உங்களின் காதலிக்கோ(அ) மனைவிக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்…!

நம்மை நேசிக்கும், காதல் செய்யும் ஒவ்வொருவரின் மீதும் நாம் அளவுகடந்த அன்பு நிச்சயம் வைத்திருப்போம். அவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என்கிற பல ஆசைகளை வைத்திருப்போம். இப்படிப்பட்டவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்தால் நம்மால் நிச்சயம் தாங்கி கொள்ள முடியாது.

பொதுவாக பெண்களுக்கு ஏற்படுகின்ற உடல் அளவிலான மாற்றங்களை அவர்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால், இவை அவர்களின் உயிருக்கே பேராபத்தை தர கூடியது. எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் உங்களின் தாயையோ (அ) காதலியையோ (அ) மனைவியையோ மருத்துவரிடம் உடனே அழைத்து செல்ல வேண்டும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

வெவ்வேறு அமைப்புகள்..!

இங்குள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் வெவ்வேறு உடல் அமைப்புகள் உள்ளன. அதே போன்று ஆணுக்கான உடல் அமைப்பும் பெண்ணுக்கான உடல் அமைப்பும் பல்வேறு மாறுதலுடன் உள்ளது. பெண்ணின் உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களை அவர்கள் சாதாரணமாக எடுத்து கொள்கின்றனர். ஆரம்ப நிலையில் இந்த அறிகுறிகளை கண்டறிந்தால் எளிதில் உங்களின் அன்பிற்குரியவர்களை காப்பாற்றி விடலாம்.

இவ்வளவு முடிகளா..?

உங்களின் அன்பிற்குரியவர்களின் உடலில் முடி அதிகம் வளர்ந்தால் அதை கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள். ஏனென்றால், தலைமுடியை தவிர முகங்களில் அல்லது உடலில் அதிகமாக முடி வளர்ந்தால் இது ஹார்மோன் பிரச்சினையாகும். இது மலட்டு தன்மையை அதிகரிக்க கூடும். அத்துடன் மார்பக புற்றுநோயையும் ஏற்படுத்தும்.

மார்பக அளவு மாறுதலா..?

உங்களின் அன்பிற்குரியவர்களின் மார்பகங்களில் வலி அல்லது மாற்றங்கள் தென்படுகிறதா என்பதை அவர்களிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், மார்பகங்களில் ஒன்று பெரிதாகவும் மற்றொன்று சிறியதாகவும் இருந்தால் மார்பக புற்றுநோயிற்கான அறிகுறியாகும். பெரும்பாலான பெண்கள் இதனை கவனிப்பதில்லை.

எவ்வளவு நாட்கள்..?

மாதவிடாய் காலம் முடிந்த பிறகும் உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு உதிர போக்கு இருந்தால் கட்டாயம் இதனை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இவை கர்ப்பப்பையில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே, இது போன்று இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

அடிக்கடி சிறுநீர் கழித்தலா..?

அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அவை கிட்னியில் ஏற்பட்டுள்ள பாதிப்பாக இருக்க கூடும். மேலும், பெண்களின் பிறப்புறுப்பில் ஏதேனும் தொற்றுகள் இருப்பதிலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். 10 முறைக்கு மேல் சிறுநீர் கழித்தால் பல வித பிரச்சினைக்கு இது வழி வகுக்கும். எனவே, ஜாக்கிரதையாக இருங்கள்.

எப்போதும் பசியின்மையா..?

அதிக சோர்வாகவும், எப்போதும் பசிக்கவில்லை என்றே சொல்கின்றார்கள் என்கிறார் அவர்களுக்கு தைராய்டு சுரப்பி சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். இது போன்ற நிலை உங்கள் அன்பிற்குரியர்களுக்கு இருந்தால் உடனடியாக பரிசோதித்து கொள்ள சொல்லுங்கள்.

இவ்வளவு முடி கொட்டுகிறதா..?

ஆண்களை போலவே பெண்களுக்கும் இந்த முடி கொட்டும் பிரச்சினை அதிகமாகவே உள்ளது. பெண்களுக்கு முடி கொத்து கொத்தாக கொட்டினால் அது புற்றுநோயிற்கான அறிகுறியாக இருக்கலாம். அல்லது டெஸ்டோஸ்டீரான் அளவு உடலில் அதிகமாகி விட்டது என்ற எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.

எடை அதிகரிப்பா..?

உடல் எடை உடனே கூடினால் அவை ஹார்மோன்களின் பிரச்சினையாக இருக்கும். குறிப்பாக ஈஸ்ட்ரோஜென், கார்டிசோல், இன்சுலின் போன்ற முக்கிய ஹார்மோன்களின் சமநிலை தவறினால் உடல் எடை சட்டென கூடி விடும். இதனை கண்டு கொள்ளாமல் இருந்து விடாதீர்கள்.

அடிக்கடி தலைவலியா..?

அடிக்கடி தலைவலி ஏற்படுவதை பலர் சாதாரணமாக எடுத்து கொள்வார்கள். இந்த நிலை பல நாட்கள் நீடித்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். இல்லையென்றால், மூளை அல்லது தண்டு வடத்தில் பாதிப்புகள் அதிகமாக கூடும்.

ஞாபக மறதியா..?

உங்களின் அன்பிற்குரியவர்கள் அடிக்கடி எல்லாத்தையும் மறந்து விடுகின்றாரா..? அப்போது அவர்களின் கவனம் சிதற தொடங்குகிறது என அர்த்தம். மேலும், இது மூளையின் பாதிப்பாக இருக்க கூடும். இதனால் குறுகிய காலத்தில் நடந்த நிகழ்வுகளை அவர்கள் மறந்து விட கூடும்.

தூக்கமில்லையா..?

உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு இரவில் தூக்க முடியவில்லை என்றால் இவை ஹார்மோன்களின் மிக கோளாறாக இருக்கும். பெண்களுக்கு இது போன்று ஏற்பட்டால் சாதரணமாக எடுத்து கொள்ளாமல் மருத்துவரை அணுகுங்கள். இல்லையேல் பெரிய விளைவை சந்திக்க நேரிடும்.

மேற்சொன்ன அறிகுறிகள் உங்களின் அன்பிற்குரியவர்களிடம் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று மகிழ்வுடன் வாழுங்கள்.

%d bloggers like this: