Daily Archives: நவம்பர் 12th, 2018

குழந்தையும் உணவும்!

தாய்ப் பால் கொடுக்கும், பச்சிளங் குழந்தைகளின் அம்மாக்களிடம் கேட்டால், ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். தினமும் குழந்தை பால் குடிக்கும் நேரமும், அளவும் சரியான நேரத்தில், சரியான அளவில் இருக்கும். கடிகாரம் போலவே, ஒரு வினாடியும் தவறாமல் இது நடக்கும்.
அது, நள்ளிரவு 2:00 மணியானாலும் சரி, அதிகாலை, 6:00 மணியானாலும் சரி, பால் குடிக்கும் நேரத்தை மாற்றவே மாட்டார்கள்.
குழந்தை சரியான அளவு பால் குடித்த பின், அம்மா தொடர்ந்து பால் புகட்டினாலும், குழந்தை பாலை சப்பும், விளையாடும், கடிக்கும்… ஆனால், துளி கூட தேவைக்கு அதிகமாக அதன் வயிற்றிற்குள் போகாது.
தன் குட்டி வயிற்றிற்கு எவ்வளவு உணவு தேவை, எந்த நேரம் தேவை என்பது, குழந்தையின் உள்ளுணர்வில் இருக்கும் இயற்கையான விஷயம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்னை இருந்தாலோ, இந்த வழக்கம் மாறலாம்.
ஆனால், ஆரோக்கியமான குழந்தைக்கு, தனக்கு பால் தேவைப்படும் நேரம், அம்மாவுக்கு வசதியான நேரமா என்பதெல்லாம் தெரியாது. சரியான நேரத்தில், அதற்கு வயிற்றில் மணி அடிக்கும்; தேவைக்கு மேல், ஒரு சொட்டு கூட அதிகமாக இறங்காது.

பன்றிக்காய்ச்சலுக்கு அன்னாசி பூ மருந்து

* காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை எடுக்கலாமா?
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வைரஸ் கிருமிகள் வரத்து அதிகரிக்கும். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் உருவாகும். இதற்கு மூலிகை கஞ்சி, ஊறல் குடிநீர், பானக்கம் கொடுத்து தடுக்கலாம். காய்ச்சல் தீவிரமடைந்தால் சித்த மருந்துகளில் காய்ச்சலை குணப்படுத்தலாம்.

* டெங்கு காய்ச்சலால் உடலில் என்ன பாதிப்பு ஏற்படும், அதற்கு தீர்வு என்ன? Continue reading →

மன நோயை குணப்படுத்த மருந்துண்டு

* மன நோயின் அறிகுறிகள் என்ன?
மன நோய் என்பது தீவிரமான, அதி தீவிரமான, நடுத்தரமான, குறைவான என பல வகை உண்டு. சிந்தனையில் குழப்பம் என்பது தீவிர மன நோயின் அறிகுறி. சிந்தனையில் குழப்பம், செயலில் குழப்பம், எதற்கெடுத்தாலும் சந்தேகம், எதை பார்த்தாலும் நமக்கு விரோதமாக சதி நடக்கிறதோ என்ற அச்சம் ஏற்படுதல் மற்றும் அதி தீவிர வன்முறை எண்ணம் கொண்டிருத்தால் அதி தீவிர மன நோய் ஆகும். இது மன நோயாளியின் உயிருக்கே ஆபத்தாகி விடும்.
* மன நோய்க்கு வயதும் ஒரு காரணமா?

Continue reading →

குழப்பும் சந்தையில் லாபம் பெறும் வழிகள்!

ங்கு முதலீட்டாளர்களுக்கு இது ஒரு கடினமான காலம். பங்குச் சந்தை இரண்டு நாள்கள் ஏறுவதும், இரண்டு நாள்கள் இறங்குவதுமாக போக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. சந்தையின் உச்சத்தின்போது முதலீடு செய்திருப்பவர்கள் பற்றி இப்போது கேட்கவே வேண்டாம். கண்முன்னே, தமது முதலீடுகளின் சந்தை மதிப்பு சடசடவென்று சரிவது முதலீட்டாளர்களிடையே பெரியதொரு மனச்சோர்வை ஏற்படுத்தும்.
 
இன்னும் எத்தனை புள்ளிகள் சரியுமோ என்கிற கவலை ஒருபக்கம், குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகளைப் புதிதாக வாங்கலாமா, வாங்கினால் இன்னும் நஷ்டம் அடைய வேண்டியிருக்குமா என்கிற அச்சத்துடன்கூடிய ஆர்வம் மறுபக்கம்.

இதுபோன்ற குழப்பமான தருணங்களில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வழிமுறை கள் என்ன என்று பார்ப்போம்.

முதலீடு செய்யத் தொடங்குவோம்

Continue reading →

புற்றுநோய் – கேர் டேக்கர் கவனத்துக்கு..

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள், அவர்களைச் சிறப்பாக கவனித்துக்கொள்ளவேண்டியது அவசியம். ஆனால், இத்தகைய கவனிப்பின்போது சில நேரங்களில் அதிகப்படியான அலைச்சல், வேலை காரணமாக அவர்கள் சோர்வடைந்து மனதளவில் பாதிக்கப்படலாம். அப்படிப்பட்டச் சூழலில் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால் அழுத்தத்திலிருந்து விடுபட்டு, புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

Continue reading →

வாகன காப்­பீட்டை புதுப்­பிக்­கும் போது கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள்

பெரும்­பா­லா­னோர் புதி­தாக கார் அல்­லது பைக் வாங்­கும் போது, வாக­னத்­தின் விலை, மாடல் உள்­ளிட்ட அம்­சங்­களை அலசி ஆரா­யும் அள­வுக்கு அதற்­கான காப்­பீடு அம்­சங்­கள் அறி­வ­தில் அதிக கவ­னம் செலுத்­து­வ­தில்லை. வாகன காப்­பீட்டை புதுப்­பிக்­கும் போதும் இதே நிலை தான். வாகன காப்­பீட்டை புதுப்­பிக்­கும் போது மறக்­கா­மல் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் இவை:
டிஜிட்­டல் வழி
Continue reading →