Advertisements

உங்களின் ‘சுக்ர’ விரல் என்ன சொல்கிறது?

ம் கையில், கட்டை விரல் சுக்ரமேட்டுப் பகுதியில் ஆரம்பிக்கிறது. இதற்கு `சுக்ர விரல்’ என்று பெயர். இது இரண்டு எலும்புத்துண்டுகளின் சேர்க்கையால் அமைகிறது.

இந்த விரல் வடமொழியில் ‘அங்குஷ்ட’ எனக் குறிப்பிடப்படுகிறது. ஒரு மனிதனின் மனோபாவம், உணர்ச்சிகள், சிந்தனைத் திறன், எண்ணங்கள், செயல்படும் திறன் ஆகியவற்றைக் கட்டை விரல் கட்டுப்படுத்துகிறது. அதேபோல், மற்ற விரல்கள் செயல்படும் திறமைக்கும் கட்டை விரலே உதவுகிறது. கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையே அமைந்துள்ள கோணத்தை வைத்து, கட்டை விரல் அமைப்பை மூவகைகளாகப் பிரிக்கலாம்.அவை: விரிகோணக் கட்டை விரல், செங்கோணக் கட்டை விரல், குறுங்கோணக் கட்டை விரல்.

விரிகோணக் கட்டை விரல்

விரல்களை நன்றாக விரித்த நிலையில், கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே உள்ள கோணம் 90 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும். இத்தகைய அமைப்பை உடையவர்கள் நேர்மையானவர்கள், அமைதியை விரும்புபவர்கள், கலைஞர்கள், பழகுவதற்கு இனியவர்கள். இளமையில் கஷ்டப்பட்டாலும், சுய முயற்சியாலும் உழைப்பாலும், முன்னேறுபவர்களாகத் திகழ்வார்கள். இவர்கள் திடச்சித்தமும் வைராக்கியமும் உள்ளவர்கள். ஆசிரியர்கள், சமயத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், இசை மேதைகள் ஆகியோர் இத்தகைய அமைப்பை உடையவர்களாகத் திகழ்வார்கள்.

செங்கோணக் கட்டை விரல்

விரல்களை நன்றாக விரித்த நிலையில், கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையேயுள்ள கோணம் சரியாக 90 டிகிரியாக இருக்கும். இத்தகைய அமைப்புள்ளவர்கள் கடுமையான உழைப்பாளிகள்; சகலகலா வல்லவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், பிறருக்கு நன்மை செய்பவர்களாகவும் விளங்குவர். உறுதியும், விடாமுயற்சியும் உள்ளவர்கள். தலைவர்களாக இருக்கும் தகுதி மிக்கவர்கள். டாக்டர், இன்ஜினீயர், தொழிலதிபர்கள், பெரும் வியாபாரிகள், நுணுக்கமான கலைகளில் வல்லுநர்கள் ஆகியோர் இந்த வகையில் அடங்குவர்.

குறுங்கோணக் கட்டை விரல்

விரல்களை நன்றாக விரித்த நிலையில், கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே உள்ள கோணம் 90 டிகிரிக்குக் குறைவாக இருக்கும். இத்தகைய கட்டை விரல் அமைப்புடையவர்கள் சுறுசுறுப்பு இல்லாதவர்களாகவும் குறுக்கு வழியில் செளபாக்கியத்தைத் தேடுபவர்களாகவும் விளங்குவார்கள். இவர்களுக்கு கல்வியறிவு கைகூடாது என்றாலும், அனுபவ அறிவு கைகொடுக்கும். உடல் உழைப்பு அதிகமுள்ள தொழில்களைச் செய்வார்கள்.


 

எப்போது பெயர் சூட்டலாம்?

ரு குழந்தை பிறந்தது முதல் நடைபெறும் ஒவ்வொரு சுபநிகழ்வுக்கும் உகந்த நாள்கள் குறித்த அறிவுறுத்தல்களைத் தருகின்றன ஞானநூல்கள். அவ்வகையில் பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டும் நிகழ்வை, குழந்தை பிறந்து 10, 11, 12 அல்லது 16-ம் நாளில் நிகழ்த்தலாம்.

பெயர் சூட்டுவதற்கு உகந்த சுப கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி.

திதி: ரிக்தா திதிகள் (4, 9, 14வது திதிகள்), அஷ்டமி தவிர மற்றவை.

நட்சத்திரம்: சர, ஸ்திர, துரித, சாது நட்சத்திரங்கள் முறையே புனர்பூசம், சுவாதி, திருவோணம், அவிட்டம், சதயம், ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அசுவினி, பூசம், அஸ்தம், மிருகசீரிடம், சித்திரை, அனுஷம் அல்லது ரேவதி சிறந்தவை.

யோகம்: விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வ்யாகாதம், வஜ்ரம், வ்யதிபாதம், பரிகம் மற்றும் வைதிருதி தவிர பிற யோகங்கள் சிறந்தவை.

கரணம்: சகுனி, விஷ்டி ஆகியவற்றைத் தவிர பிற கரணங்கள் சிறந்தவை.

அதேபோல் `அன்ன ப்ராசனம்’ வைபவத்தை… ஆண் குழந்தைக்கு 6, 8 அல்லது 10வது மாதங்களிலும், பெண் குழந்தைக்கு 5, 7, 9 அல்லது 11-வது மாதங்களிலும் நடத்தலாம்.

Advertisements
%d bloggers like this: