அவசியம் பின்பற்ற வேண்டிய முதலீட்டு பிரமீடு!

நாம் பல்வேறு தேவைகளுக்கு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த முதலீடுகளை எப்படி அமைக்க வேண்டும் என்பதை முதலீட்டு பிரமீடு (Investment Pyramid) விளக்குகிறது.

 

இதன்படி முதலில் ஒருவர் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஆயுள் காப்பீட்டு பாலிசியை குடும்பத்தின் வருமானம் ஈட்டும் நபர்களின் பெயரில் அவர்களின் ஆண்டுச் சம்பளத்தைப்போல் பத்து மடங்குத் தொகைக்கு எடுக்க வேண்டும். ஹெல்த் பாலிசியை ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் எடுக்க வேண்டும். அடுத்து ரிஸ்க் அதிகம் இல்லாத     பி.பி.எஃப், எஃப்.டி, தங்கம் மற்றும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் ஓரளவு முதலீடு செய்ய வேண்டும்.

பிறகுதான் பங்கு சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். அடுத்ததாக, வீடு மற்றும் மனைகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம். குடியிருக்க வீடு தேவை என்கிறபோது, அதற்கான முதலீட்டைப் பங்கு சார்ந்த முதலீடுகளுக்கு முன் ஆரம்பிப்பதில் தவறு ஒன்றும் இல்லை.
இவற்றையெல்லாம் முடித்த பிறகே ஊகத்தின் அடிப்படையிலான பங்குச் சந்தை வர்த்தகம், ஃப்யூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் இவற்றின் மூலம் இழப்புகள் ஏற்பட்டால் அவற்றைச் சமாளிக்க பணம் இல்லாமல் போய்விடும்.  முதலீட்டு பிரமீட்டை நாம் அனைவரும் பின்பற்றுவது அவசியம்.

%d bloggers like this: