Advertisements

ஆன்லைன் ஷாப்பிங்… அதிக தள்ளுபடி பெற அசத்தல் வழிகள்!

விழாக்காலம் தொடங்கிவிட்டது. எங்குப் பார்த்தாலும் புதுப்புது ரகங்களும் தள்ளுபடிகளும் மக்கள் கூட்டமுமாக நகர வீதிகள் ஜொலிக்கின்றன. வியாபாரத்தில் நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று போட்டி போட்டுத் தள்ளுபடி தருகின்றன ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள். வியாபார வலைதளங்கள் மட்டுமின்றி உணவு விநியோக நிறுவனங்கள்கூட இயல்பைவிடக் கூடுதல் சலுகைகள் வழங்குகின்றன.

இப்படி அள்ளி அள்ளித் தரும் சலுகைகளை எப்படி அதிகப்படியாக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஐடியாக்கள் இதோ…

தளத்தைவிட செயலி பெஸ்ட்


வர்த்தக நிறுவனங்களின் வலைதளத்திலிருந்து பொருள்களை வாங்குவதைவிட அவர்களுக்கான ஆப்களிலிருந்து வாங்கும்போது கூடுதலாக 10% முதல் 20% வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. இது அவர்களுக்கான தனிப்பட்ட ஆப்களை பயன்படுத்தவைக்கும் முயற்சி. நமக்கும் கூடுதல் லாபம். புதியவர் என்றால் மேலும் பரிசுகள்.

 

ஒரே செயலியில் பல அக்கவுன்டுகள்

நமக்குச் சலுகை தரும் எல்லா நிறுவனங்களுக்கும் நோக்கம் ஒன்றுதான். தனக்கான வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். புது வாடிக்கையாளர்களை உள்ளே கொண்டுவர அறிமுகச் சலுகைகள் வழங்கப்படும். பழைய வாடிக்கையாளர்களுக்குக் குறைவாகவே வழங்கப்படும். அதனால் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு மின்னஞ்சல் முகவரிகளிலிருந்தும் மொபைல் எண்களிலிருந்தும் புதிதாக அக்கவுன்ட் தொடங்கி அறிமுகச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வரலாறு விலையை நிர்ணயிக்கும்

பொதுவாக இன்றைய ஆப்கள் எல்லாம் நம் பிரவுசர் தேடல்கள், ஆர்டர் செய்த பொருள்கள் அதன் விலை நிலைகள் ஆகியவற்றை அடிப்படை யாக வைத்தே நமக்கான விலையை நிர்ணயிக்கும். பிராண்டுக்கு முக்கியத்துவம் அளித்து விலை உயர்ந்த பொருள்கள் வாங்குபவராக இருந்தால் அவர்களுக்கான விலையும் அதிகமாகவே இருக்கும். சர்ச் ஹிஸ்டரிகளையும் குக்கிகளையும் அழித்துவிட்டால் இந்தப் பிரச்னை குறையும். விலையும் புதியவருக்கு உள்ள அளவே கிடைக்கும்.

மறைநிலைச் சாளரம்

குக்கிகளை அழிப்பதோடு மட்டுமின்றி அதிலிருந்து தவிர்க்க இன்னொரு வழிதான் ‘private window’ எனப்படும் வசதி. மறைநிலைச் சாளர வசதி எல்லா பிரவுசர்களிலும் உள்ளது. இது மற்ற விவரங்களைக் கருத்திலெடுக்காது. புதியவர் போலவே செயல்படும்.

க்ரோம்: செட்டிங் > நியூ இன்காக்னிட்டோ விண்டோ (Cntl + Shift+N )

இன்டர்நெட் எக்ஸ்பிளோரர்: டூல் > சேப்டி > இன் பிரைவேட் பிரவுசிங் (Cntl + shift + P)

ஃபையர்பாக்ஸ் : செட்டிங் > நியூ பிரைவேட் விண்டோ      (Cntl + Shift + P)

விலையிறக்க நிலையறிதல்

விலை மாறுபாடுகளைக் கையிற்கே கொண்டுவர இன்னொரு வழி  இ-மெயில் சந்தா. ஒருநாள், ஒரு மணிநேர ஆஃபர்கள்கூட உடனடி பார்வைக்கு வந்துவிடும். நாம் அதிகம் தேடிய பொருள்கள் விலை குறைந்தாலோ சலுகைகள் வந்தாலோ அதவும் நமக்கு அனுப்பப்படும். அப்போது அப்படியே அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கூப்பன்கள்

ஒரு பொருள் ஆன்லைன் தளத்தில் வாங்கினால் திரும்ப அந்தக் கடைக்கு வரவைக்க வேண்டும் என்பதற்காக கூப்பன் கள் வழங்கப்படும். அது குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட அளவுகளிலேயே வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

கூப்பன்கள் தளம்

சில தளங்களில் நாம் உறுப்பினராகச் சேர்ந்தால் அதற்காக அந்தத் தளத்தில் மட்டுமல்லாது மற்ற தளத்திலும் சில வசதிகள், கூப்பன்கள் முதலியன இணைப்பாகக் கிடைக்கும். Coupon2guru, GreatBuys, reecouponIndia, Oneindia, Grab on, Nearby, Bluebook உள்ளிட்ட தளங்கள் அமேசான், ஃப்ளிப்கார்ட், பிக் பாஸ்கெட், மேக் மை ட்ரிப், புக் மை டிக்கெட் எனத்தொடங்கிப் பல நிறுவத்திற்கான சலுகைகளை வழங்குகின்றனர்.

இதிலும் வெவ்வேறு மின்னஞ்சல் கள் வைத்து அக்கவுன்ட் வைத்துக் கொண்டு பல்வேறு சலுகைகளைப் பெறலாம். நிறுவனங்களைப் பொறுத்து 10 – 40% வரை ஆஃபர் பெறலாம்.

கூப்பன் எக்ஸ்டென்ஷன்

க்ரோம் போன்ற பிரவுசர்களில் ‘எக்ஸ்டென்ஷன்’ எனும் வசதி உண்டு. BuyHatke, Shopsmart,Aftercoupen India, MakkhiChoose, derailment.com, couponcraze.com போன்றவற்றின் துணைகொண்டு கூப்பன்களைப் பெறலாம். இதன் மூலமும் 10% டிஸ்கவுன்ட் பெறலாம்.

கேஷ் பேக் சலுகைகள்

சில தளங்கள் டிஸ்கவுன்டை கேஷ் பேக் என்ற பெயரில் தரும். Gopaisa, Crowning, Tapzo, Magic pin, Topcashback, Cashkaro, Paisawapas, sitapha உள்ளிட்டவைகள் கேஷ் பேக் வசதிக்காகவே அமைக்கப்பட்டுள் ளன. இவற்றில் அக்கவுன்ட் வைத்துக் கொண்டால் அதன்மூலம் சில கூடுதல் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாலட் & கார்டு பேமென்ட் சலுகைகள்

டிஜிட்டல் இந்தியா, கேஷ்லெஸ் இந்தியா என்று வந்தபின்னர் இணைய பண பரிவர்த்தனையைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கச் சந்தையில் உலாவரும் Paytm, PayUmoney, Mobikwik, Citrus, Jio Money,  ICICI-யின் Pocket, SBI-யின் Buddy, Google Pay எனப் பல வாலட்கள் வழி ஆர்டர் செய்தாலோ, டிக்கெட் புக் செய்தாலோ அது அதற்கென தனித்தனி சலுகை வகைகளைப் பட்டியல் போட்டுத் தருகிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட், மிந்த்ரா உள்ளிட்ட நிறுவனங்கள் கார்டு பேமென்டுகளுக்கும், தனக்கென உருவாக்கிக்கொண்ட ‘AmazonPay’ போன்ற வாலட்டைப் பயன்படுத்துவோருக்கும் 10% சதவிகிதம் சலுகை தருகிறது.

கிடப்புச் சலுகை ட்ரிக்

வேண்டிய பொருள்களைத் தேர்வுசெய்து கார்ட்டுக்கு நகர்த்திவிட்டு பேமென்ட் செய்யாமல் அதை சில நாள்கள் கிடப்பில் விடுங்கள். அதில் மேலும் ஆஃபர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வாங்க நினைத்து எடுத்துள்ள பொருள்களை வாடிக்கையாளர் வாங்கவில்லையெனில், அவரை எப்படியாவது வாங்க வைக்கவேண்டும் என்று முயற்சி செய்வர். அதற்காகத்தான் அந்தக் கூடுதல் சலுகைகள். நமக்குக் கூடுதல் லாபம்.

சமூக வலைகளில் பின்தொடர்வதால் பரிசு

சில நிறுவனங்கள் அவர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைத் தொடர்ந்து பின்தொடர்பவர்களுக்கு பரிசு போன்று அவ்வப்போது சிறுசிறு ஆஃபர்கள் வழங்குவதுண்டு. சிறிதும் செலவின்றி சும்மா போட்டு வைக்கும் ஒரு லைக்குக்கு ஆஃபர் கிடைத்தால் கசக்குமா என்ன?

இன்றைய சூழலில் இன்னொரு முறைகூட பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில நிறுவனங்களில் ரூ.499 மேல் தான் இலவச டெலிவரி என்பார்கள். நமக்குத் தேவையானது ரூ.200 பொருள் என்றால், அதற்குக் கூடுதல் டெலிவரி சார்ஜ் செலுத்தாமல் பெற ரூ.500-க்கு ஆர்டர் செய்துவிட்டு, ஆர்டர் உறுதியானதும் தேவையில்லாத பொருள்களை கேன்சல் செய்துவிடுகின்றனர். அப்போது தேவையான பொருள் டெலிவரி கட்டணமின்றி  வந்துவிடுகிறது.

அமேசானின் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’, மிந்த்ராவின் ‘ஃபெஸ்டிவல் உத்சவ்’, ஃப்ளிப்கார்ட்டின் ‘ஃபெஸ்டிவ் டமாக்கா’ என்று அவர்கள் தரும் சலுகைகளையெல்லாம் கூடுதலாகப் பெற்று கூடுதல் மகிழ்ச்சியுடன் விழாக்காலத்தைக் கொண்டாடலாம்.


கூப்பன்களை லாபகரமாகப் பயன்படுத்துங்கள்!

கூப்பன்கள் பல விதங்களில் வருகிறது. ரூ.100 சலுகை, 10% சலுகை என கூப்பன் இருந்தால் அதைப் பொருளுக்கு ஏற்றாற்போல் பயன்படுத்த வேண்டும். ஒரு பொருள் வாங்குகிறோம். அதன் விலை ரூ.2,000 என்றால், அதற்கு ரூ.100 கூப்பன் பயன்படுத்திவதைவிட 10% கூப்பன் பயன்படுத்தினால் ரூ.200 சலுகை பெறலாம். பின்னர் 200 ரூபாய் பொருள், ரூ.40 டெலிவரி சார்ஜுடன் வருகிறது என்றால், அதில் ரூ.100 சலுகைப் கூப்பனை பயன்படுத்தினால், மொத்தத்தில் ரூ.176 கூடுதல் சேமிப்புதானே. அதேபோல் ரூ.1,999-க்கு வாங்கினால் ரூ.150 தள்ளுபடி என்றால், ரூ.3,999-க்கு ஒரே பில்லாகப் போடாமல் இரண்டு பில்லாகப் போட்டால் ரூ.300 தள்ளுபடியாகப் பெறலாம். டபுள் சந்தோஷம்தானே.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: