கணுக்கால் சுளுக்கிடுச்சா? இத செய்ங்க… உடனே சரியாகிடும்…

கணுக்காலில் உண்டாகும் சுளுக்கைப் போக்குவதற்கான சில தீர்வுகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இது உங்கள் வலியைக் குறைக்க உதவலாம் மற்றும் விரைந்து உங்கள் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவலாம். கணுக்காலில் சுளுக்கு ஏற்படுவது மிகவும் சாதாரணமான விஷயம் தான். ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து நடப்பதால் அல்லது மிக வேகமாக நடப்பதால் இந்த பிரச்சனை உண்டாகலாம். சில நேரம் இந்த வலி கடுமையாக இருந்து அதனால் சில நாட்கள் நடக்க முடியாமல் இருக்கலாம்.

இந்த பதிவில், கணுக்கால் சுளுக்கைப் போக்க சில வகை சிகிச்சை மற்றும் தீர்வுகளைப் பற்றி காணலாம். இதனால் வலி குறைவதோடு , விரைந்து இதில் இருந்து நிவாரணம் பெற முடியும். உங்கள் தினசரி செய்லபாடுகளை எளிதில் உங்களால் தொடர முடியும்.

காரணங்கள்

கணுக்கால் சுளுக்கு என்றால் என்ன மற்றும் இது எப்படி உண்டாகிறது என்பது பற்றி முதலில் நாம் காணலாம்.

இதற்கு, நாம் மூட்டுகளில், உறுப்புகளுக்கு ஸ்திரத்தன்மையை வழங்கும் தசைநார் கட்டமைப்புகள் பற்றி பேச வேண்டும். அவை இயக்கத்தை அனுமதிக்கும் “தண்டு” வகையைச் சேர்ந்தவையாகும். இவை அதிக இறுக்கமாகும்போது கிழிய நேரும். இதனால் சுளுக்கு ஏற்படுகிறது. மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் நபர்களுக்கு அடிக்கடி உண்டாகும் ஒரு பிரச்சனை இந்த கணுக்கால் சுளுக்கு. ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு அவர்கள் பாத அமைப்பின் காரணமாக இந்த பிரச்சனை அடிக்கடி உண்டாகும் வாய்ப்பு உண்டு. ஹை ஹீல்ஸ் அணிவதால் உங்கள் விரல்கள் மட்டுமே மொத்த உடல் பாரத்தையும் தாங்குவதால் தசை நார்கள் இயல்பை விட அதிக இறுக்கமாக வாய்ப்புகள் உண்டு.

கணுக்காலில் காயம் உண்டாக கீழே விழ வேண்டும் என்ற அவசியம் இல்லை, சில வகை செருப்புகளே இதற்குக் காரணமாகலாம்.

வீட்டுத் தீர்வுகள்

உங்களுக்கு காலில் காயம் உண்டானால், முதலில் உங்கள் கணுக்காலை அசைக்காமல் இருக்க வேண்டும். அதாவது, முடிந்த அளவிற்கு நடக்காமல் ஓய்வு எடுப்பது அவசியம். அதிர்ஷ்டவசமாக, திசுக்கள், தசைநார்கள், சேதமடைந்த தசைநாண்கள் ஆகியவற்றை சரிசெய்ய சில இயற்கை சிகிச்சைகள் உள்ளன. அவற்றை பற்றி இப்போது காணலாம்.

சிவப்பு களிமண் மற்றும் ஒயின் வினிகர்

எந்த ஒரு காயத்தையும் சுளுக்கையும் போக்க இது ஒரு மிகப் பழமையான தீர்வாகும். இந்த களிம்பு ஒரு அடர்த்தியான அதே சமயத்தில் மிகவும் மென்மையான ஒரு களிம்பாகும். மருத்துவ நோக்கங்களுக்காக உடலின் எந்த ஒரு பகுதியிலும் இதனைத் தடவ முடியும்.

களிமண்ணிற்கு பல்வேறு தன்மைகள் உண்டு. இது காயத்தை குணப்படுத்துகிறது, தொற்றை தடுக்கிறது. உடலுக்கு அமைதியைத் தருகிறது, அழற்சியைக் குறைக்கிறது, கனிமங்களை வழங்குகிறது. இதே நேரம், ஒயின் வினிகர் தொற்றைப் போக்க உதவுகிறது, மற்றும் களிம்பிற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. இந்த வகையில் இந்த களிம்பு காயத்தைப் போக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

1 கப் சிவப்பு களிமண் தூள் (180கிராம்)

ஒயின் வினிகர் (தேவைக்கேற்ப)

கிளிங் பிலிம்

செய்முறை

ஒரு பெரிய கிண்ணத்தில் சிவப்பு களிமண்ணை போடவும். இதில் ஒயின் வினிகரை சிறிது சிறிதாக சேர்த்து இரண்டு கைகளால் கலக்கவும். பாதிக்கப்பட்ட இடத்தில் தடவும் விதத்தில் இந்த விழுதை தயாரிக்கவும். இதனை பாதிக்கப்பட்ட இடத்தில தடவி காய விடவும். ஒரு கிளிங் பிலிம் பயன்படுத்தி அந்த பகுதியை சுற்றிக் கொள்ளவும். 20 நிமிடம் கழித்து இதனை அகற்றி, வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும்.

ஐஸ்

கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டவுடன் குளிர்ந்த நீரால் அந்த இடத்தைக் கழுவுவது ஒரு சிறந்த தீர்வாகும். இதனால் வீக்கம் குறைகிறது. மேலும் சுளுக்கு உண்டான இடத்தில் உடனடியாக ஐஸ் தடவுவது நல்ல தீர்வைத் தரும்.

செய்முறை

ஒரு பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அதனை ஒரு டவலில் சுற்றி பாதிக்கப்பட்ட இடத்தில ஒத்தடம் கொடுக்கவும். ஒரு மெத்தை அல்லது சோபாவில் அமர்ந்து உங்கள் கால்களை நெஞ்சுக்கு நேராக உயர்த்தி வைத்துக் கொண்டு உட்காரவும். இதனால் காயம் உண்டான இடத்தில இரத்தம் கட்டாமல் பார்த்துக் கொள்ளலாம். இப்படி செய்வதால் வீக்கம் குறைகிறது.

15 நிமிடங்கள் தொடர்ந்து ஐஸ் ஒத்தடம் கொடுத்து அரை மணி நேர இடைவெளிக்கு பின் மீண்டும் அதனைத் தொடரவும்.

எப்சம் உப்பு

இந்த உப்பில், மெக்னீசியம் அதிகம் இருப்பதால் தசை வலிகளுக்கு நல்ல ஒரு தீர்வைத் தருகிறது.

தேவையான பொருட்கள்

4 கப் தண்ணீர் (ஒரு லிட்டர்)

1/2 கப் எப்சம் உப்பு

செய்முறை

தண்ணீரை சூடாக்கி ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும். அந்த நீரில் அரை கப் எப்சம் உப்பு சேர்த்து கரைத்து விடவும். அந்த தண்ணீர் ஆறட்டும்.

தண்ணீர் நன்கு ஆறியவுடன், உங்கள் பாதங்களை அந்த நீரில் ஊற விடவும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை முயற்சிக்கவும்.

வெந்நீர் ஒத்தடம்

சுளுக்கு ஏற்பட்டு 24 மணி நேரத்திற்கு பிறகு, வீக்கம் சற்று குறைந்து வலியும் குறையலாம். ஆனால் வலி முற்றிலும் குணமடையாமல் இருக்கும்.

அந்த நேரத்தில் வெந்நீர் ஒத்தடம் தருவதால் வலி முற்றிலும் குணமாகும். இரத்த ஓட்டம் சீராகி, தசைகள் தானாக நெகிழத் தொடங்க உதவியாக இருக்கும். வெந்நீரில் ஒரு துணியை நனைத்து காலில் ஒத்தடம் தரலாம், எலெக்ட்ரிக் பேட் பயன்படுத்தலாம், அல்லது கால்களில் போர்வை கொண்டு மூடிக் கொள்ளலாம்.

செவ்வந்திப் பூ

கணுக்கால் சுளுக்கைப் போக்க பல்வேறு மூலிகைகள் நல்ல தீர்வைத் தருகின்றன. அதில் செவ்வந்திப்பூ சிறந்தது. செவ்வந்திப்பூவுடன் கூடுதலாக, ஹார்ஸ் டைல், புர்டோக், காம்ப்ரே போன்ற மூலிகைச் செடிகளையும் பயன்படுத்தலாம். இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தசைக்கு மென்மையைத் தருகின்றன.

தேவையான பொருட்கள்

நீங்கள் தேர்வு செய்யும் மூலிகை 4 ஸ்பூன் (60கிராம்)

4 கப் தண்ணீர்

செய்முறை

எப்சம் உப்பில் தயாரித்த தண்ணீர் போல், ஒரு கிண்ணம் கொதிக்கும் நீரில், நீங்கள் தேர்வு செய்த மூலிகையைப் போடவும். இந்த நீர் சற்று வெதுவெதுப்பாக இருக்கும்போது, அந்த நீரில் கால்களை ஊற வைக்கவும். 20 நிமிடங்கள் தொடர்ந்து ஊற வைக்கவும்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய் சமையலில் அதன் நிறம், சுவை மற்றும் மணத்திற்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது மருத்துவ குணம் கொண்ட ஒரு மசாலாப் பொருள். மேலும் சுளுக்கைப் போக்குவதில் சிறந்த பலனளிக்கிறது. இதற்குக் காரணம், மிளகாயில் இருக்கும் கப்சைசின் என்னும் ஒரு மூலப்பொருள். இது வலியைக் குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

ஒரு கப் வெந்நீர் (250மி லி )

ஒரு சிட்டிகை மிளகாய் தூள்

செய்முறை

மிளகாய்த் தூளை ஒரு கப் வெந்நீரில் கரைத்துக் கொள்ளவும். ஒரு துணி அல்லது பஞ்சை அந்த நீரில் நனைத்துக் கொள்ளவும். பாதிக்கப்பட்ட இடத்தில அந்த துணி அல்லது பஞ்சை பரப்பி வைக்கவும். கழுவ வேண்டாம்.

மேலே கூறிய குறிப்புகளை ஒரு புறம் பயன்படுத்தினாலும், மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க மறக்க வேண்டாம். மருத்துவ அறிவுரையுடன் சேர்த்து இந்த முயற்சிகளை நீங்கள் கடைபிடிக்கலாம்.

%d bloggers like this: