Advertisements

Daily Archives: நவம்பர் 19th, 2018

பாயும் ஸ்டாலின்… பதறும் குடும்பம்! – தி.மு.க கூட்டணி கணக்கு…

மெல்லிய சாரலில் தலையைச் சிலுப்பியபடியே வந்த கழுகார், “ம் ஐப்பசியே முடிந்துவிட்டது. அடைமழை வந்தபாடில்லை. ஏதோ கஜா புயல் புண்ணியத்தில் சாரலாவது விழுகிறது. அதுதான் நனைந்துகொண்டே வந்தேன்’’ என்று குஷிபொங்கச் சொன்னவர், ‘லேப் டாப்’பை ஆன் செய்தார்.
‘‘நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தி.மு.க இறங்கிவிட்டது. தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஓரணியில் திரள்கின்றன. இந்த அணியுடன் ஜி.கே.வாசன், ஜவாஹிருல்லா, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய தலைவர்களும் தோழமை உணர்வுடன் செயல்பட்டுவருகிறார்கள். தி.மு.க தலைமையிலான கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளன.”“ஓஹோ!’’

Continue reading →

Advertisements

ஆண்களே..! நீங்கள் மலட்டு தன்மையாக உள்ளீர்கள் என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்..!

புள்ளி விவரம்..!

மலட்டு தன்மையை பற்றி எல்லா வித காலகட்டத்திலும் பல வகையான புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 15 முதல் 20 சதவீத தம்பதியினர் இந்த மலட்டு தன்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இது உலக மக்கள் தொகையில் சற்றே அதிகமானதாகும்.
Continue reading →

இந்த மூன்று பொருளையும் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் உங்களை நெருங்காது…

இன்று உலக சர்க்கரை நோய் தினம். உலக அளவில் இன்று அனைவரையும் அச்சுறுத்தும் விஷயமாக இருப்பது இந்த சர்க்கரை நோய் தான். ஏனென்றால் சர்க்கரை வந்துவிட்டாலே அடுத்தடுத்து ஒவ்வொரு நோயாக மாரடைப்பு வரை கொண்டு வந்து விட்டுவிடும்.
Continue reading →

வாட்ஸ்அப், ஸ்கைப்பிற்குப் புதுக் கட்டுப்பாடுகள்… ட்ராயின் முடிவு சரியா?

வாட்ஸ்அப், வீசாட், ஸ்கைப் போன்ற OTT சேவைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக திட்டமிட்டு வருகிறது ட்ராய். இது எதுமாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

வாட்ஸ்அப், ஸ்கைப், ஹைக் போன்ற OTT பிளாட்ஃபார்ம் சேவைகளுக்குத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இருப்பதுபோலவே புதுக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது ட்ராய். இதுதொடர்பாக கடந்தவாரம் Consultaion Paper-ஐ வெளியிட்டிருக்கும் ட்ராய், தற்போது நிறுவனங்களின் கருத்துகளுக்காகக் காத்திருக்கிறது. ஒருவேளை OTT பிளாட்ஃபார்ம்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வாட்ஸ்அப்பிலிருந்து ஃபேஸ்புக் மெசஞ்சர் வரை அனைத்து ஆப்களிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும். வாட்ஸ்அப் போலவோ, ஹைக் போலவோ புதிதாக இனி எந்தவொரு ஆப்பும் வரமுடியாத நிலைகூட வரலாம். எதற்காக இப்படியொரு முடிவை எடுக்கவிருக்கிறது ட்ராய்?

நெட் நியூட்ராலிட்டியில் தொடங்கிய பிரச்னை!

Continue reading →