மருந்தாகும் உணவு – இஞ்சி லேகியம்

டுக்காய்க்கு அக நஞ்சு, சுக்குக்கு புற நஞ்சு’ என்பார்கள். இஞ்சியை, தோலைச் சீவிய பிறகே பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் பழமொழி இது. இஞ்சியைத் தோல் சீவாமல் உபயோகப்படுத்துவது தவறு. கொழுப்புச்சத்து மிக்க உணவுகள், மாமிச வகை உணவுகள் போன்றவற்றை உட்கொள்பவர்கள், செரிமானப் பிரச்னைகளைத் தவிர்க்க, சாப்பிடுவதற்கு முன்னர் சிறிதளவு இஞ்சி மற்றும் இந்துப்பு இடித்துச் சாப்பிடலாம்.

தேவையானவை:

இஞ்சி    :
100 கிராம்
பூண்டு    : 6 பல் உலர் திராட்சை,
வெல்லம்    : தலா கால் கப்
மல்லி (தனியா) : 2 டீஸ்பூன்
நெய் : 3 டேபிள்ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப.

 

செய்முறை: இஞ்சி, பூண்டைக் கழுவி, தோலுரித்து நறுக்கிக்கொள்ளவும். மிக்ஸியில் தனியாவைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு இஞ்சி, பூண்டு, உலர் திராட்சை, வெல்லம்,  சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியைவைத்து நெய், அரைத்த தனியா-பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். நெய் பிரிந்து வரும்வரை கிளறி இறக்கவும். ஆறியவுடன் ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும். எடுத்துச் சாப்பிடும்போது ஈரமில்லாத ஸ்பூனை உபயோகிக்கவும்.

 

பலன்கள்: ஆயுர்வேத சிகிச்சைகளின் பெரும்பாலான மருந்துகளில் சேர்க்கப்படும் இயற்கை மருந்துப் பொருள் இஞ்சி. வயிற்று உப்புசம், ஜலதோஷம், இரைப்பை வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு, இஞ்சிச் சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வருவது நல்ல தீர்வைத்தரும். இஞ்சியில் சூடு அதிகம் என்பதால் கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை அல்லது வேறு ஏதாவது நோய்க்காக சிகிச்சை மேற்கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு இஞ்சி சாப்பிடவும்.

%d bloggers like this: