Daily Archives: நவம்பர் 10th, 2018

மனதார உண்ணுங்கள்!

ஆரோக்கியமான வாழ்வுக்கு சத்துமிக்க உணவு அவசியம் என்பது தெரியும்தான். அதேவேளையில் அந்த உணவினை உண்ணும் மனநிலையும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்களும், உணவியல் நிபுணர்களும்… உணவுக்கும் மனதுக்கும் என்ன தொடர்பு?

Continue reading →

வாலிப வயோதிக அன்பர்களே…

பாலியல் குறித்து நம் மனதுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பயமும் தயக்கமும் மருத்துவப் போலிகளின் வியாபார மந்திரமாக இருக்கிறது. பாலியல் குறித்த புரிதல் இல்லாதவர்கள் ரகசியமாகவே இதற்கான வழி தேடுகின்றனர். பாலியல் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு பலர் அறியச் செல்வது கூட நம் மக்களுக்கு பதற்றம் அளிக்கிறது.
பாலியல் மருத்துவப் பிரச்சாரங்கள் ஊடகங்களின் வழியாக விளம்பரங்கள், இலவச ஆலோசனையாகவும் வழங்கப்படுகிறது. இதன் உண்மைத்தன்மை பற்றியெல்லாம் யோசிக்காமல் அவர்கள் சொல்வதை நம்பி, விளம்பரங்களில் வரும் கிரீம் மற்றும் மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதில் ஆயிரங்களில் பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழக்கின்றனர்.

Continue reading →

பொங்கலுக்குள் இடைத்தேர்தல்… ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்!

பொங்கலோ… பொங்கல்” என்று உள்ளே நுழைந்தார் கழுகார்.
“தீபாவளி பலகாரங்களே தீரவில்லை. அதற்குள் என்ன பொங்கல்?!’’“எல்லாம் காரணமாகத்தான். இந்த வருடப் பொங்கல், தமிழக அரசியல்வாதிகளுக்கு சவாலாகக்கூட மாறலாம். வடமாவட்டத்தைச் சேர்ந்த அந்த அமைச்சர் தனது வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘நாடாளுமன்றத் தேர்தலோடுதானே இடைத்தேர்தல் வரும் என்று பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் பார்த்து அசட்டையாக இருந்துவிட வேண்டாம். பொங்கலுக்கு முன்பாகவே தேர்தல் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’ என்றுச் சொல்லியிருக்கிறார். ‘சட்டம் தெரிந்தவர் சொல்லும்போது, சரியாகத்தான் இருக்கும்’ என்றபடி தொகுதிகளில் சீக்ரெட் திட்டங்களைச் செயல்படுத்த ஆளும் தரப்பு தயாராகிவிட்டதாம்.’’

Continue reading →

பெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது? – அதிர்ச்சியளிக்கும் காரணம்

சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தமுள்ள பெண்கள் புகைப்பிடித்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு ஆண்களைவிட அதிகமுள்ளதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
Continue reading →

வெற்றி புனையும் வேலே போற்றி!

நமசிவாயம்

`வந்த வினைகளும் வருகின்ற வல்வினை களும் கந்தனென்று சொன்னால் காணாமல் போகும்’ என்பார்கள் பெரியோர்கள். ஒருமுறை, தேவர்களும் கொடும்வினையைச் சந்தித்தார்கள். முக்கண் பரமனாம் சிவனாரை மதியாமல் தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டதால், பெரும் பாவத்துக்கு ஆளான தேவர்களைச் சூரபத்மன் வடிவில் வினைகள் சூழ்ந்தன.

அரிய வரங்களை பெற்ற சூரன் தேவலோகத் தைக் கைப்பற்றினான்; அகப்பட்ட தேவர்களை அடிமையாக்கினான். செய்வதறியாது திகைத்த தேவர்கள், சிவனாரைச் சரணடைந்தார்கள். அவர்களை ரட்சிக்க சிவம் சித்தம்கொண்டது; முருக அவதாரம் நிகழ்ந்தது.

Continue reading →