மன நோயை குணப்படுத்த மருந்துண்டு

* மன நோயின் அறிகுறிகள் என்ன?
மன நோய் என்பது தீவிரமான, அதி தீவிரமான, நடுத்தரமான, குறைவான என பல வகை உண்டு. சிந்தனையில் குழப்பம் என்பது தீவிர மன நோயின் அறிகுறி. சிந்தனையில் குழப்பம், செயலில் குழப்பம், எதற்கெடுத்தாலும் சந்தேகம், எதை பார்த்தாலும் நமக்கு விரோதமாக சதி நடக்கிறதோ என்ற அச்சம் ஏற்படுதல் மற்றும் அதி தீவிர வன்முறை எண்ணம் கொண்டிருத்தால் அதி தீவிர மன நோய் ஆகும். இது மன நோயாளியின் உயிருக்கே ஆபத்தாகி விடும்.
* மன நோய்க்கு வயதும் ஒரு காரணமா?


பொதுவாக மன நோய் என்பது 14 முதல் 15 வயதில் இருந்தே துவங்குகிறது. ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் மன நோயில் இருந்து பூரணமாக குணப்படுத்தலாம்.
* மன நோயின் வகைகள் என்ன?
திட்டமிட்டே நமக்கு கெடுதல் செய்கிறார்கள், என்னை எல்லோரும் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள், எனக்கு யாரோ செய்வினை செய்து விட்டனர், மாந்திரீகம், மந்திரத்தால் யாரோ கெடுதல் செய்கின்றனர், நான் செல்லும் போது என்னையே வெறித்து பார்க்கிறார்கள் போன்ற சிந்தனை கொண்டிருப்பார்கள். தன்னை யாரோ பின் தொடர்கிறார்கள் என நினைத்து கொள்வர். இவர்கள் யாருடனும் பேச மாட்டார்கள் அல்லது அதிகம் பேசுவார்கள். வீட்டில் ஒரு வேலையும் பார்க்காமல் ஒரே இடத்தில் இருப்பர். என்னால் சாதிக்க முடியும்; என்னால் மட்டுமே அக்காரியத்தை செய்ய முடியும்; தன்னை மிஞ்சியவர் இல்லை, எனக்கு நிகர் நான் தான் என்ற எண்ணம் கொண்டிருப்பர்.
இதனால் முக்கிய நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் மூலம் காரியங்களை செய்து முடிப்பேன், என பேசுவர். இப்படி பேசி, பேசியே பிறரின் வெறுப்புக்கு ஆளாகுவர் அல்லது தான் அழகாக இல்லை; தனது மூக்கு எடுப்பாக இல்லை; நிறம் அதிகமாக உள்ளது அல்லது குறைந்த நிறமாக உள்ளது என நினைப்பது, தான் பேசுவதை யாரும் கேட்கவில்லை அல்லது தனது பேச்சுக்கு மதிப்பளிக்கவில்லை, என தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பர். உயர்வான, தாழ்வான எண்ணம் கொண்டோரும், வன்முறையில் ஈடுபடுவோர் அல்லது அதிக புத்துணர்ச்சியுடன் இருப்பவர்களால் அவர்களின் உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.
* பெற்றோர் மன நோயாளியாக இருந்தால் குழந்தைகளை பாதிக்குமா?
மன நோயாளி பெற்றோருக்கு நான்கு குழந்தைகள் இருந்தால், அதில் ஒரு குழந்தைக்கு மன நோய் பாதிப்பு ஏற்படலாம். மரபணு மன நோய்க்கு ஒரு காரணமாக உள்ளது. பெற்றோரை மன நோயாளியாக எந்த மரபணு மாற்றியதோ, அந்த மரபணுவை கண்டுபிடித்து அடுத்த தலைமுறைக்கு மன நோய் வராமல் தடுக்கும் மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்கப்படவில்லை.
* பாலியல் ரீதியான மன நோய் ஏற்படுமா
பாலியலில் அதிக ஆர்வம் அல்லது ஆர்வமின்மை, விந்தணு விரைவில் வெளியேறுதல், விந்தணு குறைவாக இருத்தல் போன்றவற்றால் மன நோய் ஏற்படலாம். தலை வலி, காய்ச்சல் போன்ற நோய்களை போல் மன நோயும் ஒரு சாதாரண நோய் தான். காய்ச்சலுக்கு டாக்டரை அணுகி மருந்து, மாத்திரை, ஊசி போட்டு கொள்வது போல் அனைத்து விதமான மன நோய்க்கும் மருத்துவரிடம் முறையான சிகிச்சை எடுத்து கொண்டால் குணமடையலாம்.
டாக்டர் டி.குமணன்
மன நல மருத்துவ நிபுணர், மதுரை
98431 65135

%d bloggers like this: