு கலோரிகள் உள்ளது என்பதை உணர்ந்து சாப்பிட்டாலே உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளலாம். குறிப்பாக நாம் சாப்பிட கூடிய உணவுகள் அனைத்துமே சத்துள்ள உணவுகளாக இருப்பது நன்று.

%d bloggers like this: