வாகன காப்­பீட்டை புதுப்­பிக்­கும் போது கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள்

பெரும்­பா­லா­னோர் புதி­தாக கார் அல்­லது பைக் வாங்­கும் போது, வாக­னத்­தின் விலை, மாடல் உள்­ளிட்ட அம்­சங்­களை அலசி ஆரா­யும் அள­வுக்கு அதற்­கான காப்­பீடு அம்­சங்­கள் அறி­வ­தில் அதிக கவ­னம் செலுத்­து­வ­தில்லை. வாகன காப்­பீட்டை புதுப்­பிக்­கும் போதும் இதே நிலை தான். வாகன காப்­பீட்டை புதுப்­பிக்­கும் போது மறக்­கா­மல் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் இவை:
டிஜிட்­டல் வழி

பல காப்­பீட்டு நிறு­வ­னங்­கள் டிஜிட்­டல் சேவையை அளிக்­கத்­து­வங்­கி­யுள்­ளன. வாகன காப்­பீடு பெறு­வது அல்­லது பாலி­சியை புதுப்­பிப்­பது போன்­ற­வற்றை இணை­ய­த­ளம் வாயி­லா­கவே மேற்­கொள்­ள­லாம். மின்­ வ­ணிக தளத்­தில் பொருட்­களை வாங்­கு­வது போலவே எளி­தா­னது. பாலிசி கட்­ட­ண­மும் குறை­வாக இருக்க வாய்ப்­பி­ருப்­ப­தால் டிஜிட்­டல் வழியை நாட­வும்.

ஆய்வு தேவை

முதல் முறை பாலிசி வாங்­கும் போது, வாகன நிறு­வ­னம் பரிந்­து­ரைத்த பாலி­சியை வாங்­கி­யி­ருக்­க­லாம். ஆனால் பாலி­சையை புதுப்­பிக்­கும் போது, அதன் அம்­சங்­களை பரி­சீ­லிக்க வேண்­டும். தேவை­யான அம்­சங்­களை தேர்வு செய்து, தேவை­யில்­லாத அம்­சங்­களை தவிர்க்க வேண்­டும். வீணான ரைடர்­களை விலக்கி விட­லாம்.

போனஸ் என்­னாச்சு

வாகன பாலி­சி­க­ளுக்கு ‘நோ-கிளைம்’ போனஸ் அம்­சம் பொருந்­தும். பாலிசி காலத்­தில் எந்த கோரிக்­கை­யும் வைக்­கப்­ப­டா­விட்­டால் அதற்­காக ‘நோகி­ளைம்’ போனஸ் அளிக்­கப்­ப­டு­கிறது. இது பிரீ­மி­யம் மீதான தள்ளு­ப­டி­யாக வழங்­கப்­படும். 5 ஆண்­டு­களுக்கு கோரிக்கை இல்லை எனில், இது 50 சத­வீ­த­மா­க­வும் இருக்­க­லாம். இந்த போனசை பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

தாம­தம் வேண்­டாம்

பாலி­சி­களை குறித்த காலத்­தில் புதுப்­பிப்­பது முக்­கி­யம். இல்லை எனில், காப்­பீடு நிறு­வ­னம் வாக­னத்தை பார்­வை­யிட்ட பின்­னரே பாலி­சியை புதுப்­பிக்­கும். இத­னால் பிரீ­மி­யம் அதி­க­மா­க­லாம். அது மட்­டும் அல்ல நோ கிளைம் போன­சை­யும் இழக்க நேரி­ட­லாம். எனவே, பாலிசி காலம் முடி­வ­தற்கு முன் அதை தவ­றா­மல் புதுப்­பிக்க வேண்­டும்.

திருட்டு தடுப்பு சாத­னம்

உங்­கள் வாக­னத்­தில் திருட்டு தடுப்பு சாத­னத்தை பொருத்­து­வது அவ­சி­யம். இது வாக­னம் திருட்டு போகா­மல் தடுக்க உத­வும் என்­ப­தோடு, பாலிசி தொகை­யை­யும் குறைக்க உத­வ­லாம். காப்­பீட்டு நிறு­வ­னங்­கள், திருட்டு தடுப்பு சாத­னம் இருந்­தால் அதற்­கான சலு­கையை அளிக்­கின்­றன.

%d bloggers like this: